சனி, 11 ஏப்ரல், 2009

ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் ஸ்தோத்ரம்

வஜ்ர நாகாய வித்மஹே; தீஷ்ண தம்ஷ்ட்ராய தீமஹி; தந்நோ நாரசிம்ஹ ப்ரசோதயாத்!ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் ஸ்ரீ மந்த்ர ராஜபத ஸ்தோத்ரம்:
ஸ்ரீ ஈச்வர உவாச:-
வ்ருத்தோத் புல்ல விசாலாக்ஷம் விபக்ஷக்ஷய தீக்ஷ¢தம்! நிநாத த்ரஸ்த விச்வாண்டம் விஷ்ணும் உக்ரம் நமாம்யஹம்!!
ஸர்வை ரவத்யதாம் ப்ராப்தம் ஸபலௌகம் திதே: ஸ¤தம்! நகாக்ரை: சகலீசக்ரே யஸ்தம் வீரம் நமாம்யஹம்!!
பதா வஷ்டப்த பாதாளம் மூர்த்தா விஷ்ட த்ரிவிஷ்டபம்! புஜ ஓம்ப்ரவிஷ்டாஷ்ட திசம் மஹா விஷ்ணும் நமாம்யஹம்!!
ஜ்யோதீம் ஷ்யர்கேந்து நக்ஷத்ர ஜ்வலநாதீன் யநுக்ரமாத்! ஜ்வலந்தி தேஜஸா யஸ்ய தம் ஜ்வலந்தம் நமாம்யஹம்!!
ஸர்வேந்த்ரியை ரபி விநா ஸர்வம் ஸர்வத்ர ஸர்வதா! யோ ஜாநாதி யோ நமாம்யாத்யம் தமஹம் ஸர்வதோமுகம்!
நரவத் ஸிம்ஹவச்சைவ யஸ்ய ரூபம் மஹாத்மன:! மஸா ஸடம் மஹா தம்ஷ்ட்ரம் தம் ந்ருஸிம்ஹம் நமாம்யஹம்!!
யந்நாம ஸ்மரணாத் பீதா: பூத வேதாள ராக்ஷஸா:! ரோகாத்யாஸ்ச ப்ரணச்யந்தி பீஷணம் தம் நமாம்யஹம்!!
ஸர்வோபி யம் ஸமார்ச்ரித்ய ஸகலம் பத்ர மச்னுதே! ச்¡¢யா ச பத்ரயா ஜுஷ்ட: யஸ்தம் பத்ரம் நமாம்யஹம்!! ஸாக்ஷ¡த் ஸ்வகாலே ஸம்ப்ராப்தம் ம்ருத்யும் சத்ரு கணான்விதம்! பக்தாநாம் நாசயேத் யஸ்து ம்ருத்யும் ம்ருத்யும் நமாம்யஹம்!!
நமஸ்காராத்மகம் யஸ்மை விதாய ஆத்ம நிவேதனம்! த்யக்தது: கோகிலாந் காமாந் அச்நந்தம் தம் நமாம்யஹம்!!
தாஸபூதா: ஸ்வத: ஸர்வே ஹ்யாத்மான: பரமாத்மன:! அதோஹமபி தே தாஸ: இதிமத்வா நமாம்யஹம்!!
சமங்கரேணா தராத் ப்ரோக்தம் பதாநாம் தத்வ நிர்ணயம்! த்ரிஸந்த்யம்ய: படேத் தஸ்ய ஸ்ரீர்வித் யாயுஸ்ச வர்த்ததே!!
**********
மஹா நாராயண உபநிஷத்: அகோர மந்த்ரம்:
அகோரேப்ப்மோஸத கோரேப்ப்யோ கோர கோர தரேப்ப்ய : சர்வேப்ப்யஸ்
சர்வ சர்வேப்ப்யோ நமஸ்தே அஸ்து ருத்ர ரூபேப்ப்ய:
இதை அனுதினமும் சொல்லி வர துஷ்ட, பேய், பிசாசுத் தொல்லைகள், ஏவல் செய்வினைகள், துன்பங்கள் நீங்கும்.

வீரத்துறவி

ஜனவரி 12. 1863-ம் ண்டில் பிறந்த விவேகானந்தர் இளமையிலேயே பகுத்தறிவும், ஆராய்ச்சி மனப்பான்மையும் கொண்டவராக விளங்கினார். கடவுளைக் காண வேண்டும் என்ற தேடல் இறுதியில் குருதேவர் ராமகிருஷ்ண பரமஹம்சரின் சீடராக அவரை ஆக்கியது. இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் செய்து மக்கள் படும் துயரங்களை நேரில் கண்ட விவேகானந்தர், அவர்களது துயர் தீர்ப்பதையே தமது வாழ்நாள் லட்சியமாகக் கொண்டார். அதற்காகவே உழைத்தார். தமது வாழ்க்கை முழுவதையும் தேச நலனுக்காகவே அர்ப்பணித்தார். அமெரிக்க நாட்டுக்குப் பயணம் செய்து சர்வ சமய மகாநாட்டில் கலந்து கொண்டார். தனது பேச்சால் அங்குள்ளவர்களைக் கவர்ந்தார். அதன் பின் ஐரோப்பாவின் பல பகுதிகளுக்கும் பயணம் செய்து, இந்தியாவின் புகழைப் பரப்பினார். ராமகிருஷ்ண மடத்தை நிறுவி அதன் மூலம் மக்கள் தொண்டாற்றினார். 1902 ம் வருடம், ஜூலை மாதம் நான்காம் தேதி விவேகானந்தர் மகா சமாதி ஆனார் என்றாலும் அவர் விட்டுச் சென்ற சிந்தனைகள் என்றும் நினைவு கூரத் தக்கவை.
சுவாமி விவேகானந்தரின் பிறந்த நாள் கொண்டாடப்படும் இந்த மாதத்தில் (ஜனவரி 12) அவரது சிந்தனைகள் சிலவற்றைப் பார்ப்போமா?
 ஏழைகளும் வறியவர்களும் படும் துன்பத்தையும் துயரத்தையும் கண்டு யார் உள்ளம் கசிந்து உருகுகிறதோ, யாருக்கு அவர்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணம் உடனடியாக ஏற்படுகிறதோ அவர்களே உண்மையான தேச பக்தர்கள். தேச சேவை செய்வதற்குத் தகுதியானவர்கள். அவர்களே மகாத்மாக்கள்.
