வெள்ளி, 30 ஜனவரி, 2009

சிறப்பிதழ்கள்

http://www.adhikaalai.com/
http://www.thamizmanam.com/
http://www.thenkoodu.com/
http://www.thiratti.com/
http://blogintamil.blogspot.com/
http://www.maatru.net/
http://gilli.in/
http://kathambamaalai.wordpress.com/
http://satrumun.com/
http://thatstamil.oneindia.in/
http://www.dinamalar.com/
http://www.bbc.co.uk/tamil/
http://msn.webdunia.com/tamil/index.தடம்
http://in.tamil.yahoo.com/
http://www.tamiloviam.com/unicode/main.ஆசப்
http://www.maraththadi.com/
http://www.nilacharal.com/
http://www.thozhi.com/
http://www.mazhalaigal.com/
http://tamilbookmarket.com/
http://tamil.kanimai.com/
http://www.nilacharal.com/

http://www.sanimoolai.blogspot.com/

http://tamil.kanimai.com/

http://www.vadakkuvaasal.com/

http://www.viruba.com/

http://www.keetru.com/

http://www.keetru.com/visai/index.ப்ப்

http://pm.tamil.net/akaram_uni.ஹ்த்ம்ல்

http://projectmadurai.tamil.net/1

http://www.sarav.net/

http://www.andhimazhai.com/

http://pamaran.wordpress.com/

http://charuonline.com/

http://jannal.blogspot.com/

http://jeyamohan.in/

http://www.sudhanganin.blogspot.com/

http://www.writerpara.net/

http://sramakrishnan.com/

http://eramurukan.in/

http://blog.tamilsasi.com/

http://mugunth.tamilblogs.com/

http://vinaiooki.blogspot.com/2007/05/blog-post_20.ஹ்த்ம்ல்

http://classroom2007.blogspot.com/2007/05/blog-post.ஹ்த்ம்ல்

http://pkp.blogspot.com/

செவ்வாய், 27 ஜனவரி, 2009

பதினெட்டு சித்தர்கள் கோவில்


சித்தர் என்ற சொல்லுக்கு சித்தி பெற்றவர் என்றும், சிந்தை உடையவர் என்றும் பொருள்.சிவத்தை நினைத்து அகக்கண்ணால் கண்டு, தியானித்து தரிசனம் செய்து, ஆத்ம சக்தியை எழுப்பி, செயற்கரிய காரியங்களை செய்வது சித்த மூர்த்திகளது செயலாகும். இச் செயலை சித்து விளையாட்டு என்று ஆன்மீக ஞானிகள் கூறுவர்.இன்று பல பிரசித்தி பெற்ற ஸ்தலங்களில் மூலவருக்கு அருகிலேயே சித்தர்கள் சன்னதி இருக்க காணலாம். சித்தர்கள் யோக சமாதி அடைந்த இடங்கள் மகிமை பெற்ற திருத்தலங்களாக விளங்குகின்றன. அந்த சன்னதியில் மனதை ஒருமுகப்படுத்தி இறைவனிடம் வேண்டினால் நினைத்தது நடக்கும், செய்வது வெற்றி பெறும் என்பது ஆன்மீகவாதிகளின் அசைக்க முடியாத நம்பிக்கை.இன்று பழனிமலையின் பிரபலமும், சக்தியும் உலகம் அறிந்த ஒன்றாகும். அந்த ஸ்தலத்தில் நவபாஷானத்தால் குமரன் வடிவேலனை உருவாக்கியவர் யோக சமாதியை விரும்பிய போகர் என்ற சித்தரே.அதே போன்று இன்று உலக மக்கள் திருப்பதி மலை நோக்கி சென்று வருவதற்கும் அந்த ஸ்தலம் உலக பிரசித்தி பெற்றதற்கும் காரணம் அங்குள்ள கொங்கணவர் என்ற சித்தரே. அப்படிப்பட்ட சித்தர்களில் 18 பேர் தலையாய சித்தர்கள் ஆவர்.அருளும், அன்பும், சிவமும், அளவற்ற சக்தியையும் ஒருங்கே பெற்றுள்ள அந்த 18 சித்தர்கள் இன்றும் அருள் தரும் சன்னதிகளின் விவரம் இதோதிருமூலர் - சிதம்பரம்இராமதேவர் - அழகர்மலைஅகஸ்தியர் - திருவனந்தபுரம்கொங்கணர் - திருப்பதிகமலமுனி - திருவாரூர்சட்டமுனி - திருவரங்கம்கரூவூரார் - கரூர்சுந்தரனார் - மதுரைவான்மீகர் - எட்டிக்குடிநந்திதேவர் - காசிபாம்பாட்டி சித்தர் - சங்கரன்கோவில்போகர் - பழனிமச்சமுனி - திருப்பரங்குன்றம்பதஞ்சலி - இராமேஸ்வரம்தன்வந்திரி - வைதீஸ்வரன்கோவில்கோரக்கர் - பொய்யூர்குதம்பை சித்தர் - மாயவரம்இடைக்காடர் - திருவண்ணாமலைசக்தி மிகுந்த சித்தர்களை வணங்கி அருள் பெறுக. நலம் பெறுக.

வெள்ளி, 23 ஜனவரி, 2009

பணவீக்கம் என்றால் என்ன? எதை வைத்து முடிவு செய்கிறார்கள்? எதனால் வருகிறது?

பணவீக்கம் என்றால் என்ன? எதை வைத்து முடிவு செய்கிறார்கள்? எதனால் வருகிறது?``காற்று ஊத ஊத, பலூன் வீக்கம் அடைகிற மாதிரி, விலைகள் வீங்குவதுதான் பணவீக்கம். இன்பிளேஷன்.முன்பு 100 ரூபாய் கொடுத்து வாங்கிய பொருட்களின் விலை 105 ஆகிவிட்டால், பணவீக்கம் ஐந்து சதவிகிதம் அதிகரித்திருக்கிறது. அதே பொருட்களை வாங்குவதற்கு 109 ரூபாய் தேவைப்பட்டால், பணவீக்கம் ஒன்பது சதவிகிதம். மாதம் ரூ.3000 செலவு செய்யும் குடும்பத்திற்கு பணவீக்கம் 9% ஆனால், செலவிற்கு ரூ.3270 அதாவது ரூ.270 கூடுதலாக தேவைப்படும். இல்லாதவர்கள் எப்படிச் சமாளிப்பது என்கிறீர்களா? இரண்டே வழிகள்தான். ஒன்று, வாங்கும் அளவைக் குறைத்துக்கொள்வது (அடிக்க வராதீர்கள்). அல்லது கடன் வாங்குவது ( இதற்கு அதுவே மேலோ!).தற்சமயம் கடந்த மூன்றரை ஆண்டுகளில் இல்லாத அளவாக 8சதவிகிதத்துக்கும் அதிகமாக இருக்கிறது பணவீக்கம். நம் நாட்டில்தான் என்றில்லை. இப்போது உலகெங்கிலுமே விலைவாசி உயர்வுதான் பெரிய பிரச்னை. சீனா 8.7%, ரஷ்யா 12 % க்கும் மேல், சவுதி அரேபியா 9.8%, ஹாங்காங், சிங்கப்பூர் எல்லாம் 6% க்கும் மேல். இவர்களை எல்லாம் தூக்கிச் சாப்பிடுவதுபோல, வியட்நாமின் பணவீக்கம் 25%.

வாடிக்கையாளர்கள்

கர்சன்பாய் படேல வாஷிங்பவுடர் நிர்மாவின் அதிபர்.வாடிக்கையாளர்கள் என்பவர்கள் மூன்று வகையினர். முதலாமவர்கள் நம்மிடமிருந்து விலகிப் போனவர்கள். இவர்கள் ஏன் விலகினார்கள் என்று ஆராய்ந்தால் நல்ல தீர்வுகள், விடைகள் கிடைக்கும். அடுத்தவர்கள் நம்முடன் இருப்பவர்கள். இவர்களை எப்போதும் தக்க வைத்துக் கொள்வதில் குறிப்பாக இருக்க வேண்டும். இவர்கள் நம்மிடம் இருக்கிறார்கள் என்பதால் நமக்கு ஆணவம், அலட்சியம் வந்து விடக் கூடாது. இது வந்தால் நம்மிடமிருந்து விலகி விடுவார்கள். மூன்றாமவர்கள், இனி வரப் போகிறவர்கள். இவர்கள் மீது அதிகமாகக் கவனம் செலுத்த வேண்டும். இவர்களை எப்படிக் கவரலாம், எப்படி இழுத்துப் போடலாம் என்பதில் நாம் கவனம் செலுத்த வேண்டும்.இப்படி கவனம் செலுத்தினால் வாடிக்கையாளர்களை அப்படியே நம்மிடம் கட்டிப் போட்டுவிடலாம்.

காலண்டர்

பூமி இரவு பகலாய் மாறி 365 நாட்கள் 5 மணி நேரம் 48 நிமிடங்கள் 46 நொடிகளில் சுற்றி நாட்களின் கணக்குகளைக் கொண்டதே காலண்டர் என்கிடறோம். இது விவசாயத்தில் பயிரிட, அறுவடை செய்ய, மழை வருவதையறிய பெரிதும் பயன் படுகிறது மற்றும் தொழில் சம்பந்தங்களிலும் மத விசேஷங்களிலும். அன்றாட வாழ்வியலுக்கும் இன்றியமையாததாகிறது. தற்போது நாம் பயன் படுத்துவது ”கிரிகோரியன்” முறையாகும். இது சூரியனை அடிப்படையாக வைத்து கணக்கிடப்படுகிறது. வருடத்தில் ஒரு நாள் விகிதத்தை சரி செய்ய 4 வருடத்திற்கு ஒரு நாள் பிப்ரவரி மாதம் 29 நாளாக கணக்கிடப்படுகிறது. இது லிப் வருடமட எனப்படும். (இஸ்லாமிய தேதிகள் சந்திரனை வைத்து கணக்கடப்படுகிறது.)

