புதன், 8 மே, 2013

Aanmiga Websites

 
 
http://pureaanmeekam.blogspot.in

சனி, 21 மே, 2011

பிரபஞ்சம் என்பது என்ன?

ஆரம்ப காலங்களில் மனிதன் தான் வாழும் இடத்தையும் தனக்கு மேல் உயரே நீண்டு சென்ற ஆகாயத்தையும் மட்டுமே பிரபஞ்சம் என்று கருதி வந்தான். ஆகாயம் என்பது கூட பெரிய மலைகளுக்குச் சற்று மேலே எட்டி விடும் தூரத்தில் தான் அமைந்திருப்பதாக அவனுக்குப் பட்டது. எனவே ஆதி கால மனிதனின் பிரபஞ்சம் என்பது குறுகலான ஒரு எல்லைக்கு உட்பட்டதாக இருந்தது. ஆனால் காலம் செல்லச் செல்ல மனிதனின் அறிவு விரிந்தது. அதனால் பிரபஞ்சம் பற்றின அவனது கருத்துக்களும் கூட மாறிக் கொண்டே வந்தது.பிரபஞ்சம் என்பது உண்மையில் எல்லாவற்றையும் உள்ளடக்கியதாகும். நாம் வாழும் பூமி, சூரியக் குடும்பம், பல கோடி விண்மீன்கள், பல கோடி காலக்சிகள், குவாசர்கள் என்று பிரபஞசம் என்பது எல்லாவற்றையும் தன்னுள் கொண்டுள்ளது. பிரபஞ்சத்தைப் பற்றி மனிதனின் அறிவு இன்னும் விரிந்து கொண்டே தான் இருக்கிறது.பிரபஞ்சம் என்பது மனித அறிவுக்கு இன்னும் கூட சவாலாகவே உள்ளது. பிரபஞ்சத்தில் உள்ள பல்வேறு உடல்களைப் பற்றின மனிதனின் அறிவு விரிவடைந்தாலும் கூட, மனிதனின் கற்பனைக்கு எட்டாத அளவு அது பெரியதாக இருப்பதால், அவனால் பிரபஞ்சத்தை முழுவதுமாக அறிய முடியவில்லை. பூமி தான் பிரபஞ்ச மையம் என்றும், விண்ணில் காணப்படும் எல்லா உடல்களுமே பூமியையே சுற்றி வருவதாகவும் கருதிய காலம் மாறி, பூமி என்பது பிரபஞ்சக் கடலில் ஒரு சிறு துளிதான் என்று விஞ்ஞானிகள் உணர்ந்தனர்.

வெள்ளி, 22 ஏப்ரல், 2011
































































































உருத்திராட்சமும்! மருத்துவமும்!