 கடவுள் ஒவ்வொரு ஜீவனிலும் இருக்கிறார். இதைத் தவிட தனியாக வேறு ஒரு கடவுள் இல்லை. மக்களுக்கு ஒருவன் செய்யும் சேவை அந்த மகேசனுக்கே செய்யும் சேவையாகும். இதுவே உண்மை.
 யார் ஒருவர் எதைப் பெறுவதற்கு தகுதியாக இருக்கிறாரோ அதை அடையவிடாமல் தடுப்பதற்கு, பிரபஞ்சத்தில் உள்ள எந்த சக்தியாலும் முடியாது.
 உண்மை, தூய்மை, சுயநலமின்மை இது மூன்றும் யாரிடமெல்லாம் இருக்கிறதோ அவர்களை நசுக்கக் கூடிய சக்தி விண்ணுலகு, மண்ணுலகு என எந்த உலகிலும் இல்லை. ஏன் பிரபஞ்சமே எதிர்த்து நின்றாலும் கூட அவர்களை வெல்ல முடியாது.
 உங்கள் வாழ்க்கை சிறந்ததாகவும், தூய்மை உள்ளதாகவும் இருந்தால் மட்டுமே நீங்கள் வாழும் சமுதாயம் தூய்மை உடையதாக இருக்கும். கவே முதலில் உங்களை நீங்கள் எண்ணத்தாலும் செயலாலும் தூய்மைப் படுத்திக் கொள்வது அவசியம்.
 சிந்தித்து செயலாற்றத் தெரிந்தவன் அதன் வழிச் செல்கிறான். மற்றவன் விதியைக் குறை சொல்கிறான். நம் விதியை நாமே தான் வகுத்துக் கொள்கிறோம். கவே அதற்குப் பிறரைத் தூற்றுவதில் பயனில்லை.
 நீ கடவுள் நம்பிக்கை உடையவனோ, அல்லது இறைப்பற்று இல்லாத நாத்திகனோ, எதுவாக இருந்தாலும் சரி, உன் சுக துக்கங்களையும் சுயநலத்தையும் மறந்து உன் கடமைகளை நீ சரிவரச் செய்து வந்தால் போதும். அதுவே மிகப் பெரிய தேச சேவையாகும்.
 இல்லறமோ துறவறமோ எதை வேண்டுமானாலும் நீ தேர்ந்தெடு. னால் இல்லறத்தில் இருக்கும் போது பிறருக்காக வாழ். துறவியாகிவிட்டால் பணம், பந்தம், புகழ், பதவி என அனைத்திலிருந்தும் விலகி இரு.
 துன்பங்களைக் கண்டு அஞ்சாதே. பெரிய மரத்தின் மீது புயல் காற்று மோதத் தான் செய்யும். கிளறி விடுவதால் நெருப்பு நன்கு எறியத் தான் செய்யும். தலையில் அடிபட்ட பாம்பு முன்னிலும் வேகமாக படமெடுக்கத் தான் செய்யும். கவே துன்பங்களைக் கண்டு துவண்டு விடாமல், உறுதியாய் எதிர்த்து நில். உன்னால் எதுவும் முடியும்.
 எப்பொழுதும் விரிந்து மலர்ந்து கொண்டிருப்பது தான் வாழ்க்கை. மாறாக சுருங்கி, மடங்கிக் கொண்டிருப்பதே மரணமாகும். தன்னுடைய சுயநலத்தை மட்டும் கவனித்துக் கொண்டு, சுக போகத்துடன் வாழும் ஒருவனுக்கு நரகத்திலும் இடம் கிடைக்காது.
 மற்றவர்களுக்கு நன்மை செய்வதே தர்மம். தீமை செய்வதே பாவம். வலிமையும் ண்மையுமே வீரம். பலவீனமும் கோழைத்தனமுமே மரணம். மற்றவர்கள் மீது அன்பு செலுத்துவதே புண்ணியம். பிறரை வெறுத்து ஒதுக்குவதே பாவம்.

ஆவியுலக அனுபவங்கள்

எனக்கு ஆவிகளுடனான பழக்கம் மிகவும் குறைச்சல். ஆனால், நிறைவானது. முதன் முதலாக எனக்குப் பேய்களை அறிமுகம் செய்தவர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம். தினமும் காலை, மாலை, இரவு என்று மூன்று வேளையும் விவிதபாரதி கேட்கும் நல்ல வழக்கம் இருந்தது. 'வேப்பமர உச்சியில் நின்னு... பேயண்ணு ஆடுதுன்னு சொல்லிவைப்பாங்க! உன் வீரத்தைக் கொழும்பிலேயே கிள்ளி வைப்பாங்க!' என்று அவ்வப்போது பாடுவார். அவரின் மற்ற பாட்டுக்களான 'தூங்காதே... தம்பி தூங்காதே...' மாதிரி இந்தப் பாடலிலும் மெட்டை ரசித்துவிட்டு எதிர்ப்பதத்தை எடுத்துக் கொண்டோம். எப்பொழுது ஒன்று இல்லை என்று நிரூபிக்கவில்லையோ, அப்பொழுதே அது இருக்கிறது என்று கொள்ளப்படும் என நண்பர்கள் வேதம் ஓதப் பாடலை ஓரங்கட்டிவிட்டு பிரம்மராக்கதரையும், ஜெகன்மோகினியையும் தேட ஆரம்பித்தோம். அழகான ராட்சசிகளாகப் பாரகனில் ஜெயமாலினி ஆடினார். விட்டலாசார்யா மட்டும் ஆங்கிலப் படம் எடுத்திருந்தால் பில்லியனார் ஆகி இருப்பார். கற்பனை வளத்தில் 'லார்ட் ஆ·ப் திரிங்ஸை'யும், கதை வளத்தில் 'ஹாரி பாட்டரை'யும், கவர்ச்சி வளத்தில் 'பேசிக் இன்ஸ்டிங்க்ட்'டையும் மிஞ்சும் படங்கள் மூலம் நட்புகரமான பேய்களின் அறிமுகம். அப்படியே 'பட்டணத்தில் பூதம்', 'அலாவுதீனும் அற்புத விளக்கும்' என்று பெரிய எழுத்தாளரை சந்திக்கும் சராசரி வாசகன் போன்ற ஆவலுடன் என்றாவது ஒரு நாள் அவர்களுடன் கைகுலுக்க வேண்டும் என்று அவா கொண்டிருந்தேன். பேந்தப் பேந்த விழிக்கும் மோகனின் 'பிள்ளை நிலா' அப்பொழுது வெளிவந்தது. கல்யாணமானால் வீட்டில் 'பேய்' இருக்கும் என்று சிலர் சொல்லித் தெரியுமானதால், அந்தப் படம் ரொம்ப பயமுறுத்தவில்லை. நான் வசித்த மந்தவெளி-மயிலாப்பூர் மார்க்கத்தில் புகழ்பெற்ற வதந்தி உலாவி வந்தது. 