வியாழன், 15 ஜனவரி, 2009

வியதீபாதம்


மார்கழி மாதத்தில் திருமாலை வழிபடும் வைகுந்த ஏகாதசித் திருநாளைப்போல, சிவபெருமானை வழிபடும் ஆதிரைத் திருநாளும் மகா வியதீபாதமும் சிறப்பு வாய்ந்தவை. மார்கழி மாதப் பௌர்ணமியும் திருவாதிரை நட்சத்திரமும் கூடி வரும் தினம் ஆதிரைத் திருநாள் ஆகும். வியதீபாதம் என்பது இருபத்தேழு வகை யோகங்களில் ஒன்று. நட்சத்திரங்கள் இருபத்தேழு இருப்பதுபோல யோகங்களும் இருபத்தேழு உண்டு. இந்த எல்லா யோகங்களும் ஒவ்வொரு மாதமும் ஏற்படும். ஆனால் இந்த யோகங்களில் ஒன்றான வியதீபாதம் மார்கழி மாதத்தில் ஏற்படும்போது இதற்கு "மகா வியதீபாதம்' என்று பெயர். ஆனால் நாள்தோறும் ஏற்படும் சித்த, அமிர்த, மரண யோகங்கள் இந்த இருபத்தேழு யோகங்களில் சேராது.பொதுவாக ஒவ்வொரு புண்ணிய தினத்தை ஒட்டி ஒவ்வொரு க்ஷேத்திரத்தில் பிரம்மோற்சவம் செய்வார்கள். இவ்விதம் திருவாதிரையை ஒட்டி சிதம்பர க்ஷேத்திரத்திலும், மகா வியதீபாதத்தை ஒட்டி திருவாவடுதுறைக்கு ஒரு மைல் தெற்கே உள்ள திருக்கோழம்பம் என்ற தலத்திலும் பிரம்மோற்சவம் நடந்து வருகிறது."கோவில்' என்ற சிறப்புப் பெயர் தில்லைக்கும் திருவரங்கத்துக்கும் மட்டுமே உண்டு. உபநிஷத்துக் களால் உணர்த்தப்பட்ட விராட் புருஷனின் இதய மத்தியில் சிதம்பர க்ஷேத்ரம் அமைந்திருப்பதாக "ஜாபால தர்சனம்' என்ற உபநிஷதம் கூறுகிறது. பஞ்சபூத தலங்களில் இது ஆகாயத் தத்துவத்தைக் குறிக்கிறது. "சிதம்பர ரகசியம்' என்று போற்றப்படும் இந்த ஆகாயத் தத்துவத்தைப் பற்றி சாந்தோக்கியம், பிருகதாரண்யம், கைவல்யம் போன்ற உபநிடதங் கள் விளக்குகின்றன. உபாசனைகளில் குறிப்பிடப் படும் ஆறு ஆதார ஸ்தானங்களில், மூலாதாரத்தைக் குறிக்கும் தலம் திருவாரூர் என்றும், சுவாதிஷ் டானத்துக்குரிய தலம் திருவானைக்காவல் என்றும், மணிபூரகத்தைக் குறிப்பது திருவண்ணாமலை என்றும், தில்லையம்பதியான சிதம்பரத்தை அனாஹத க்ஷேத்ரமாகவும், விசுத்திக்குரிய தலமாக காளஹஸ்தியும், ஆக்ஞா க்ஷேத்திரமாக முக்தியைத் தரும் காசியும் கூறப்பட்டுள்ளன. இத்தகைய பெருமை வாய்ந்த சிதம்பரேசனின் துணைவியான அன்னை சிவகாம சுந்தரியை வாக்கிற்கு அதிதேவதையான "மனோன்மணி' என்ற சக்தி ரூபமாக சாத்திரங்கள் கூறுகின்றன.சிதம்பரத் தலத்திற்கு கனகசபை அல்லது பொன்னம்பலம் என்று பெயர். இதேபோல் ஹாலாஸ்ய க்ஷேத்ரம் என்று அழைக்கப்படும் மதுரையம்பதிக்கு ரஜதசபை அல்லது வெள்ளியம்ப லம் என்றும், திருவாலங்காடு தலத்துக்கு ரத்ன சபை என்றும், திருநெல்வேலி ஆலயத்திற்கு தாமிர சபை என்றும், திருக்குற்றாலத்திற்கு சித்ர சபை என்றும் பெயர் வழங்கி வருகிறது. இவையனைத்தும் கூத்தபிரானின் முக்கிய திருத்தலங்களாகும்.இவற்றைத் தவிர, ராமாயண காவியத்தாலேயே போற்றப்பட்ட தலம் "ஆதிசிதம்பரம்' எனப்படும் திருவெண்காடாகும். சீர்காழிக்கு அருகில் உள்ள இத்தலத்திலும் நடராஜப் பெருமானுக்குத் தனி நடனசபை உண்டு. ஸ்படிகலிங்க பூஜையும், ஆகாயத் தத்துவ ரகசியமும் உள்ளன. ஒப்பற்ற அழகும் சான்னித்தியமும் உள்ள நடராஜரது பாதத்தில், பதினான்கு சதங்கைகளுடைய காப்பு அணிந்துள்ளார். பதினான்கு உலகங்களும் இவரது பாத அசைவினால் அசையும் என்பதை இது காட்டுகிறது. இவரது இடுப்பில் 81 சங்கிலி வளையங்கள் இணைத்த அரைஞாண் அணிந்துள் ளார். இது "ப்ரணவம்' முதலாக "நம' முடிய உள்ள 81 பத மந்திரங்களைக் குறிப்பிடுகிறது. இருபத் தெட்டு எலும்பு மணிகளைக் கொண்ட ஆபரணம் ஒன்றினையும் அணிந்துள்ளார். இது இருபத் தெட்டு சதுர்யுகங்கள் முடிந்துவிட்டதைக் குறிப் பிடுகிறது. இவரது மார்பில் ஒருபுறம் ஆமை ஓடும், ஒருபுறம் பன்றிக் கொம்பும்போல் அமைந்த பதக்கமும் அணிந்துள்ளார். இது "என்பொடு கொம் பொடு ஆமை இவை மார்பிலங்க' என்ற கோளறு பதிகத்தை நினைவூட்டுகிறது. இவரது தலையில் ஷோடச கலைகளைக் குறிக்கும் பதினாறு சடைகள் உள்ளன. மயிற்பீலியும் அணிந்துள்ளார். மீன் போன்ற வடிவத்தில் கங்கையும், பிறைச்சந்திர னும் இவரது சிரசை அலங்கரிக்கின்றன. இறைவ னது நடனத்தை அருகில் நின்று களிக்கும் அன்னை சிவகாமசுந்தரி, "மஹேச்வர மஹாகல்ப மஹா தாண்டவஸாக்ஷினீ' என்ற லலிதா ஸஹஸ்ரநாம வரியை நமக்கு நினைவூட்டுகிறாள்.இத்தகைய சிறப்பு வாய்ந்த நடராஜப் பெருமானின் பெருமையை விளக்கும் சிதம்பர மஹாத்மியம் என்ற நூல், "இறைவனது கரத்தில் உள்ள உடுக்கை படைக்கும் தொழிலையும், அபயக் கரம் காத்தலையும், ஒரு கரத்தில் உள்ள அக்னி அழித்தலையும், தூக்கிய திருவடி அருளையும், முயலகன்மீது வைத்திருக்கும் பாதம் மறைத் தலையும் செய்கிறது. இந்த ஐந்தொழில்களையும் இறைவன் தனது ஸங்கல்ப மாத்திரத்தில் நடத்துவதை இது குறிப்பிடுகிறது' என்று கூறுகிறது.இவ்வாறு ஈசன் திருநடனம் புரியும் திருவாதிரைத் திருநாளில் நாம் அனைவரும் ஆடவல்லானாகிய சிவபிரானைப் போற்றிப் பரவுதல் வேண்டும்.அடுத்து, மார்கழி மாதத்தில் பரமேசுவரனை மகிழ்விக்கும் மகா வியதீபாத விரதத்தின் பெருமையைக் கவனிப்போம். ஸூத ஸம்ஹிதையில் தீர்த்த மாஹாத்மிய காண்டத்தில், "மகா வியதீபாதம் வரும் நாளன்று தற்கால குஜராத்தில் காடியாபாத் என்ற இடத்திலுள்ள ஜோதிர்லிங்கமான சோமநாதரையோ, திருவாரூர் தியாகேசரையோ, ராமேசுவரத்தில் எழுந்தருளியுள்ள ராமநாத சுவாமியையோ தரிசித்து வழிபடுதல் மிகச் சிறந்த பலனைத் தரும்' என்று கூறப்பட்டுள்ளது.சைவபூஷணம் என்ற ஆகம நூல், வியதீபாத தினத்தன்று அதிகாலையில் எழுந்து ஆசாரத்துடன் சிவபூஜை செய்வது மிகவும் உயர்ந்தது என்று கூறுகிறது. இவ்விதம் ஒரு வருடத்தில் வரும் பதின்மூன்று வியதீபாத நாட்களிலும் செய்தால், ஸ்ரீபரமேசுவரன் எல்லாவித நன்மைகளையும் அளிப்பார் என்று கூறுகிறது. இப்பூஜையை மார்கழி மாத மகா வியதீபாதத்தில் தொடங்கி அடுத்த மகா வியதீபாதத்தில் பூர்த்தி செய்ய வேண்டும். வியதீபாதமும் நட்சத்திரங்களைப் போலவே இருபத்தேழு நாட்களுக்கு ஒரு முறை வரக்கூடியது.முன்னொரு சமயம், சந்திரன் குருபத்தினியான தாரையிடம் தவறான எண்ணத்துடன் பழக முற்பட்டபோது, தர்மத்தில் அதிக ஈடுபாடுடைய சூரியன் சந்திரனைக் கோபத்துடன் கடிந்து உஷ்ணமாகப் பார்த்தார். தனது சொந்த விஷயத்தில் சூரியன் தலையிடுவதை விரும்பாத சந்திரனும் பதிலுக்கு சூரியனைச் சினந்து நோக்கினான். அப்போது அவர்களுடைய கோபப்பார்வை ஒன்று கலந்ததால் அவர்களிடையே ஒரு திவ்ய புருஷன் தோன்றினான். இவ்விதம் ஏற்பட்ட தேவதையே வியதீபாதம் என்ற யோகத்திற்கு உரிய தேவதை யாகும். இந்த தேவதைக்கு அதிதேவதை சிவ பிரானாவார். தவிர, இந்த மகா வியதீபாதத்தன்று "தத்த, தத்த' என்று ஜபித்து தத்தாத்ரேயரை வழிபடுபவர்களுக்கு தத்துவஞானம் ஏற்படும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.அன்றைய தினம் முன்னோர்களுக்குத் தர்ப்பணம் செய்வது சிறந்தது. ஒரே ஆண்டில் செய்யப்படும் ஷண்ணவதி என்று கூறப்படும் 96 சிரார்த்தங்களில் இந்தப் பதின்மூன்று வியதீபாதங்க ளும் அடங்கும். அதிலும் மகா வியதீபாத தினத்தில் செய்யும் பித்ரு காரியங்கள், கயா சிரார்த்தப் பலனைக் கொடுக்கும் என்பது உறுதி!