உருத்திராட்ச மணிகளைத் தரும் உருத்திராட்ச மரம் என்பது ஒரு மூலிகைத் தாவரம். சித்த, ஆயுர்வேத மருத்துவங்களில் இவை மருந்துப் பொருட்களாக பயன் படுத்தப் படுகின்றன. மிகவும் அரிதான சில தகவல்களை மட்டும் இங்கே தொகுத்து பகிர்ந்திருக்கிறேன்.
உருத்திராட்ச மரத்தின் பழமானது கடினமான ஓட்டுடன் கருநீலமாய் இருக்கும் என முந்தைய பதிவுகளில் பார்த்தோம். இதன் உள்ளே இருக்கும் சதைப் பகுதியானது புளிப்பான சாறு நிறைந்திருக்கும். மூளையில் உள்ள திசுக்கள் பாதிக்கப் படுவதால் உருவாகும் “காக்காய் வலிப்பு” என்கிற epilepsy க்கு இந்த பழத்தின் சாறு அருமருந்தாக கூறப் படுகிற்து. மேலும் cough, bronchitis, nerve pain, migraine போன்ற வியாதிகளுக்கு நல்ல பலனை தருகிறது.
ஒருமுக உருத்திராட்ச மணியை உடலில் அணிவதன் மூலம் ஆஸ்த்துமா, எலும்புருக்கி நோய், மூட்டுவலி, பக்கவாதம், கண்களில் ஏற்படும் பிரச்சினைகளின் தீவிரத்தை தணிக்க முடியும்
இருமுக உருத்திராட்ச மணியை உடலில் அணிவதன் மூலம் தீக்காயங்களின் பாதிப்பில் இருந்து விடுபடலாம் என கூறப்பட்டிருக்கிறது. மேலும் கவனசிதறல், மன அழுத்தம், குழந்தைபேறு இல்லாதவர்கள் இருமுக மணியை உடலில் அணிவதன் மூலம் நல்ல பலன் பெறமுடியும்.
மூன்று முக மணியினை அணிவதால் ஆயுதங்களினால் ஏற்படும் காயங்களின் பாதிப்பினை குறைக்கலாமாம். மேலும் தாழ்வு மனப்பான்மை, எதிர்மறை சிந்தனையுடைய்வர்களுக்கு நல்ல பலனை அளிக்குமாம்.
நான்கு முக உருத்திராட்ச மணியை உடலில் அணிவதன் மூலம் இருமல் தொல்லைகளில் இருந்து தீர்வு பெறலாம். மேலும் இரத்த ஓட்டம் சிற்ப்பாகும்.
ஐந்துமுக உருத்திராட்ச மணியை உடலில் அணிவதன் மூலம் உடல்பருமன் பிரச்சினைகள் மற்றும் இதயக் கோளாறு உடையவர்களுக்கு நல்ல பலனைத் தருமாம்.
ஆறுமுக உருத்திராட்ச மணியை உடலில் அணிவதன் மூலம் குழந்தையின்மை, வலிப்பு மற்றும் பேச்சாற்றல் திறன் பாதிக்கப் பட்டவர்களுக்கு நல்ல பலனைத் தரும்.
ஏழுமுக உருத்திராட்ச மணியை உடலில் அணிவதன் மூலம் மூச்சுக் கோளாறு மற்றும் கால்களில் பாதிப்புடையவர்களுக்கு நல்ல பலனைத் தரும்.
எட்டுமுக உருத்திராட்ச மணியை உடலில் அணிவதன் மூலம் வயிறு தொடர்பான பிரச்சினைகள், தோல்வியாதிகளுக்கு நல்ல தீர்வு கிடைக்கும்.
ஒன்பதுமுக உருத்திராட்ச மணியை உடலில் அணிவதன் மூலம் தன்னம்பிக்கை பெருகி உடல் ஆரோக்கியம் மிளிரும்
பத்துமுக உருத்திராட்ச மணியை உடலில் அணிவதன் மூலம் உறுதியான மனநலம் வாய்க்கும்.
பொதுவில் உருத்திராட்ச மணிகள் தங்களை சுற்றியுள்ள வெப்பத்தை கிரகித்துக் கொண்டு சுற்றுப் புறத்தினை குளிர்விக்கும் தன்மையுடைவை. இதனை நம் உடலில் அணிவதால் தேகம் குளிர்ச்சியாகும் என கூறப் படுகிறது. நம் துறவிகள் ஏராளமான உருத்திராட்ச மணிகளை அணிந்தன் பின்னால் இத்தகைய அறிவியல் இருந்திருக்கக் கூடும்.
நாம் அருந்தும் நீரில் உருத்திராட்ச மணியை ஐந்து நிமிடம் ஊற வைத்து அந்த நீரைப் பருக உயர் குருதி அழுத்தம் கட்டுக்குள் வருமாம். தீராத காய்ச்சல் உள்ளவர்களுக்கு பழைய உருத்திராட்ச மணியை தேனில் உரைத்துக் கொடுக்க காய்ச்சல் குறையுமாம். இதைப் போலவே உருத்திராட்சக் கொட்டையினை குடிக்கும் நீரில் ஐந்து நிமிடம் ஊற விட்டு அந்த நீரில் சிறிது மஞ்சள் தூளை சேர்த்துக் கலக்கி அருந்தினால் எத்தகைய இருமல் மற்றும், வாந்தி தணியுமாம்.