'அட்மிரால்டி ஹோட்டல்' என்னும் விடுதியின் வாயிலில் உள்ள மரத்தில் குட்டிப் பிசாசு இருப்பதாகவும், மரத்தை உற்றுப் பார்த்தால் விநோதமாக சிரிக்கும் என்று சக நான்காம் வகுப்பு மாணவர்கள் கிலியுடன் விவரித்தார்கள். டி. ராஜேந்தரின் கவர்ச்சிக் கன்னிகள் நடித்த திரைப்படங்கள் பார்க்கும் கபாலி தியேட்டர், பி.டி.சாமி முதல் ஜாவர் சீதாராமன் வரை உள்ள லெண்டிங் லைப்ரரி என பல அன்றாடத் தேவைகளுக்கு ட்ரஸ்ட் தெருக்களை நம்பியும், குறுக்குத் தெருவில் போதி மர வானத்தை அளந்து கொண்டும் கவலையற்றுத் திரிந்த எனக்கும் பயம் தொற்றிக் கொண்டது. மிகவும் ஜாக்கிரதையாக அட்மிரால்டி ஹோட்டலை தவிர்த்து வேறு வழிகளில் சென்று வந்தேன். விதி வலிது என்பதால் நண்பர்கள் சவால் விடுத்தார்கள். மூவரும் அட்மிரால்டி ஹோட்டலுக்கு செல்வது; எதிர்ப்புறம் நின்று கொண்டு மரத்தை உற்று நோக்குவது; எவர் ஜெயிக்கிறாரோ, அவர் கோடி வீட்டு உமாவுக்கு போட்டியின்றி ஹிந்தி கற்றுக் கொடுக்கலாம் என்று முடிவாயிற்று. அட்மிரால்டிக்கு அரை கிலோமீட்டர் இருக்கும்போதே ஒருவன் ஓடிப்போனான். நானும் ராஜுவும் மட்டும் சைட்டடிக்க சென்றோம். என் கண்களுகு வாட்ச்மேன் எங்களை உற்று பார்ப்பதும் 'என்ன வேணும்டா' என்று குச்சியைத் தூக்கிக் கொண்டு வருவதும் தெரிய, ராஜுவைத் தேடினால் தூரத்தில் புள்ளியாக ஓடிக் கொண்டிருந்தான். ராஜுவுக்கும் எனக்கும் ஒரு வாரம் காய்ச்சல். அவன் எனக்கு பேய் பார்த்த வைபவத்தையும் அது கண்ணை மலங்க மலங்க விழித்ததையும், பின் அவனைப் பார்த்து அழ ஆரம்பித்ததையும் விவரித்தே எனக்குக் காய்ச்சல்; கொஞ்சம் வாட்ச்மேனின் கைங்கர்யமும் இருக்கலாம். அந்தப் பேய் சின்னக் குழந்தையாம்; ராஜுவிடம் சாக்லேட்டும் வீடுவீடாக வந்து விற்கப்படும் பிஸ்கட்டுகளும் கேட்டதாம். இடுப்புக்குக் கீழ் ஒன்றும் தெரியவில்லையாம். He is either a great story-teller or a master decptionist. வீட்டில் ஒரு நாள் இறந்த பாட்டியைக் கூப்பிட்டுப் பேசலாம் என்றார்கள். முதலிரவுக்குத் தயாராகும் போன-தலைமுறை தமிழ் கணவன் போல் ஒரு வித ஆர்வம் நிறைந்த தேடல் தோன்றியது. ஆசையாக தரையில் சாக்பீஸால் சதுரம் போட்டோம். சதுரத்துக்குள் A டு Z எழுதி எண்களும் எழுதி, கற்பூரம் ஏற்றி, தம்ளர் கவிழ்த்து, ·பேன் அணைத்து, மூவர் சத்தமாகக் கூப்பிட, ஒரு விரல் மட்டுமே தொட்ட லோட்டா அதுவாக விடுவிடுவென நகர்ந்தது. இதுதான் ஹிப்னோடிசமா, கடவுள் சக்தியா, சூட்சும உணர்வா, மனோபலமா என்று குழப்பமும் மிகுந்தது. பத்தாவது வகுப்பின் அறிவு கொண்ட அறிவியலின் கூறுகளைக் கொண்டு விதிகளையும் விடைகளையும் நிர்ணயிக்க முயன்றேன். என் மனதின் உட்கூறுகளில் ஒளிந்திருப்பதை எழுதிக் காட்டியது. உட்கார்ந்திருந்த அனைவரின் மனத்திரைகளையும், அவர்கள் உள்ளத்தில் உதித்தக் கேள்விகளுக்கு விடையும் தந்தது. ஆனால், சொர்க்கம், நரகம், மறுபிறவி, பாவம், புண்ணியம், அவர்கள் உலகத்தின் விவரிப்புகள், நெறிமுறைகள், வாழ்க்கை வகைகள் ஒன்றை குறித்தும் பதிலளிக்கவில்லை. மகாத்மாவும் ம.கோ.ரா.