பிரம்மா குமாரிகள்


"பிரஜா பிதா பிரம்மா குமாரிகள் ஈஸ்வரிய விஷ்வ வித்யாலயம்' என்னும் ராஜயோக தியான நிலையத்தின் சிறு விதை 1936-ஆம் ஆண்டு சிந்து மாகாணத்தி லுள்ள ஹைதராபாத் தில் (கராச்சி) விதைக் கப்பட்டு, இன்று மிகப் பெரிய ஆலமரமாக வளர்ந்து, சுமார் 8,500 கிளை நிலையங்க ளைக் கொண்டிருக் கிறது.பிரம்மா குமாரிகள் அமைப்பானது ஓர் ஆன்மிக, சமூக, கல்வி மற்றும் கலாச்சாரப் பணிபுரிந்து வரும் தன்னார்வத் தொண்டு நிறுவனமாகும். தற்கால இயந்திரமயமான உலகத்தில், புதிய ஆன்மிக விழிப்புணர்விற்கான பணியைச் செய்து வருகிறது இந்த இயக்கம்.ஆரம்ப கட்டத்தில் சுமார் 350 பேர் கொண்ட ஓர் சிறிய ஆன்மிக விழிப்புணர்வு பெற்ற குடும்பமாகச் செயல்பட்டு வந்த இந்த இயக்கம், இன்று பத்து லட்சம் உறுப்பினர் களுடன் விளங்குகிறது. சாதி, சமயம், இனம், மொழி, கலாச்சாரத்தைக் கடந்து, பண்புகள் நிறைந்த வாழ்க்கையின் வாயிலாக உலகத்தில் தூய்மை, அமைதி, மகிழ்ச்சி மற்றும் சமூக நல்லிணக்கத்தைப் பரப்பும் ஆன்மிகப் பணியில் இவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.இவ்வியக்கம் தாதா லேக்ராஜ் என்பவ ரால் தோற்றுவிக்கப்பட்டது. இவர் பிரபல வைர வியாபாரியாக விளங்கினார். சிவ பெருமானின் அருளால் கிடைத்த பல்வேறு தெய்வீகக் காட்சிகளும், ஆன்மிக அனுபவங் களும் அவருடைய வாழ்க்கையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தின. இதன் காரணமாக ஓர் ஆன்மிகத் தலைவராக உருவெடுத்தார். இவரை மக்கள் "பிரஜா பிதா பிரம்மா' என்று அழைத்தனர். அவர் தனது 60-ஆவது வயதில், 1936-ஆம் ஆண்டு "ஓம் மண்டலி' என்ற ஆன்மிக அமைப்பை நிறுவினார். அதன் பின்னர் "பிரம்மா பாபா' என்றும் அன்புடன் அழைக்கப்பட்டார். 1950-ஆம் ஆண்டு, 350 பேர் கொண்ட இவரின் ஆன்மி கக் குழு கராச்சியிலிருந்து இந்தியாவுக்கு இடம் பெயர்ந்து, ராஜஸ்தானில் ஆர வல்லி மலைத்தொடரில் அமைந்துள்ள "மவுண்ட் அபு' என்னும் இடத்தைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்க ஆரம்பித்தது. (இங்குதான் ஐ.ஏ.எஸ். பயிற்சி மையம் இருக்கிறது. இப்போது ஹைதராபாத்திலும் உள்ளது.)பிரஜா பிதா பிரம்மா தீர்க்கமான நம்பிக்கையும், தொலைநோக்குச் சிந்தனை யும் கொண்டவராக இருந்ததால், 1975-ல் ஆரம்பிக்கப்பட்ட அகில உலக சேவையா னது, இன்று ஐந்து கண்டங்களிலுள்ள 130 நாடுகளில் பரவியுள்ளது குறிப்பிடத்தக்கது.ஆன்மிகம் மற்றும் சமுதாய முன்னேற்றத் தில், தமது தனித்தன்மை வாய்ந்த பண்பு களால் மறுமலர்ச்சி ஏற்படுத்த வல்லவர்கள் பெண்களும் தாய்மார்களுமே என்பதை உணர்ந்து, அவர்களை முன்னிலைப்படுத்தி னார். அதன்படி "மாதேஸ்வரி ஜெகதாம்பா சரஸ்வதி' பிரம்மா குமாரிகளின் முதல் நிர்வாகியானார். அந்த சமயத்தில் இளம் வயதுடையவராக இருந்த போதிலும் ஆன்மிகத் தாயாக விளங்கினார். பாரதத்தின் பல பாகங்களிலும் தனது பணியை மேற்கொண்ட மாதேஸ்வரி, 1964-ஆம் ஆண்டு தனது பூத உடலை நீத்தார். அதன் பின்பு பிரஜா பிதா பிரம்மா 1969-ஆம் ஆண்டு ஜனவரி 18-ல் பரிபூரண நிலையைப் பெற்றவராக பூதவுடலை நீத்தார். இவர் களைத் தொடர்ந்து ஆன்மிக சேவையானது மூத்த சகோதரிகளால் மிக வேகமான வளர்ச்சியை அடைந்தது. அன்பு சொரூபமும், தலைசிறந்த நிர்வாகியுமான "தாதி பிரகாஷ்மணி' தலைமை நிர்வாகியாக 1969-ஆம் ஆண்டு பொறுப்பேற்றார்.இவருடைய ஆர்வம், உற்சாகம், இறைசக்தி, பண்புகளால் ஆன்மிகக் குடும்பத்தைச் செம்மையாக வழிநடத்தினார். அதன் பயனாக 1981 மற்றும் 1986-ல் ஐ.நா. சார்பாக அமைதிப் பதக்கங்கள் வழங்கப்பட் டன. 1987-ஆம் ஆண்டு ஐ.நா.வின் பொதுச் செயலர், "அமைதித் தூதுவர்' என்ற விருது வழங்கி கௌரவித் தார். இத்துடன் ஐந்து தேசிய "அமைதித் தூதுவர்' விருதுகளை இவ்வித்யாலயத்தின் கிளை நிலையங்க ளான ஆஸ்திரேலியா மற்றும் கென்யா நாட்டு மையங்கள் பெற்றிருக்கின்றன.ராஜஸ்தான், உதயப்பூரில் உள்ள மோகன்லால் சுகாதியா பல்கலைக் கழகம், டாக்டர் ஆஃப் லிட்ரேச் சர் (கௌரவ முனைவர்) பட்டத்தை தாதி பிரகாஷ் மணி அவர்களுக்கு வழங்கிச் சிறப்பித்துள்ளது. தாதி பிரகாஷ்மணி 2007-ஆம் ஆண்டு பூதவுடலைத் துறந்தார். அதன் பின்னர் தாதி ஜானகி அவர்கள் தலைமை நிர்வாகியாகப் பொறுப்பேற்றுள்ளார். 92 வயது நிரம்பியவராக இருப்பினும், காலத்தையும் உடல் நிலையையும் கடந்து, களைப்பில்லாத சேவையை லட்சக்கணக்கான மக்களுக்கு ஆற்றி வருகிறார். இவருடைய ஆழ்ந்த தியானப் பயிற்சியின் பலனாக, "உலகிலேயே எப்போதும் சமமான மனநிலை கொண்ட பெண்மணி' என்று அறிவியல் ஆராய்ச்சி யின் மூலம் கண்டறியப்பட்டுள்ளார்.பிரம்மா குமாரிகள் வித்யாலயம் பலவிதத்தில் ஒரு ஈடுஇணையற்ற விஷ்வ வித்யாலயமாக உள்ளது. ஆன்மிகப் பண்புகளை வளர்க்க வேண்டும் என்ற அடிப்படையில் அமைந்திருக்கின்ற சிறந்த ஆன்மிகக் கல்வி நிறுவனமாக இது விளங்குகிறது. இதற்குப் பன்னாடுகளின் வரவேற்பும் அங்கீகார மும் உண்டு. ஐ.நா.சபையின் பொதுச் செய்தி இலாகாவில் அரசு சார்பற்ற நிறுவனமாக இணைக்கப்பட்டிருக்கிறது.ஐ.நா. சபையின் பொருளாதார- சமூகக் கூட்டமைப்பின் (ஊஸ்ரீர்ள்ர்ஸ்ரீ) ஆலோசனைக் குழுவில் ஆலோசகர் அந்தஸ்தில் இடம் பெற்றுள்ளது. கோஸ்டாரிக்காவில் உள்ள ஐ.நா.வின் அமைதிப் பல்கலைக் கழகத்திற்கு, அமைதி பற்றிய கல்வி நுணுக்கத்தின் ஒத்துழைப்பை நல்குவதற் கான அதிகாரப்பூர்வ ஒப்பந்தம் செய்து கொண்டிருக்கிறது. ஐ.நா. சபையின் குழந்தைகள் நிதிக் கழகத்தில் (மய்ண்ஸ்ரீங்ச்) ஆலோசகர் அந்தஸ்து பெற்றுள்ளது.மொரீஷியஸ் அரசு, இவ்வித்யாலயத்தை ஒரு பல்கலைக் கழகமாக, பாராளுமன்றச் சட்டத்தின் மூலமாக அங்கீகாரம் செய்துள்ளது. இந்த ஈஸ்வரிய விஷ்வ வித்யாலயத்தின் ஆலோசனை யின் பேரில், கயானா அரசு மூன்று நிமிட ராஜயோக தியானம் செய்து பாராளுமன்ற நடவடிக்கைகளை ஆரம்பிப்பது என்பதை வழக்கமாகக் கொண்டுள்ளது. உலகம் முழுவதும் பரவியுள்ள இவ்வித்யாலயம் சமூகத்தின் 18 பிரிவுகளின் அடிப்படையில் தனது பணிகளை அதிகரித்து வருகிறது. அவற்றுள் மருத்துவப் பிரிவு, கல்விப்பிரிவு, மகளிர் பிரிவு, நிர்வாகப் பிரிவு, இளைஞர் பிரிவு, அரசியல் பிரிவு முக்கிய மானவை. தனி மனிதனின் ஆக்கப்பூர்வமான மாற்றம்தான் அமைதி, மகிழ்ச்சியின் அடித்தளம் எனவும்; அதுவே உலக மாற்றத்திற்கு ஆதாரமாக இருக்கிறது என்பதையும் நோக்கமாகக் கொண்டிருப்பதால், தனிமனித அமைதிக்காக ராஜயோக தியானப் பயிற்சியைக் கற்பித்து வருகிறது. இதைப் பற்றி அறிய வேண்டும் என்று விழைகின்ற ஆண், பெண், குழந்தைகள் யாவரும், ஜாதி, மத, மொழி பேதமின்றி இவ்வமைப்பை அணுகலாம்; அறிந்து பயனடையலாம். இதற் காகக் கட்டணம் எதுவும் வசூலிக்கப் படுவதில்லை.பிரம்மா குமாரிகளின் இராஜயோக தியான மையங்களில் பல்வேறு பாடமுறைகள், உரையாடல், கருத்தரங்கம் மூலமாக, தனிமனித ஒழுக்க மேம்பாட்டிற்கு உதவக்கூடிய பல்வேறு தலைப்புகளில் வகுப்புகள் நடத்தப்படுகின்றன. ஆக்கப்பூர்வமான சிந்தனை (டர்ள்ண்ற்ண்ஸ்ங் பட்ண்ய்ந்ண்ய்ஞ்) மூலமாக மனதை எவ்வாறு சீராகப் பராமரித்து ஒருமுகப்படுத்துவது, மன இறுக்கத்திலிருந்து விடுபட்டு வாழ்வது (நற்ழ்ங்ள்ள் எழ்ங்ங் கண்ஸ்ண்ய்ஞ்), சுய நிர்வாகத் தலைமை (நங்ப்ச் ஙஹய்ஹஞ்ண்ய்ஞ் கங்ஹக்ங்ழ்ள்ட்ண்ல்), முழு ஆரோக்கியத்திற்கான ஆக்கப்பூர்வ அணுகுமுறை (டர்ள்ண்ற்ண்ஸ்ங் ஆல்ல்ழ்ர்ஹஸ்ரீட் ற்ர் பர்ற்ஹப் ஐங்ஹப்ற்ட்), நற்பண்புகள் கல்வித் திட்டம் (கண்ஸ்ண்ய்ஞ் யஹப்ன்ங்ள் ஊக்ன்ஸ்ரீஹற்ண்ர்ய்ஹப் டழ்ர்ஞ்ழ்ஹம்ம்ங்) போன்றவை அவற்றுள் சில.இங்கு கற்றுத் தரப்படும் ராஜயோக தியானப் பயிற்சியால் ஏற்படும் நன்மைகள் சிலவற்றைக் காண்போம்.கோபம், வெறுப்பு, மனச்சோர்வு, மன இறுக்கம் போன்றவற்றிலிருந்து விடுபட்டு மனஅமைதி பெற உதவுகிறது. தேவையற்ற தீய பழக்க வழக்கங்களிலிருந்து விடுபட்டு, வெற்றி அடைவதற்கான மனோசக்தியும் தன்னம்பிக்கை யும் கிடைக்கிறது. கூடவே தன்னைத்தானே உணரவும் முடிகிறது. எப்பொழுது தன்னைப் புரிந்துகொள்கிறோமோ அப்பொழுதுதான் மற்றவர்களை- பிரச்சினைகளை- சூழ்நிலை களைச் சரியாகக் கையாள முடியும்.இந்த ஆன்மிகப் பயணத்தில் உலகிலுள்ள அனைத்து மக்களையும் ஈடுபடுத்தும் வண்ணம், அநேக நிகழ்ச்சிகளை இவ்வமைப்பு நடத்தி வருகிறது. தமிழகத்திலும் பிரம்மா குமாரிகள் அமைப் பின் கிளைகள் உள்ளன. அங்கே தினமும் காலை, மாலை இருவேளையும் ராஜயோகப் பயிற்சியும் வகுப்புகளும் நடத்தப்படுகின்றன. செல்லுங்கள்; ராஜயோகத்தின் மூலம் அமைதி வாழ்வை அடையுங்கள்!