வும் அடுத்த லோகத்துக்கான கட்டத்தில் இருக்கிறார்களாம். தூரத்தில் இருந்துதான் பார்க்க முடியும். தினமும் பிரதோஷ காலத்தில் அனைவருக்கும் அட்டெண்டன்ஸ் என்று வாய் தவறியோ தவறாமலோ தொடர்ந்த பேச்சுவார்த்தைகளில் மூலம் கொஞ்சம் கறக்க முடிந்தது. கிட்டத்தட்ட இதே கருத்துகளைத் தாங்கி வந்த 'Defending Your Life' படத்தைப் பார்த்த பிறகு இயக்குநர் ஆல் ப்ரூக்ஸ் ஆவிகளைக் கலந்தாலோசித்து இருப்பார் என்றேத் தோன்றியது. அன்று கற்றுக் கொண்ட வித்தை கல்லூரியிலும் இன்று அன்றாட நிஜ வாழ்விலும் விதவிதமான பலன்களைக் கொடுத்திருக்கிறது. கல்லூரியில் நடிகர் முத்துராமனையும், கவிஞர் கண்ணதாசனையும், கூப்பிட்டு வித்தைகாரனாய பணிபுரிந்தேன். தோழிகளின் மறைந்த உறவினர்களை வரவழைத்து உரையாட வாய்ப்பு கொடுத்து புது ஸ்னேஹிதம் பிடித்துக் கொண்டேன். திருத்தப்பட்ட தாள்களின் மதிப்பெண்களை உடனுக்குடன் அறிவிப்பு கொடுத்து ஹாஸ்டல்வாசிகளின் நிம்மதியை இரண்டொரு நாள் முன்பே குறைத்து வயிற்றெரிச்சலை வாங்கிக் கொண்டேன். (சோகத்தைத் தீர்க்க 'ஜான்' டேனியலும், ஜானி வாக்கரும் அப்ஸொல்யூட்டாகக் கை கொடுக்க வந்தது தனி கதை). சமீபத்தில் விபத்தில் காலமான கணவரை, மனைவியுடன் பேச வைத்தது, கல்லூரி கால லூட்டிகளுக்கு நல்ல பிராயசித்தம். மகனும் மகளும் மனைவியும் தன் தந்தையுடன் கிட்டத்தட்ட இருப்பதை போலவே உணர்ந்தார்கள். அவருக்கு மட்டுமே தெரிந்த எ·ப்.டி., பங்குச் சந்தை போன்ற நிதி விவகாரங்களின் விவரங்களைத் தெரிந்து கொள்ள முடிந்தது. கணினியிலும், நோட்டுப் புத்தகங்களுமாக சிதறியிருந்த தகவல்களைத் எளிதில் திரட்ட முடிந்தது. ஒவ்வொரு முறையும் எண்ணையும் எழுத்தையும் சாக்பீஸால் எழுதுவது, அவை பாதி பேச்சில் பாதி காணாமல் போவது என்று சில தொல்லைகள் உண்டு. இன்னும் கொஞ்சம் அவர்களுடன் நெருங்கி விட்டால் இரவு தலைமாட்டில் உட்கார்ந்து கொண்டு கதைப்பார்கள் என்று சிலர் சொல்லியும் கேட்டிருக்கிறேன். இணையத்தில் நான் மேய்வது போல் இதற்கு அடிமையாகும் அபாயமும் உண்டு. போர்டுக்கு அடுத்தபடியான தனக்குள்ளே அழைத்துக் கொள்ளல், பேப்பரில் எழுத வைத்தல் போன்றவற்றின் தாக்கம் இன்னும் அதிகம் என்றும் பயமுறுத்துகிறார்கள். நல்ல பொழுதுபோக்காக இருக்கிறதே என்று நினைத்துக் கொண்டே போர்டு வாங்கிக் கொள்ளலாம் என்று கூகிளில் தேடியபோது, 'ஆவிகளுடன் பேசுவதற்கான போர்டு' என்று டாய்ஸ் ஆர் அஸ் விற்றது கண்ணில் பட்டது. ஆறு வயதுக்குக் கீழ் உள்ளவர்களுக்கு உகந்ததல்ல என்னும் எச்சரிக்கையுடன் இது குழந்தைகளுக்காக விற்கப்படுகிறது. 'Please grow up' என்று மனைவி சொல்ல தற்போது ஆவியுலகத் தொடர்புகள் அறுந்து போயின.

கல்லறைப் பாடம்

மற்றுமொரு நவம்பர் தினம். இதாகாவில் அக்டோபரிலேயே பனி கொட்டத் துவங்கி விடும். பனி என்றால் தமிழகத்தில் மார்கழி மாதத்தில் இரவில் குளிரும்போது பனி கொட்டுகிறது என்போமே, அந்த மாதிரியில்லை. உறைபனி. வெள்ளை வெளேரென்று உடைந்த ஐஸ் கட்டித்தூள் மேலிருந்து கொட்டும். கொட்டிய பனி குவிந்து தெருவில், தெருவோர நடைமேடையில், புல்வெளியில் என்று எங்கும் படர்ந்து வெள்ளைத்தோல் போர்த்தி எது தெரு, எது நடைமேடை என்று தெரியாமல் இருக்கும். மேலுள்ள ஐஸ் தூளுக்கடியில் கெட்டியாகிப் போன ஐஸ், கண்ணாடி போல் "ஸ்லீட்" என்று சொல்லக்கூடிய வழுக்கும் தரையாக இருக்கும். விவரம் தெரியாமல் காலை வைத்தால் தலை குப்புற விழ வேண்டியதுதான். வீசும் காற்றோடு நடுக்கும் குளிரோ பூஜ்யத்திற்குக் கீழே இருக்கும்.இதில் புகுந்து புறப்பட வேண்டுமென்றால் பிரத்யேகமாகத் தயாரிக்கப்பட்ட ஆடை, அணிகலன்கள் தேவை. முதலில் சாதாரண உள்ளாடைகள். அதன் மேல் வெப்ப உள்ளாடைகளை மேலுக்கும், கீழுக்கும் அணிய வேண்டும். இவை உடல் வெப்பத்தை முடிந்தவரை தேக்கி வைத்திருக்கும். பின்னர் எப்பொழுதும் அணியும் மேல்சட்டையும், கால்சராயும். அதன் மேல் கம்பளி அல்லது சின்தெடிக் ஸ்வெட்டர். அதன் மேல் 'டௌன் ஜாக்கெட்'. இந்த டௌன் ஜாக்கெட்டில் தைத்த சின்தெடிக் உறைகளில் வாத்துகளின் இறக்கைகள் நிரப்பப் பட்டிருக்கும். இயற்கையில் குளிரைக் காக்க உதவும் பொருள் செயற்கையாக மனிதனின் உதவிக்கு வருகிறது. காலில் கம்பளிக் காலுறை அணிந்து, அதன் மேல் சாதாரண பருத்திக் காலுறை அணிந்து அதன்மேல் வழுக்கி விழாத 'கிரிப்' உடைய நீண்ட ஷூ ஒன்றை அணிய வேண்டும். ஸ்லீட்டாக இருந்தாலும் ஒரேயடியாக வழுக்கி விடாமல் ஓரளவுக்கு சமாளித்து விடலாம். பனித்தூளும் காலுக்குள்ளே புகுந்து தொல்லை செய்யாது. கைகளில் தடித்த உறை அதன்பின். தலைக்குக் கம்பளியால் ஆன 'குரங்குத்தொப்பி'. அதன்மேல் டௌன் ஜாக்கெட்டின் முக்காடை எடுத்துப்போட்டுக் கொள்ள வேண்டும்.இவையனைத்தையும் போட்டுக் கொள்ளவே கிட்டத்தட்ட பத்து நிமிடம் பிடிக்கும். உறையிட்ட கைகளை டௌன் ஜாக்கெட்டின் பைகளுக்குள் விட்டுக் கொண்டு, பனிக்கரடி பனிமலைகளில் நடப்பது போல மெதுவாக உதிர்பனித் தரையில் நடக்க வேண்டும்.இவ்வளவுக்குப் பின்னும் வெளியே நீட்டிக் கொண்டிருக்கும் மூக்கு மரத்துப் போய் வலிக்கும்.இப்படிப்பட்ட அந்தக் காலை நேரத்தில் என் எடையில் 10 கிலோ கூடுதலாக பனிக்கு பயந்து ஆடை அணிந்து பல்கலைக் கழகத்துக்குச் செல்ல வேண்டியிருந்தது. சம்மர்ஹில் அப்பார்ட்மெண்ட்டிலிருந்து எல்லிஸ் ஹாலோ ரோட் வழியாகத் தியரி செண்டர் செல்ல வேண்டும். சாலை ஒரு கல்லைறை வளாகத்தைச் சுற்றிக் கொண்டு போகும். மூன்று கிலோமீட்டர்கள் நடக்க வேண்டும். கல்லறையின் நடுவே நடந்து போவதானால் ஒரு கிலோமீட்டர் குறையும்.எனக்கு சாவின் மேல் எப்பொழுதுமே பயம். சின்ன வயதிலிருந்தே எந்த சாவுக்கும் நான் போனதில்லை. என் தாத்தா, பாட்டி இறந்த போதும் பிறர் கண்காணிப்பில் விடப்பட்டு சாவை விட்டு விலகியே இருந்திருக்கிறேன். சாவு என்பது தீட்டு. விலகி இருக்க வேண்டும். சாவு என்பது அமானுஷ்யம். புரியாதது. புதிரானது. பயமூட்டக் கூடியது. உடல் எரிக்கப்படுகிறது, உடல் சிதைகிறது. எலும்புகள் சேகரிக்கப்படுகிறது. சாம்பல் தனியாக சேகரிக்கப்படுகிறது. உயிருடன் இருந்தவர் திடீரென்று சாம்பலாகவும், எலும்பாகவும், மிச்சம் மீதி சடங்குகளுக்காக வெளியே உலவும் ஆன்மாவாகவும் மாறுவது மனதில் பீதியைக் கிளப்புவது. அந்த ஆன்மா சொர்கத்துக்குப் போகப் போகிறதா, இல்லை நரகத்துக்குப் போய்த் திண்டாடப் போகிறதா என்பது தெரியாமலேயே, நன்மையே நடக்கும் என்று சடங்குகள் செய்யப்படுகின்றன. சடங்குகள் செய்ய வருபவரிடம் பேரம் பேசும்போதும் பயமே ஏற்படுகின்றது. இவர் பத்து ரூபாய் குறைந்து விட்டது என்று நம்மிடம் கோபம் கொண்டு மந்திரத்தைத் தவறாகச் சொல்லி நரகத்துக்கு அனுப்பி விடுவாரோ என்று திகில்.எக்ஸார்சிஸ்ட், ஓமன் போன்ற ஆங்கிலப் படங்களில் கெட்ட ஆவிகள் கல்லறையில்தான் சுற்றும். திடீரென்று எழுந்திருந்து ஊருக்குள் வந்து நாசத்தை உண்டு பண்ணும். இரத்தம், கோரச் சாவு, பழி வாங்கல், பீதி, ஓட்டம், கலக்கம், கவலை என்று ஏன் இந்த அமானுஷ்யங்கள், பிறர் வாழ்க்கையைச் சின்னாபின்னப் படுத்தி மகிழ்ச்சி கொள்ள வேண்டும். ஆங்கிலப் படங்களில்தான் என்றல்ல, இந்தியக் கதைகளிலும், கடவுள் வழிபாட்டு சுலோகங்களிலும்தான் பேய்கள், கொள்ளிவாய்ப் பிசாசுகள், புழக்கடை முனிகள், பிள்ளையைத் தின்னும் பிரம்ம ராட்சதர்கள், பில்லி, சூனியம் என்று அமானுஷ்யத்தை வைத்து எத்தனை எத்தனை?இதெல்லாம் வெறும் பொய்யா? காலம் காலமாக சொல்லப்பட்டு வந்தவைகளை மீறிப் பகுத்தறிவு திடீரென்று வந்து விடுமா? நான் எப்பொழுதும் அந்தக் கல்லறையை ஒட்டி, ஆனால் வெளியிலேயே நடப்பேன். கல்லறைக்கு நான்கு பக்கங்களிலும் சுவர்கள் கிடையாது. நெருக்கி எழுப்பப்பட்ட பைன் மரங்கள்தான் வேலி. சில இடங்களில் குட்டைச் சுவர் எழுப்பப் பட்டிருக்கும். கல்லறையில் உள்ளே தார்ச் சாலைகள் ஓடும். இரண்டு இடங்களில் பெரிய கம்பிக் கதவுகள் இருக்கும். உள்ளே போக ஒன்று, வெளியே வர மற்றொன்று. எப்பொழுதும் இந்தக் கதவுகள் பூட்டியே இருக்கும். ஏதேனும் சவ அடக்கம் நடைபெறும்போது மட்டும் இந்தக் கதவுகள் திறந்துவிடப்பட்டு, கார்கள் மற்றும் சவ வண்டிகள் உள்ளே வந்து போகும். இந்தக் கதவுகளைத் தவிர இரண்டு சிறு சுழல் கம்பி கேட்டுகள் உண்டு. இதில் மனிதர்கள் புகுந்து வெளி வரலாம். கல்லறை முழுவதும் புதைக்கும் இடங்களெல்லாம் புல் தரைகள். பல மரங்கள் நடப்பட்டு, வேனில் காலத்தில் பூக்கள் பூத்துக் குலுங்கும்போதும், இலைகள் உதிர்ந்து மொட்டை மரங்கள் பனிக்காலத்தை எதிர்நோக்கும் போதும், பனி கொட்டி கல்லறை முழுதும் வெள்ளையுடையில் காட்சியளிக்கும்போதும், மழைத் துளிகள் விடாமல் சொறியும்போதும் அந்தக் கல்லறை எப்பொழுதும், எல்லாக் காலங்களிலும் அமைதியாக, ஆனால் எனக்குள் உள்ளூர பயத்தைக் கொடுக்கக் கூடிய ஒரு கம்பீரத்துடன் இருக்கும்.