பழங்கள் - சாத்துகுடி


மனித உடலுக்கு நேரடியாக சத்துக்ளை கொடுப்பது பழங்கள் மட்டுமே. பழங்கள் எளிதில் சீரணமாவதற்கும், வாய், வயிறு, குடல் பகுதியில் உள்ள புண்களை ஆற்றுவதற்கும் ஏற்றவை. உடலுக்குத் தேவையான ஊட்டச் சத்து அதாவது புரதச் சத்து, வைட்டமின் சத்துக்கள், கால்சியம் சத்து, நார்ச்சத்து என அனைத்து சத்துக்களும் பழங்களில் அதிகம் அடங்கியிருக்கின்றது. தினமும் பழங்கள் சாப்பிடுவது நல்லது. அந்தந்த சீதோஷ்ண காலங்களில் அதிகம் விளையும் பழங்களைச் சாப்பிட்டால் நல்லது.பழங்கள் மலச்சிக்கலைப் போக்கி உடலை நோயின்றி காக்கின்றன. பழங்களின் மருத்துவக் குணங்களைப் பற்றி ஒவ்வொரு இதழிலும் அறிந்து வருகிறோம். கடந்த இதழில் உலர்ந்த திராட்சையின் பயன்களைக் கண்டோம். இந்த இதழில் எங்கும் கிடைக்கும் சாத்துக்குடியின் மருத்துவக் குணங்களைப் பற்றி தெரிந்துகொள்வோம்.மஞ்சள் கலந்த பச்சை நிறத்தில் இந்தப் பழம் இருக்கும். சாத்துக்குடி, நாரத்தை, ஆரஞ்சு வகையைச் சார்ந்தது. தினமும் இரண்டு பழங்கள் சாப்பிடுவது நல்லது.நோயுற்றவர்களுக்கு நோயால் பாதிக்கப்பட்டு உடல் இளைத்தவர்கள் சாத்துக்குடியை சாற்றைப் பருகி வந்தால் உடலுக்கு புத்துணர்ச்சி உண்டாகும். உடலுக்கு வலு கொடுக்கும். சாத்துகுடியானது இரத்தத்தில் எளிதில் கலப்பதால் உடல் வெகு விரைவில் தேறும்.ஒவ்வொருவருடைய வளர்ச்சிக்கும் அவர்களுடைய நினைவாற்றலே முக்கிய பங்கு வகிக்கிறது. மறதி என்பது ஒருகொடிய நோய்க்கு ஒப்பாகும். எனவே நினைவாற்றலை அதிகரிக்க சாத்துக்குடி பழம் சாப்பிடுவது நல்லது.இரத்த விருத்திக்குசிலர் எப்போதும் சோர்வாகவே இருப்பார்கள். சிறிது வேலை செய்தாலும், அதிகமாக அசதி உண்டாவதாகக் கூறுவார்கள். கை, கால் மூட்டுக்களில் வலி உண்டாகும். சில சமயங்களில் தலைச் சுற்றலுடன் இலேசான மயக்கம் ஏற்படும். இவர்களுக்கு தினமும் இரண்டு சாத்துக்குடி வீதம் சாறு எடுத்துக் கொடுத்து வந்தால் இரத்தம் விருத்தியாகும். உடல் அசதி நீங்கும்.இரத்தத்தில் சிவப்பணுக்களின் (ஹீமோ குளோபின்) எண்ணிக்கை குறைவதால் இரத்தச் சோகை ஏற்பட வாய்ப்புள்ளது. நமது நாட்டில் இரத்தச் சோகையால் 67 சதவிகிதம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த இரத்தச் சோகையை விரட்டியடிக்க சாத்துக்குடி நல்ல மருந்தாகும்.எலும்புகள் வலுவடையசிலருக்கு இலேசாக அடிபட்டால் கூட எலும்புகள் உடைந்துவிடும். மேலும் எலும்புகள் வலுவற்று காணப்படும். இதற்குக் காரணம் கால்சியச் சத்து குறைபாடே ஆகும். இவர்கள் சாத்துக்குடி கிடைக்கும் காலங்களில் அதிக அளவு சாப்பிட்டு வந்தால் எலும்புகள் வலுவடையும்.மலச்சிக்கல் தீரமலச்சிக்கல்தான் அனைத்து நோய்களுக்கும் மூலகாரணம் என்பதை நாம் பல இதழ்களில் அறிந்துள்ளோம் . மலச்சிக்கல் ஏற்படாமல் இருக்க பழங்களே சிறந்த மருந்தாகிறது. மலச்சிக்கல் உள்ளவர்கள் தினமும் ஒரு பழம் வீதம் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் தீரும்.நன்கு பசியைத் தூண்டபசியில்லாமல் சிலர் அவதியுறுவார்கள். இவர்களின் வயிறு எப்போதும் நிரம்பி உள்ளது போல் தோன்றும். சாத்துக்குடி பழத்தை தினமும் உண்டு வந்தால் சீரண சக்தியைத் தூண்டி நன்கு பசியை உண்டாக்கும்.குழந்தைகளுக்குஒரு வயதுக்குமேல் உள்ள குழந்தைகளுக்கு கால்சியச் சத்து அதிகம் தேவை. குழந்தைகளின் வளர்ச்சிக்கு இன்றியமையாதது இந்த கால்சியம் சத்துதான். சாத்துக்குடியில் அதிகளவு கால்சியச் சத்து இருப்பதால் குழந்தைகளுக்கு சாத்துக்குடி சாறு கொடுப்பது மிகவும் நல்லது.பெண்களுக்குநாற்பது வயதைக் கடந்த பெண்களுக்கு எலும்புகள், எலும்பு மூட்டுகள் தேய்மானம் அடையும். மேலும் மாதவிலக்கு நிற்கும் காலமான (40-45 வயதுகள்) மெனோபாஸ் காலங்களில் பெண்களுக்கு சத்துக் குறைவால் பல இன்னல்கள் உண்டாகும். இந்தக் குறை நீங்க பெண்கள் தினமும் சாத்துக்குடி சாறு அருந்துவது நல்லது.முதியோர்களுக்குவயது முதிர்ந்தவர்களுக்கு உணவு சரியாக செரிக்காமல் மலச்சிக்கல் உண்டாகும். இதனால் உடல் அசதி, சோர்வு உண்டாகும். இவை நீங்க சாத்துக்குடி நல்ல மருந்தாகும்.கிடைக்கும் காலங்களில் இந்தப் பழத்தை அதிகம் சாப்பிட்டு நோயின்றி வாழலாம்