ஒரு சில சவ அடக்கங்களை வெளியே போகும்போது பார்த்திருக்கிறேன். நின்று கவனிக்கவோ அல்லது உள்ளே போய்ப் பார்க்கவோ இதுவரை தைரியம் இருந்ததில்லை. ஐந்திலிருந்து பத்து பேர்தான் வந்திருப்பர். சவ வண்டி தனியாகத் தெரியும். அதிலிருக்கும் சவப்பெட்டி செத்தவரின் செல்வத்தைப் பொறுத்து அலங்காரத்துடனோ அல்லது சாதாரணமாகவோ இருக்கும். அதற்குமேல் பார்க்காமல் வேகவேகமாக அந்த இடத்தைக் கடந்து போய்விடுவேன்.அன்று காலை எனக்குள் என்னவோ தோன்றியது. இத்தனை குளிரில் ஆவிகள் தூங்கிக் கொண்டுதான் இருக்கும் என்ற நம்பிக்கையோ? இந்த வழுக்கும் தரையில், கனக்கும் உடையில் ஒரு கிலோமீட்டரைக் குறைத்து விடலாம் என்ற எண்ணமோ? சிறிது தயங்கினேன். பின்னர் சுழலும் கம்பி கேட்டைத் தள்ளிக் கொண்டு உள்ளே நடக்கத் தொடங்கினேன். உள்ளே செல்லும் சாலையை அப்படியே தொடர்வதுதான் சரி என்று தோன்றியது. சாலையை விட்டு விலகி நடந்தால் ஏதேனும் ஒருவரது சவப்பெட்டியைப் புதைத்ததன் மேல் கால்வைக்க வேண்டிவரும். அது அவரையும், அவரது உறவினரையும் அவமதித்ததாகலாம். தூங்கிக் கொண்டிருக்கும் ஆவிகள் எதனையும் ஏன் வீணாக உசுப்பி விட வேண்டும்? சாலை வளைந்து நெளிந்து, மேலும் கீழுமாக எழும்பியும் இறங்கியும் சென்றது. அப்பொழுதுதான் நான் அந்த வயதானவரைப் பார்த்தேன்.நான்கு சலவைக்கல் பதித்த உறங்கும் சவங்களிடத்தில் இருக்கும் ஒரு கான்கிரீட் பெஞ்சில் அவர் உட்கார்ந்திருந்தார். கிட்டத்தட்ட 70 வயதிருக்கலாம். கறுப்பு நிறத்தில் சூட் அணிந்திருந்தார். அதன் மேல் கறுப்பு நிறத்தில் ஒரு ஓவர்கோட் போட்டு பட்டன்களைப் போடாதிருந்தார். தலையில் பழுப்பு நிறத் தொப்பி அணிந்திருந்தார். அதில் பனி பெய்திருந்தது. ஓவர்கோட்டில் பனித்துளிகளும், உருகி வழியும் நீரும்."ஹல்லோ, இளைஞனே!""நற்காலையாகுக!" என்று சொல்லிவிட்டு சிறிது தயங்கியவாறே அவர் முன் நின்றேன்."இங்கு வந்து உட்காரு என்னருகே!"சென்று அவர் அருகே அமர்ந்தேன். சிறிது நேரம் நாங்கள் இருவரும் பேசவில்லை. எத்தனை நேரம் ஆகியிருக்கும் என்று எனக்குத் தெரியவில்லை. என் அலுவலகத்திற்கு நான் உடனடியாகப் போய் ஒன்றும் ஆகப் போவதில்லை. நான்கு வருடமாகச் செய்துகொண்டிருக்கும் பிஎச்டி ஒரு பனி கொட்டும் நாளில் முடிந்து விடப் போவதில்லை."இன்றுதான் என் மகன் இறந்த நாள். இன்றோடு இரண்டு வருடங்கள்.""ஓ, மிகவும் வருந்துகிறேன்.""அதோ, அதுதான் என் மகன். பக்கத்தில் அவனது மனைவி, அதற்குப் பக்கத்தில் அவர்களது சிறு மகள், இந்தப் பக்கம் என் மனைவி. அதற்கடுத்த இடம் எனக்காக நான் தேர்ந்தெடுத்திருக்கிறேன்."எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. முழுக் குடும்பமும் அங்கேயே புதைக்கப்பட வேண்டுமென்று அவர் முடிவெடுத்து அந்த இடத்தை முன்பதிவு செய்து வைத்திருக்கிறார். அவருக்கு முன்னதாக அவரது நெருங்கிய உறவினர்கள் அனைவரும் சினிமா தியேட்டரில் இருக்கைகளை ஆக்ரமிப்பது போல் தங்கள் தங்கள் இடத்தில் அமர்ந்துள்ளனர். இந்தக் கிழவரும் தன்நாள் என்று வருமோ என்று தனக்குரிய இடத்தின் அருகிலேயே உட்கார்த்திருப்பவர் போலத் தோன்றியது.என் முகத்தைப் பார்த்தது, "ஏன் உன் முகத்தில் பயம்?" என்றார்."அய்யா, இதுதான் நான் கல்லறை ஒன்றின் வழியே வருவது முதல் தடவை.""அதற்கா பயம்? இங்கிருப்பது என் குடும்பத்தவர்கள், அது போன்ற மற்ற மனிதர்கள். இன்னும் சில நாட்கள் கழித்து நானும் இங்குதான் புதைக்கப்படுவேன்."நான் ஒன்றும் சொல்லவில்லை."உங்கள் நாட்டில் இறந்தவர்களை என்ன செய்வீர்கள்?""எங்கள் குடும்பங்களில் எரித்து விடுவோம். எங்கள் நாட்டில் சிலர் புதைக்கவும் செய்வார்கள்.""