காசம் தீர்க்கும் கற்பூரவள்ளி


தற்போது மழைக்காலம் என்பதால் சாலையின் இரு பக்கங்களிலும், வீடு ஓரங்களிலும் பல செடி கொடிகள் நிறைந்து வளர்ந்திருப்பதைப் பார்த்திருப்பீர்கள். அவற்றை கொஞ்சம் உற்று கவனித்துப் பாருங்கள். நம் இதழில் நீங்கள் படித்த மூலிகைகளில் சில அங்கு காணப்படும். மூலிகைகளைத் தேடி நாம் செல்ல வேண்டாம். அநேக மூலிகைகள் நம் அருகிலேயே இருக்கின்றன.சிலர் வீடுகளில் அழகுக்காக பல செடிகொடிகளை வளர்ப்பார்கள். அவற்றில் துளசி, கற்பூரவள்ளி, சித்தரத்தை, சிறியாநங்கை என பல அடங்கும். சிலருக்குக்கு இவற்றின் மருத்துவக் குணங்கள் தெரிந்திருக்கும். சிலர் அறிந்திருக்க மாட்டார்கள்.இம்மாத இதழில் வீடுகளில் தொட்டிகளில் வளர்க்கப்படும் கற்பூரவள்ளியின் மருத்துவக் குணங்களைப் பற்றி தெரிந்துகொள்வோம்.இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மிகுந்த பலனளிக்கக் கூடியது.இந்தியாவில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா பகுதிகளில் அதிகம் வளர்கிறது. இதன் இலைகள் காரம் கலந்த சுறுசுறுவென்ற சுவையுடன் இருக்கும். இதன் இலை தடித்து காணப்படும்.காச இருமல் கதித்தம சூரியயையம்பேசுபுற நீர்க்கோவை பேருங்காண் -வீசுசுரங்கற்பாறை யொத்துநெற்சிற் கட்டுகபம் வாதமும்போங்கற்பூர வள்ளிதனைக் கண்டு(அகத்தியர் குணபாடம்)கற்பூர வள்ளியின் கழறிலை யைத்தினநற்பாலர் நோயெலா நாசமா யகலுமே(தேரையர் குணபாடம்)குழந்தைகளுக்குசிறு குழந்தைகளுக்கு அடிக்கடி சளிப் பிடித்துக்கொண்டு இருமல் உண்டாகும். இது அவர்கள் உடல் நிலையை பல்வேறு வகைகளில் பாதித்து பல நோய்களை உண்டாக்கிவிடும்.கற்பூர வள்ளியின் இலையைச் சாறெடுத்து அதனுடன் பனங்கற்கண்டு கலந்து குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் இருமல் நீங்கும். மேலும் குழந்தைகளுக்கு உண்டாகும் மாந்தமும் விலகும்.ஆஸ்துமா பாதிப்பிலிருந்து விடுபடஇன்று குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் பாதிப்புக்குள்ளாக்கும் நோய்களில் ஆஸ்துமாவும் ஒன்று. ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிக மூச்சிரைப்பு ஏற்படும். இளைப்பு நோய் உருவாகும். மேலும் இருமலும் ஏற்படும்.இவர்கள் தினமும் காலையில் கற்பூரவள்ளி இலையின் சாறெடுத்து அதனுடன் பனங்கற்கண்டு அல்லது தேன் கலந்து அருந்திவந்தால் ஆஸ்துமாவினால் உண்டான பாதிப்புகளிலிருந்து படிப்படியாகக் குணமடையலாம்.சளித் தொல்லை நீங்கமூலத்தில் சூடு இருந்தால் மூக்கினில் நீர் வரும் என்பது சித்தர் வாக்கு.மூக்கில் நீர் வடிந்து அது சில நாட்களில் சளியாக மாறி இருமலை ஏற்படுத்திவிடும். இவர்கள் கற்பூரவள்ளி இலையின் சாறை எடுத்து தேன் கலந்து அருந்தி வந்தால் சளி மற்றும் இருமல் தொல்லையிலிருந்து விடுபடலாம்.புகை பிடிப்பவரா ....?புகை நமக்குப் பகை என்ற வாசகம் போட்டு இருந்தும் புகைப்பவர்கள் எண்ணிக்கை குறைந்த பாடில்லை. அரசு பொது இடங்களில் புகை பிடித்தலுக்கு தடை பிறப்பித்தும் அதற்கு சரியான பலன் கிடைக்கவில்லை. புகையினால் ஏற்படும் பாதிப்புகளைப் பற்றி போதிய விழிப்புணர்வு ஏற்பட்டும் இந்நிலை மாறவில்லை. புகைப்பவர்கள் அதிகம் நுரையீரல் நோயினால் பாதிக்கப்படுகின்றனர். இதே நாளடைவில் புற்று நோயாக மாறுகின்றது.இவர்கள் கற்புரவள்ளி இலையினை சாறெடுத்து அதை நன்கு சுண்டக் காய்ச்சி பாதியான அளவு எடுத்து வடிகட்டி அருந்தி வந்தால் புகையினால் உண்டான பாதிப்புகளிலிருந்து விடுபடலாம்.வியர்வை பெருக்கிசிலருக்கு வியர்க்காமல் உடம்பு முழுவதும் படிவம் போல் காணப்படும். நமது உடலில் தோலில் பல கோடி துளைகள் உள்ளன. இவற்றின் மூலம்தான் வியர்வை சுரப்பிகள் வியர்வையை வெளியேற்றுகின்றன. இந்த வியர்வையின் மூலம் உடலில் உள்ள அசுத்த நீர் வெளியேறுகிறது.இந்த வியர்வை நன்கு வெளியேறவும், வியர்வை சுரப்பிகள் நன்கு செயல்படவும் கற்பூரவள்ளியின் இலையை நிழலில் காயவைத்து பொடி செய்து அதனுடன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் வியர்வை பெருகும்.காசநோய்காசநோயால் உண்டான பாதிப்புகள் குறைய கற்பூரவள்ளி சிறந்த மருந்தாகும். கற்பூரவள்ளி இலையை சாறு எடுத்து அதனுடன் தேன் கலந்து அருந்தி வந்தால் காச நோயால் ஏற்பட்ட பாதிப்புகள் குறையும்.கற்பூரவள்ளி ஒரு கிருமி நாசினியாகும். கற்பூரவள்ளி செடியை தென்னை மரத்தைச் சுற்றி நட்டு வைத்தால் ஈறாடுகால் (12 அடி விட்டம்) வரை எந்த விதமான பூச்சிகளையும் அண்ட விடாது. சித்தர்கள் இதனை கற்பக விருட்சத்துடன் ஒப்பிடுவார்கள். இதனால் கூட இதற்கு கற்பூரவள்ளி என்று பெயர் வந்திருக்கலாம்.வீட்டைச் சுற்றி கற்பூரவள்ளியை நட்டு வளர்த்தால் விஷப் பூச்சிகள் தொல்லையிலிருந்து தப்பலாம். நாட்டைப் பாதுகாக்கும் போர்ப்படை வீரர்களைப் போல் மனிதனை இந்த கற்பூரவள்ளி பாதுகாக்கிறது.நாமும் நம் வீட்டில் கற்பூரவள்ளியை வளர்த்து அதன் பயனைப் பெறுவோம்

அழகிய குறிப்புகள்...


இயற்கையின் படைப்புகளில் ஒவ்வொன்றும் ஒருவித அழகுதான். பூக்கள் அழகு. பசுமை படர்ந்த புற்கள் அழகு, மலை அழகு, மழை அழகு. ஒவ்வொரு உயிருக்கும் தன் குழந்தை அழகு. அதுபோல் மனிதருக்கு அழகு அன்பான இதயமே.உள்ளம் அழகாக இருந்தால்தான் முகம் அழகாகும். இதனால்தான் அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்கின்றனர் .இன்றைய நவீன உலகில் இளம் பெண்களும் இளைஞர்களும் முகத்தை அழகு படுத்துகிறோம் என்ற பெயரில் விளம்பரங்களைப் பார்த்து கண்டபடி கிரீம்களைப் பூசிக்கொள்கின்றனர். இது முகத்தில் மேலும் பல பாதிப்புகளை உண்டாக்குகிறது. முகத் தோல் சுருக்கம் ஏற்படுகிறது.இதுபோல் இன்று உடலுக்குத் தேவையான ஊட்டச் சத்துள்ள உணவுகளை உண்பதில்லை. பாஸ்ட்புட் என்ற பெயரில் வரும் அரை வேக்காட்டு அரிசியைச் சாப்பிடுகின்றனர். மேலும் எண்ணெயில் பொரிக்கப்பட்ட உணவுகளையும், பதப்படுத்தப்பட்ட உணவுகளையும் பாக்கெட்டுகளில் அடைக்கப் பட்ட உணவுகளையும் சாப்பிடுகின்றனர். இதனால் அஜீரணக் கோளாறு ஏற்பட்டு குடலில் உள்ள வாயு சீற்றமாகின்றது. இதனால் உடலில் உள்ள கொழுப்புப் பொருட்கள் கரையாமல் அப்படியே இரத்தக் குழாய்களிலும் குடல் பகுதிகளிலும் படிந்துவிடுகின்றன. இதனால் உடல் சூடாகி முகத்தில் பருக்களாகவும், வெப்பக் கட்டிகளாகவும் தோன்றும்.மேலும் மலச்சிக்கல், மனச்சிக்கல் இருந்தால் முகத்தில் கருப்பு படரும்.இரத்தத்தில் ஏதேனும் குறையிருந்தால் முகத்தில்தான் முதலில் தெரியவரும். பல மருத்துவர்கள் முகத்தைப் பார்த்தவுடன் எந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என்பதைக் கண்டறிவார்கள்.கண்களைச் சுற்றி கருவளையம் தோன்றும். முக வறட்சி உண்டாகும். இதனால் முக அழகு கெடும். இவர்கள் எளிய முறையில் தங்கள் முக அழகைப் பாதுகாக்க சில வழிமுறைகளைப் பின்பற்றினால் நல்லது.* முகத்தில் பருக்கள் தோன்றினால் அவற்றைக் கிள்ளக் கூடாது.* முகத்தைக் கழுவி மென்மையான பருத்தித் துணியால் துடைக்க வேண்டும்.* மலச்சிக்கல் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். எளிதில் சீரணமாகக் கூடிய உணவுகளைச் சாப்பிட வேண்டும். உடல் சூடு ஏற்படாதவாறு இருக்க அதிகளவு தண்ணீர் அருந்த வேண்டும்.* இரவு நேரங்களில் அதிகளவு கண்விழித்து கணிணியோ, தொலைக்காட்சியோ பார்ப்பதைத் தவிர்க்க வேண்டும்.* ஒரு நாளைக்கு குறைந்தது 6 மணி நேரமாவது தூங்க வேண்டும்.* தினமும் உடற்பயிற்சி செய்வது நல்லது.* அதிக வேலைப்பளு, அதிக பட்டினி ஆகாது.* எண்ணெயில் பொரிக்கப்பட்ட உணவுகளைத் தவிர்ப்பது நல்லது.* உணவருந்தும்போது புத்தகம் படித்துக்கொண்டோ, தொலைக்காட்சி பார்த்துக்கொண்டோ இருக்கக்கூடாது.* தியானம், யோகா, செய்வது நல்லது.* மாதவிலக்குக் காலங்களில் முகத்தில் அதிக பருக்கள் தோன்றும். அந்த காலங்களில் மென்மையான உணவுகளை உண்பது நல்லது.5 கிராம் வெந்தயம் எடுத்து அதில் நன்னாரி 5 கிராம் சேர்த்து சிறிது நேரம் ஊறவைத்து வடிகட்டி அந்த நீருடன்ரோஜா இதழ் சந்தனத்தூள்காய்ந்த எலுமிச்சை தோல்செஞ்சந்தனம்இவற்றைச் சேர்த்து அரைத்து அதனுடன் முட்டையின் வெள்ளைக் கரு சேர்த்து குழைத்து முகத்தில் பூசி அரை மணி நேரம் ஊறவிட்டு பிறகு சிறுபயறு மாவு கொண்டு முகத்தைக் கழுவி வந்தால் முகப்பரு, உஷ்ணத்தால் வரும் சீழ் கட்டிகள், கருவளையம், முக வறட்சி போன்றவை நீங்கி முகம் பொலிவு பெறும்.சிலருக்குக் கழுத்தில் செயின் போட்ட பகுதிகளில் கருத்து காணப்படும். மேலும் சிலருக்கு இறுக்கமான ஆடை அணிவதால் உடம்பில் சில பகுதிகளில் தோல் கறுத்து காணப்படும். அப்படி கறுத்த பகுதிகளில் இதனைப் பூசி வந்தால் கருமை நிறம் மாறும்.செம்பருத்திப் பூ இதழ்களை நன்கு மை போல் அரைத்து அதனுடன் பயத்த மாவு கலந்து முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து முகம் கழுவி வந்தால் முகத்தில் வளரும் தேவையற்ற பூனைமுடிகள் உதிரும்.

நலம் தரும்... கடுகு


நம் முன்னோர்கள் உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளையே சாப்பிட்டு வந்தார்கள். அந்த உணவோடு மருந்துகளையும் உண்டு நோயின்றி நூறாண்டு வாழ்ந்தனர். ஒவ்வொருவீட்டிலும் சமையல் அறையிலுள்ள அஞ்சறைப் பெட்டியில் அற்புத மருந்துகள் இடம்பெற்றிருக்கும்.உணவோடு சேர்ந்து நம் உடலைக் காக்கும் அற்புத கூட்டணிதான் இந்த அஞ்சறைப் பெட்டி பொக்கிஷங்கள். கடந்த இதழ்களில் அஞ்சறைப் பெட்டியில் உள்ள சீரகம், சோம்பு, வெந்தயம் பற்றி அறிந்தோம். இந்த இதழில் கடுகின் மகிமையைப் பற்றி தெரிந்து கொள்வோம்.கடுகில் இரண்டு வகை உண்டு. 1) கருங்கடுகு, 2) வெண்கடுகு,இதில் நாய்க்கடுகு, மலைக்கடுகு, சிறுகடுகு என மூன்று வகைகள் உண்டு.கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பது பழமொழி. இதிலிருந்து இதன் காரத்தன்மையை அறிந்து கொள்ளலாம்.இது சிறு செடி வகையைச் சார்ந்தது. இந்தியாவில் பல இடங்களில் பயிராகிறது. வெண்கடுகை விட கருங்கடுகில் காரம் மிகுந்து காணப்படும். இதன் மேல்தோல் கறுப்பாக இருக்கும்.கடிப்பகை யெனவரு கடுகின் நாளு மிளகில் வணத்தோடு மூன்றுமொன்றாக்கியடுபுன லருந்துமு னயிலவை கறைதொறும்வளிமுதன் மூலிகை வலியெலா மகலும்பச்சடி முதற்கறி பண்பினா லயிலினுநிச்சய மாயுணி கழ்பிணி யறுக்குமே (தேரையர் குணபாடம்)செரிமானத்தைத் தூண்டசெரிமானத்தைத் தூண்டும் சக்தி கடுகுக்கு உண்டு. தினமும் உணவில் கடுகை சேர்த்துக் கொள்வது நல்லது. கடுகை நன்கு அரைத்து பொடியாக்கி அதனுடன் மிளகு பொடி, உப்பு சேர்த்து காலையில் ஒரு ஸ்பூன், அளவு எடுத்து வாயில் போட்டு வெந்நீர் குடித்து வந்தால் செரிமான சக்தியைத் தூண்டி அஜீரணக் கோளாறைப் போக்கும்.இருமல் நீங்கஒரு சிலருக்கு இருமும் போது தலைப்பகுதி முழுவதும் வலி உண்டாகும். இந்த இருமல் நாளுக்கு நாள் அதிகரித்து தலைச்சுற்றலை உண்டாக்கும். கடுகுப் பொடியுடன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் இந்த இருமல் நீங்குவதுடன் தலைவலியுடன் உண்டாகும் இருமல், மூக்கில் நீர் வடிதல், அதிக உமிழ்நீர் சுரத்தல் போன்றவை குறையும்.வயிற்றுவலி குணமாகஅஜீரணக் கோளாறால் வாய்வுக்கள் சீற்றமடைந்து வயிற்றில் வலியை உண்டாக்கும். இந்த வயிற்று வலி நீங்க கடுகை பொடி செய்து வெந்நீரில் கலந்து அருந்தி வந்தால் வயிற்றுவலி நீங்கும்.நஞ்சு உண்டவர்களுக்குசிலர் தெரிந்தோ தெரியாமலோ நஞ்சை உண்டிருந்தால் அவர்களுக்கு முதலில் கடுகை அரைத்து நீரில் கலந்து கொடுத்தால் வாந்தி உண்டாகும் இந்த வாந்தியுடன் உள்ளிருக்கும் நஞ்சானது வெளியேறும். சில வகையான காணாக்கடிகளுக்கு கடிபட்ட இடத்தில் கடுகு அரைத்து தடவினால் விஷம் நீங்கும்.இடிகாச நாசிக்கு ரீளைகபம் பித்தங்கடிவாத சீதங் கடுப்போ-குடலிற்படுகோட்டு நோயென்னும் பங்கிவைக ளைப்புண்கடுகோட்டு மேன்மருந்த காண்.மந்தமயக் கம்வாதம் வாய்நீர்ச் சுழற்றலறுமுந்து சுகப்பிரச வங்களுண்டா-மிந்துஙதன்மானே கிராணிகுன்ம மாறுமுத் தோடமும்போம்தானே கடுகிற்குத் தான்(அகத்தியர் குணபாடம்)கடுகுத்தூள், அரிசிமாவு இவைகளை சரிபாதியாக எடுத்து வெந்நீர் கலந்து களிபோல் கிளறி அதை இருமல், இரைப்பு இருப்பவர்கள் மார்பு, தொண்டைப் பகுதிகளில் தடவி வந்தால் இருமல் இளைப்பு நீங்கும். தலைவலி உள்ளவர்கள் நெற்றியில் பற்றுப் போடலாம்.சிறுநீர் பெருக்கிகடுகை அரைத்து தேனில் கலந்து தினமும் சாப்பிட்டு வந்தால் சிறுநீர் நன்கு பிரியும்.கடுகு எண்ணெய்கடுகிலிருந்து எடுக்கப்படும் எண்ணெயை வட இந்தியாவில் சமையலுக்கு பயன்படுத்தி வருகிறார்கள். கொழுப்பு சத்து அதிகமில்லாத இந்த எண்ணெய் இதய நோயை தடுக்கும்.விக்கல் நீங்கவெந்நீர் - 130 மி.லி. எடுத்து அதில் கடுகுத்தூள் - 8 கிராம் ஊறவைத்து வடிகட்டி அருந்தினால் விக்கல் நீங்கும்.இப்போது புரிகிறதா..! கடுகின் மகத்துவம் !!