மண்ணிலிருந்து உருவாக்கப்பட்டவர்கள் மண்ணுக்குள்ளேயே போகட்டும் என்பது எங்கள் மதம். நாங்கள் உயிரற்ற உடலை எரித்துச் சிதைக்க மாட்டோம். நான் ஒரு தீவிர கிறித்துவன் அல்லன். ஆனாலும் என்னைப் பொறுத்தவரை அந்த உயிர் இருந்தவரை எவ்வளவு புனிதம் அந்த உடலுக்கு உண்டோ, அந்தப் புனிதம் உயிர் போன பின்னும் தொடரும். எனது உறவு இங்கு பெட்டிகளில் உள்ள பதப்படுத்தப்பட்ட உடல்களோடும் தொடர்கிறது. இவர்களிடத்தில் எனக்கு எந்த பயமும் இல்லை. இங்குள்ள உயிர் நீத்த எவரிடமும் எனக்கு பயம் இல்லை. உனக்கும் பயம் இருக்க வேண்டிய அவசியமும் இல்லை."நாங்கள் இருவரும் கனத்த மௌனத்தோடு அங்கே உட்கார்ந்திருந்தோம். மதியம் ஆகியிருக்கும். கொஞ்சமாக வெய்யில் அடிக்க ஆரம்பித்தது. குளிர் ஒன்றும் குறையவில்லை, வெளிச்சம் மட்டும்தான். அந்தப் பெரியவர் எழுந்திருந்தார்."எனக்கு இன்று மதியம் வகுப்பு ஒன்று எடுக்க வேண்டும். நீ எந்தத் துறையில் படிக்கிறாய்?""நான் இயந்திரப் பொறியியல் துறையில் ஆராய்ச்சி செய்கிறேன்.""அப்படியா, நான் இருப்பது வேதியியல் துறையில். ஆராய்ச்சியெல்லாம் சின்ன வயதுக்காரர்களுக்கு. நான் இப்பொழுது நேரத்தைச் செலவு செய்வதெல்லாம் துவக்க நிலை மாணவர்களுடன்.""உங்கள் பெயர் என்ன என்று அறிந்து கொள்ளலாமா பேராசிரியரே?"சொன்னார். சொல்லி விட்டு எழுந்து நடக்கத் தொடங்கினார். மெதுவாக என் பார்வையிலிருந்து மறைந்தார். எனக்கு முதலில் அவரது பெயர் விளங்கவில்லை. பிறகுதான் மெதுவாக உறைக்க ஆரம்பித்தது. இவருக்கு ____ வருடத்தில் வேதியியல் துறையில் நோபல் பரிசு கிடைத்ததல்லவா?அன்று முதல் அங்கிருந்த மற்றும் இரண்டு வருடங்களிலும் நான் அந்தக் கல்லறை வழியாகத்தான் நடக்கத் தொடங்கினேன். அங்கு புதைக்கப்பட்ட அனைவரும் எனக்கு நண்பர்களாகவே இருந்தனர்.

அமானுஷ்யம்’ பகுப்புக்கான தொகுப்பு

Out of body experince
முதலில் இந்த Out of body experince என்றால் என்ன என்பது பற்றித் தெளிவாக அறிந்து கொள்ளவேண்டியது அவசியமாகிறது. இது இறப்பிற்குப் பின் உயிரின் அனுபவத்தைக் குறிக்கிறதா என்றால்.. இல்லை. நாம் உயிரோடு இருக்கும் போதே, நம் உடலை விட்டு சற்று நீங்கிய நம் ஆத்மாவின் அனுபவம் அல்லது பயணமே Out of body experince என்று கருதலாம்.
சரி! உடலுக்கு வெளியே ஆத்மாவின் பயணங்களும் அனுபவங்களும் எங்ஙனம் சாத்தியம்? அப்பொழுது இந்த உடலின் நிலை என்ன?. நாம் இறந்து விடுகிறோமோ?… இல்லை… இயக்கமில்லாமல் இருக்கின்றோமா?. உயிர் வெளியேறுவது உண்மையா?. அப்பொழுது வேறு ஏதாவது உயிர் இந்த உடலை ஆக்ரமித்து விட்டால்….????
உண்மையில் இது நிஜமா? இல்லை.. கற்பனையா?… ஒரு வேளை வெறும் கனவா?
முனிவர்கள், ரிஷிகள் போன்றோருக்கு மட்டும் தான் இவ்வகை அனுபவங்கள் ஏற்பட்டுள்ளதா? இல்லை. இந்த மாதிரி அனுபவங்கள் மனிதர்கள் எல்லோருக்கும் சாத்தியமா? உயிர்கள் என்றால் மிருகங்களும் தானே அவற்றில் அடக்கம். அவற்றுக்கும் இவ்வகை உணர்வுகள், அனுபவங்கள் ஏற்படுமா?…. கேள்விகள்… இவற்றைப் பற்றியெல்லாம் விரிவாகப் பார்ப்பதற்கு முன்னால்.. நாம் முதலில் நம் உடலையும், உயிரையும் பற்றித் தெளிவாக அறிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.
முதலில் நாம் உடல் என எண்ணும் இந்த சரீரம் வெறும் ஒரே உடல் மட்டுமன்று. இதனுள் மொத்தம் மூன்று அடுக்குகள் உள்ளன. சொல்லப் போனால் மூன்று வகை சரீரம் நமக்குள் உள்ளது என்பதே உண்மை.
அவை1. தூல உடல் (அன்னமய கோசம்)2. காரண உடல் (ஆனந்தமய கோசம்)3. சூட்சும உடல் (பிராணமய, விஞ்ஞானமய, மனோமயகோசம்) -என்பனவாகும்.
தூல உடலானது நம் கண்ணுக்குப் புலப்படக்கூடிய ஒன்றாகும். நம் கண்ணால் மற்றவரின் தூல உடலைப் பார்க்க இயலும். ஆனால் சூட்சும உடலைக் காண இயலாது. இது நம்முள் ஒளிரூபமாக வியாபித்து இருக்கக் கூடிய ஒன்றாகும். சித்தர்கள், முனிவர்கள் போன்றோரால் இந்த சூட்சும உடலையும், அது வெளிப்படுத்தும் ஒளியை வைத்து, அந்த ஆத்மாவின் உண்மை பரிபக்குவ நிலையையும் அறிய இயலும்.