வாழைப்பூ


நாம் ஒவ்வொரு இதழிலும் ஒவ்வொரு பூவின் மருத்துவக் குணங்களைப் பற்றி அறிந்து வருகிறோம். பூக்கள் நமக்கு மன அமைதியையும், நம்பிக்கையையும், புத்துணர்ச்சியையும் தருகின்றன. இயற்கையின் படைப்புகளில் பூக்கள் மிகவும் அற்புதமானது. ஒவ்வொரு பூவூம் ஒவ்வொரு விதமான அழகையும் மருத்துவக் குணங்களையும் கொண்டுள்ளது.இந்த இதழில் ஆயுளைப் பெருக்கும் வாழைப்பூ பற்றி தெரிந்துகொள்வோம்.நம் முன்னோர்கள் வாழையை பெண் தெய்வமாக வழிபட்டனர். மணவிழா, மங்கள விழாக்களில் வாழை முக்கிய இடம்பெற்றிருக்கும். வாழையின் அனைத்து பாகங்களும் மருத்துவக் குணம் கொண்டுள்ளன.வாழையிலையில் சாப்பிடும் போது ஆரோக்கியத்தைத் தருவதுடன் ஆயுளையும் அதிகரிக்கச் செய்கிறது.குலை வாழையை தலைமகனோடு ஒப்பிடுகின்றனர். வாழைப்பூ எந்த அளவுக்கு நமக்குப் பயன்படுகிறது என்பதற்கு இதுவே மிசச் சிறந்த சான்று.வாழைப்பூ மூலஇரத்தம் மாபிரமி வெட்டைபித்தம்கோழைவயிற் றுக்கடுப்பு கொல்காசம் - அழியனல்என்னஎரி கைகால் எரிவுத் தொலைத்துடலில்மன்னவளர்க் குந்தாது வை(அகத்தியர் குணபாடம்)வாழைப்பூ துவர்ப்புச் சுவையுடையது.சர்க்கரை நோயாளிகளுக்குசர்க்கரை நோயை சித்த மருத்துவத்தில் மதுமேக நோய் என்பார்கள்.குறிப்பாக தென்னிந்தியாவிலும், இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் வாழ்பவர்களில் 60 சதவீதத்திற்கு மேல் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்னர். சர்க்கரை நோய்க்கு மூலகாரணம் நம் உணவு முறையே.தற்போது நாம் உண்ணும் உணவில் உடலுக்குத் தேவையான ஊட்டச் சத்துக்கள் கிடைப்பதில்லை. இரசாயனம் கலந்த உணவையே சாப்பிட நேரிடுகிறது. மேலும், போதிய உடற்பயிற்சியின்மை, சில நேரங்களில் அதிக வேலைப்பளு, சரியான நேரத்திற்கு உணவருந்தாமை போன்றவையால் உடல் உறுப்புகள் பாதிக்கப்பட்டு செயலிழந்து சர்க்கரை நோயை உண்டாக்குகின்றன. சர்க்கரை நோயால் பாதிக்கப் பட்டவர்கள் வாழைப்பூவை சுத்தம் செய்து சிறிது சிறிதாக நறுக்கி அதனுடன் சின்ன வெங்காயம், பூண்டு, மிளகு சேர்த்து பொரியல் செய்து சாப்பிட்டு வந்தால் கணையம் வலுப்பெற்று உடலுக்குத் தேவையான இன்சுலினைச் சுரக்கச் செய்யும். இதனால் சர்க்கரை நோய் கட்டுப்படும்.இரத்த மூலம்மலம் வெளியேறும்போது இரத்தமும் சேர்ந்து வெளியேறும். இதனை இரத்த மூலம் என்கிறோம். இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் வாரம் இருமுறை வாழைப்பூவை உணவில் சேர்த்துவந்தால் இரத்த மூலம் வெகுவிரைவில் குணமாகும்.உடல் சூடுஉடல் சூடு உள்ளவர்கள் வாழைப்பூவுடன் பாசிப்பருப்பு சேர்த்து கடைந்து நெய் சேர்த்து வாரம் இருமுறை உண்டுவந்தால் உடல் சூடு குறையும்.வயிற்றுக் கடுப்பு நீங்கசிலருக்கு அஜீரணக் கோளாறு ஏற்பட்டு அதனால் வயிற்றுக்கடுப்பு உண்டாகும். இதனால் சீதக் கழிச்சல் ஏற்படும். இவர்கள் வாழைப்பூவை நீரில் கலந்து அதனுடன் சீரகம் , மிளகுத்தூள் சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி அந்த நீரை இளஞ்சூடாக அருந்தி வந்தால் வயிற்றுக்கடுப்பு நீங்கும்.பெண்களுக்குபெண்களுக்கு வாழைப்பூவை வரப்பிரசாதம் என்று சொல்லலாம். மாதவிலக்குக் காலங்களில் பெண்களுக்கு அதிக உதிரப்போக்கு உண்டாகும். அவர்கள் வாழைப்பூவின் உள்ளே இருக்கும் வெண்மையான பாகத்தை பாதியளவு எடுத்து நசுக்கி சாறு பிழிந்து சிறிது மிளகுத்தூள் சேர்த்து கொதிக்க வைத்து அதனுடன் பனங்கற்கண்டு கலந்து அருந்தி வந்தால் உதிரப்போக்கு கட்டுப்படும். உடல் அசதி, வயிற்று வலி, சூதக வலி குறையும்.வெள்ளைப்படுதல் வெள்ளைப்படுதலால் பெண்கள் அதிக மன உளைச்சலுக்கு ஆளாக நேரிடுகின்றது. இவர்கள் வாழைப்பூவை இரசம் செய்து அருந்தி வந்தால் வெள்ளைப்படுதல் கட்டுப்படும்.கைகால் எரிச்சல் நீங்ககை கால் எரிச்சலால் அவதிப்படுபவர்கள் வாழைப்பூவை இடித்து அதனுடன் சிற்றாமணக்கு எண்ணெய் சேர்த்து வதக்கி கை கால் எரிச்சல் உள்ள பகுதிகளில் ஒற்றடம் கொடுத்து வந்தால் கை கால் எரிச்சல் குணமாகும்.இருமல் நீங்கவறட்டு இருமல் உள்ளவர்கள் வாழைப்பூ இரசம் செய்து அருந்திவந்தால் இருமல் நீங்கும்.தாது விருத்திக்குவாரம் இருமுறை வாழைப்பூவை உணவில் சேர்த்து உண்டுவந்தால் தாது விருத்தியடையும்.மலட்டுத்தன்மை நீங்கசிலர் குழந்தையின்மையால் பல மன வேதனைக்க்கு ஆளாவர். இவர்களுக்கு வாழைப்பூ ஒரு வரப்பிரசாதம். வாழைப்பூவை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் மலட்டுத்தன்மை நீங்கி குழந்தை பாக்கியம் பெறுவர்.

கொழுப்பைக் கரைக்கும் கொடம்புளி


உடல் பருமனால் ஆண்களும், பெண்களும் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் சிறிது தூரம் நடந்தாலோ, மாடிப் படிகளில் ஏறினாலோ மூச்சிரைக்கும். அப்படியே உட்கார்ந்துவிடுவார்கள். இதனால் இவர்கள் அதிக மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். சிலர் எடையைக் குறைக்கிறோம் என்ற விளம்பரங்களை நம்பி ஏமாந்து பணத்தை இழப்பதுதான் மிச்சம்.பொதுவாக ஒருவருடைய எடை அவருடைய நடுத்தர வயதில்தான் அதிகரிக்க ஆரம்பிக்கும். ஆனால் இன்று சிறு பிள்ளைகள் கூட குண்டாகி அவதிக்குள்ளாகின்றனர்.இதற்கு நாம் உண்ணும் உணவுதான் முக்கியக் காரணமாகிறது. உணவில் உள்ள கொழுப்பு உடலில் தங்கி விடுவதால் உடல் பெருத்துவிடுகிறது.உடல் எடையைக் குறைக்க சிலர் பட்டினி கிடப்பார்கள். அது தவறு. மருந்து மாத்திரைகளை உபயோகித்தாலும் உடல் எடை குறையாது.உணவும், உடற்பயிற்சியும் தான் உடல் எடையை முறையாகக் குறைக்கும் மருந்தாகும்.அதற்கு கொடம்புளி மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.கொடம்புளி இந்தியாவில் கன்னியாகுமரியிலும், கேரளாவிலும் அதிகம் பயன்படுத்துகிறார்கள். இலங்கை மக்களும் புளிக்குப் பதிலாக கொடம்புளியைப் பயன்படுத்துகிறார்கள்.கொடம்புளியின் பூர்வீகம் இந்தியாதான். தற்போது தென்கிழக்கு ஆசிய நாடுகளிலும் விளைகின்றது.Tamil : KodumpuliSanskrit : VrikshamlaEnglish : Brindel berryTelugu : Sima chintaMalayalam : Kodumpuliஇதன் பழம் மஞ்சள் நிறத்தில் இருக்கும். இதன் மேல் தோலுடன் உள்ள தசைப் பகுதிதான் மருத்துவத் தன்மை கொண்டது.உடல் பருமன் குறையஉடல் பருமன் உள்ளவர்கள் சமையலில் இந்த கொடம்புளியை சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் உடல் பருமன் குறையும்.இந்த கொடம்புளியில் உள்ள ஹைட்ராக்ஸி சிட்ரிக் அமிலம் என்ற வேதிப்பொருள் தான் உடலின் எடையைக் குறைக்க பெரும் வகையில் உதவுகிறது.உண்ணும் உணவில் இருக்கும் அதிகப்படியான மாவுச்சத்துக்கள் அனைத்தும் கொழுப்புச் சத்தாக மாறுகின்றது. இதனால் கொழுப்புப் படலம் உடலில் தங்கி உடலைப் பருமனாக்குகிறது.இந்த மாவுச் சத்தை கொழுப்புச் சத்தாக மாறாமல் ஹைட்ரஸி சிட்ரிக் அமிலம் தடுக்கிறது. இதனால் உடலில் கொழுப்புச் சத்து உருவாவது தடுக்கப்படுகிறது. மேலும் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்தக்கள் அனைத்தும் கிடைக்கின்றன.பசியை அடக்கும்கொடம்புளியை தினமும் உணவில் சேர்த்து வந்தால் அதிகப் பசியைக் கட்டுப்படுத்தும். சீரண மண்டலத்தை பலப்படுத்தும். இதனால் உடலில் உள்ள கொழுப்பு வெகு விரைவில் கரையும்.மலச்சிக்கல் தீரபுளிக்குப் பதிலாக கொடம்புளியை உணவில் சேர்த்து வந்தால் மலச்சிக்கல் தீரும்.மூட்டுவலி நீங்ககொடம்புளியின் விதையை நீக்கி அதன் சதைப் பகுதியை நீரில் கொதிக்க வைத்து கஷாயமாக்கி அருந்தினால் மூட்டுவலி குணமாகும். உடலில் உள்ள வாத பித்த குற்றத்தைச் சீர்படுத்தும்.இலங்கை மக்களும், கேரள மக்களும் பழங்காலம்தொட்டே இந்த கொடம்புளியைப் பயன்படுத்தி வந்துள்ளனர்.நாமும் கொடம்புளியை உணவில் சேர்த்து அதன் பயன்களை அடைவோம்.