பொதுவாக, கர்மாவாலும், பாவச் சுமையாலும் பாதிக்கப்பட்ட ஆத்மாக்கள் கருமை நிற ஒளியை வெளிப்படுத்தும். புண்ணிய ஆத்மாக்களின் உடலில் இருந்து வெண்மை நிற ஒளிவரும். கோள்களையும், வினைகளையும் வேரறுத்த, தேவ நிலை ஆன்மாக்கள் பொன்னிற ஒளியை வெளிப்படுத்தும் என்பதே உண்மை. இவற்றைச் சாதாரண மனிதர்களால் கண்டறிய இயலாது.
காரண உடல் என்பது காரண, காரியங்களுக்காக, நம்மை செயல்படத் தூண்டி, கர்ம வினைப் படி நம்மை வழிநடத்துவதாகும். காரண உடலே தூல உடலை செயல்படுத்துகிறது. அனைத்து வகைக் காரண காரியங்களுக்கும் காரணமாகிறது. இந்த காரண உடல் பற்றி மனிதன் முழுமையாக அறிந்து கொள்ளவில்லை என்றாலும் இது பற்றி ஔரளவேனும் அவன் அறிந்திருக்கிறான் என்பது உண்மை.
ஆனால் சூட்சும உடலை ஒருவன் இந்தத் தூல, காரண உடல் நிலையைத் துறந்து அல்லது முற்றுமாக அவை பற்றி அறிந்த பின்னரே அறிய முடியும். இந்த சூட்சும சரீரத்தையும் துறப்பதே ஜீவன் முக்தி.
மேலும் இந்தத் தூல உடல் மூலம் தனது கர்மவினைகளைத் தீர்த்துக் கொண்டு, பின்னர் எஞ்சிய சூட்சும சரீரத்தால், சூட்சும உலகங்களில் சஞ்சரித்து பரிபக்குவ நிலை எய்திய பின்னரே ஜீவன் முக்தி எனப்படும் பிறவா நிலையை எய்த முடியும்.
விளக்கமாகச் சொல்லப் போனால், இந்த சூட்சும உடலே ஒருவனது அந்தராத்மா. அதற்கு எல்லாமும் தெரியும். இப்பிறப்பு, இதற்கு முற்பிறப்பு என அனைத்தையும் அறியும். ஆனால், சாதாரண நிலையில் மனிதனால் இது பற்றி எதுவும் அறிய இயலாது. அது இவனுள் மறைந்து, அனைத்தையும் ஔர் சாட்சியாய் பார்த்துக் கொண்டிருக்கிறது. தூல மற்றும் காரண உடல்களின் செயல்பாட்டால் கர்மவினைகளுக்கும் காரணமாகிறது.
ஒருவன் பிரம்ம நிலையை அல்லது முற்றும் துறந்த ஞான நிலையை அடையும் பொழுது தனது சூட்சும உடலைத் தானே காண்கிறான். இதற்கு நமது யோக முறைகளும் பெருமளவு உதவுகின்றன. தியாச·பிகல் கூறும் ஏழு உலகங்களுக்கும், ஏழு அம்சங்களைக் கொண்டுள்ளதாகக் கூறப்படும் மனிதருக்கும், யோக சாத்திரங்களின் ஏழு சக்கரங்களுக்கும் ஒரு விதமான தொடர்பு உள்ளது என்பதே உண்மை.
பொதுவாக தூல உடல் அனுபவம் என்பது நனவு நிலையில் புலன்கள் மற்றும் எண்ண ஔட்டத்தினால் ஏற்படுவது. ஆனால் சூட்சும உடல் அனுபவம் என்பது கனவா இல்லை நனவும் கனவுமற்ற விழிப்பு நிலையில் ஏற்படுகிறதா என்பதைத் தெளிவாக அறிந்து கொள்ள இயலுவதில்லை. ஒருவிதமான குழப்பம் நிலவுவதாலும், ஆழ்மனம் அதனைக் கனவு என நினைப்பதாலும், அவற்றின் படிமங்கள் நினைவில் இருந்து புறமாக இருப்பதாலும் மனிதனால் இது பற்றித் தெளிவாக அறிந்து கொள்ள இயலுவதில்லை.
Out of body experince பற்றிய ஒருவரின் அனுபவம்…
”நான் சிறு பெண்ணாயிருந்த போது (பதிமூன்று வயதிருக்கும்) ஒருவருட காலமாக, இரவு படுக்கச் சென்றவுடன், நான் உடலிலிருந்து வெளிப்படுவதாகத் தோன்றும். வெளிவந்தவுடன் வீட்டின் மேலும், பிறகு நகரத்தின் மேலும் மிக உயரத்தில் சென்று விடுவேன். அச்சமயங்களில் நான் ஒரு தூய பொன்னாடையை அணிந்தவளாகவும், மிக உயரமானவளாகவும் என்னைப் பார்ப்பேன். நான் உயரே போகப் போக, எனது ஆடையானது பெரிதாய் விரிந்து, வட்டமாகி என்னைச் சுற்றி விரிந்து, ஒரு கூரையைப் போல நகரைக் கவிந்து கொள்ளும். பிறகு அனைத்துப் பக்கங்களிலிருந்தும் ஆண்களும், பெண்களும், குழந்தைகளும், முதியோர்களும், நோயாளிகளும், துயரமடைந்தோரும் எனப் பலரும் பல திசைகளிலிருந்தும் அந்த ஆடைகளின் எல்லைக்குள் வந்து, என்னிடம் தங்களது குறைகளை முறையிடுவதைக் கண்டேன். அவர்கள் வேண்டுதலுக்கு செவிசாய்த்து, அவ்வாடையானது அவர்களுக்கு ஆறுதல் அளிப்பது போல், உயிர்ப்புடனும், துடிப்பனும் நீண்டு சாந்தி அளித்தது. அவர்களும் தங்கள் குறைகளும் துயரங்களும் நீங்கப் பெற்று, மனத் திருப்தியுடன் தத்தம் உடல்களுக்குத் திரும்புவதைக் கண்டேன்.”