வரும்முன் காப்போம் - கண்களைக் காக்க...


ஐம்புலன்களானமெய், வாய், கண், மூக்கு, செவி ஆகியவை ஒரு மனிதனுக்கு முக்கியத்தேவையாகும். இவற்றைப் பாதுகாத்து நீண்ட ஆரோக்கியத்துடன் வாழ்வதே சிறந்தவாழ்வாகும். இந்த இதழில் ஐம்புலன்களில் ஒன்றான கண்களைப் பற்றி தெரிந்துகொள்வோம்.கண்ணில் சிறந்த உறுப்பில்லை என்பார்கள். இந்த உலகில்அனைத்து காட்சிகளையும் பார்த்து அவற்றை உள்வாங்கி மூளைக்கு அனுப்புவதேஇதன் வேலையாகும்.உடலில் அதிக வேகமாக செயல்படும் உறுப்புகளில் கண்களும் ஒன்று. இந்தகண்களை போற்றிப் பாதுகாக்க வேண்டியது ஒவ்வொருவரின் கடமையாகும்.எப்போதும் நீர் சூழ அமைந்துள்ள விழிகளில் சிறு தூசு பட்டாலும் அதுகண்களில் நீரை அதிகப்படுத்தி அதன்மூலம் வெளியேறிவிடுகின்றது. கண்கள்வறட்சி ஏற்படுவதைத் தடுக்க இமைகள் தானாக மூடித் திறக்கின்றன.மனிதனின் அவசியத் தேவையான கண்களுக்கு சரியான பராமரிப்பில்லாமல் கண்கள் எளிதில் பார்வையை இழக்கின்றன.இன்றும்கிராமங்களில் வசிக்கும் வயது முதிர்ந்தவர்கள் பலர் கண்ணாடி அணியாமல்படிப்பதைக் காணலாம். அதற்குக் காரணம் ரசாயனம் கலக்காத இயற்கை உணவுகளே.ஆனால்இன்று இரண்டு மூன்று வயது குழந்தைகள் கூட கண்ணாடி அணிந்திருப்பதைப்பார்க்கிறோம். அவசர கதியில் தயாரிக்கப்படும் இன்ஸ்டன்ட் உணவுகள்,சத்தில்லா உணவுகள், மற்றும் கண்களை பாதிக்கும் தொலைக் காட்சிப் பெட்டி,கணினி... என பட்டியல் நீளும்.கண்பார்வைக் கோளாறு ஏற்படக் காரணம்· உறவினர் முறையில் திருமணம் செய்பவர்களின் குழந்தைகளுக்கு கண்பார்வைக் குறைபாடு ஏற்படுகின்றது.· கருவிலிருக்கும் போது குழந்தைக்குத் தேவையான ஊட்டச் சத்து குறைபாட்டாலும் பார்வைக் கோளாறு ஏற்படுகின்றது.· சரியான உணவு உண்ணாமல் இரத்தச் சோகை ஏற்பட்டாலும் பார்வைக் குறைபாடு உண்டாகும்.·தூக்கமின்மையாலும், மங்கிய ஒளி அல்லது கண் கூசும் அளவு வெளிச்சம் உள்ளஇடங்களில் வேலை செய்பவர்களுக்கும் கண் பார்வைக் குறைபாடு உண்டாகும்.·தற்போதைய கணினி உலகில் கண்களுக்குத் தான் அதிக வேலை உண்டாகிறது. இரவுகண்விழித்து கணினி முன் அமர்ந்து அதிக நேரம் வேலை செய்பவர்களுக்கு கண்குறைபாடு எளிதில் உண்டாகும்.· ஈரல் பாதிக்கப்பட்டு பித்தம்அதிகரித்தால் முதலில் தாக்கப்படுவது காண் பார்வை நரம்புகளே... இதனால்தான்காமாலை நோய்களின் அறிகுறி கண்களில் தெரியவரும்.· மது, புகை, போதைப் பொருள்கள் உண்பவர்களின் கண்கள் எளிதில் பாதிப்படையும்.·தொலைக்காட்சியின் முன் அமர்ந்து அதிக நேரம் தூக்கமில்லாமல்நிகழ்ச்சிகளைப் பார்ப்பவர்களின் கண்கள் வறட்சி கண்டு கண்பார்வை குறைபாடுஉண்டாகும்.· நீரிழிவு நோய்க்காரர்களுக்கும் இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கும் கண் பார்வைக் குறைபாடு உண்டாகும்.· அடிக்கடி தலைவலி, தலைச்சுற்றல், கிறுகிறுப்பு உள்ளவர்களுக்கும் பார்வைக் குறைபாடு உண்டாகும்.வரும்முன் காக்க·கண்களில் ஏதேனும் தூசு விழுந்தாலோ அல்லது வலி, ஏற்பட்டாலோ கண்மருத்துவரை அணுகுவது நல்லது. மருத்துவரின் ஆலோசனை யில்லாமல் கண்களுக்குமருந்துகள் இடக் கூடாது.· அதிக வெயிலில் அல்லது வெப்பமான பகுதிகளுக்குச் செல்ல நேர்ந்தால் குளிர் கண்ணாடி அணிந்துகொள்ள வேண்டும்.· ஒரு நாளைக்கு 6 மணி நேரமாவது தூங்க வேண்டும். நல்ல தூக்கமே கண்களைப் பாதுகாக்கும்.·கணினியில் வேலை செய்பவர்கள் அதிக நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து வேலைசெய்யக் கூடாது. அவ்வப்போது குறைந்தது 5 நிமிடமாவது விழிகளை சுழலவிட்டுபின் கண்களை மூடி சிறிது நேரம் தியானம் செய்வதுபோல் இருக்க வேண்டும்.· உணவில் தினமும் கீரைகள், காய்கறிகள் சேர்த்துக்கொள்ள வேண்டும். காரட் கண்களுக்கு மிகவும் சிறந்தது.· எளிதில் சீரணமாகக்கூடிய உணவுகளை சாப்பிட்டு மலச்சிக்கல் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.· மது, புகை, போதை போன்றவற்றைத் தவிர்ப்பது நல்லது.· உடல் சூடு அடையாமலும், பித்த மாறுபாடு அடையாமலும் இருப்பதற்கு வாரம் ஒருமுறையாவது எண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டும்.· தொலைக்காட்சியை அதிக நேரம் பார்த்துக் கொண்டு இருக்கக் கூடாது.· மங்கலான ஒளியில் படிப்பதைத் தவிர்க்க வேண்டும்.· அதிக வெயில் இருக்கும்போது சூரியனைப் பார்க்கக்கூடாது.· நீரிழிவு நோய், இரத்த அழுத்தம் உள்ளவர்கள் அடிக்கடி கண் பரிசோதனை செய்துகொள்வது நல்லது.· அதிக மன அழுத்தம், டென்ஷன் கூட பார்வை நரம்புகளைப் பாதிக்கும். எனவே மன அழுத்தம் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

செவ்வாய், 13 ஜனவரி, 2009

சித்தர் பூமி - சதுரகிரிமலை

சதுரகிரி மலை. சாதாரண மலைகளைப் போலல்ல இது. வீரியம் நிறைந்த வினோதமான மலை. கணக்கற்ற இரகசியங்களைத் த‎ன்னுள்ளே பொதித்துக் கொண்டு அமைதியாய்க் காணப்படும் அபூர்வ மலை. சித்தர்களி‎ன் இராஜ்ஜியமாகவும், அபாயகரமான காட்டுவாழ் விலங்கினங்களி‎ன் புகலிடமாகவும், அபூர்வ சக்திகள் படைத்த மூலிகைகளி‎ன் வாழ்விடமாகவும் விளங்கும் இம்மலை, பரம்பொருள் சிவபரமாத்மாவி‎ன் அருட்கடாட்சம் பெற்றபடியால் சிவ‎ன்மலை எ‎ன்றும் மகாலிங்க மலை எ‎ன்றும் அழைக்கப்படுகிறது. சிவனும் பார்வதி தேவியும் இங்கே நிரந்தரமாகத் தங்கியிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பதாக சித்தர்களுக்கு வாக்குத் தந்திருப்பதால் இவ்விடம் தென்கயிலாயம் எ‎ன்றும் அழைக்கப்படுகிறது.
இம்மலை அஷ்டமாசித்திகள் பெற்ற பதினெட்டு சித்தர்களி‎ன் தலைமையிடமாகவும், மற்றும் பல சித்தர்கள் கூடி தத்தம் ராய்ச்சிகளை விவாதிக்கும் இடமாகவும் அறியப்படுகிறது. இம்மலையிலுள்ள நூற்றுக்கணக்கான குகைகளில் தங்கியிருந்து சிவனை வணங்கி வழிபட்டு வந்ததுட‎ன் மக்களி‎ன் நோய் தீர்க்கும், துன்பங்களைக் களையும் மருந்துகளைக் கண்டுபிடிக்கும் ராய்ச்சிகளிலும் சித்தர்கள் ஈடுபட்டு வந்துள்ள‎னர். சித்தர்பூமியாம் சதுரகிரியில் எண்ணற்ற மூலிகைகள் நிறைந்த வனம் உள்ளது. இன்றும் இம்மலையில் சித்தர் பெருமக்கள் அரூபமாக வாழ்ந்து வருவதாகக் கூறப்படுகிறது. சித்தர்களி‎ன் அதிர்வலைகள் மலையெங்கும் நிறைந்திருப்பதால் அதில் சிறிதாவது தமது உடலில் ஒட்டட்டும் என பக்தர்கள் விரும்பி ‏இங்கு வருகின்றனர்.அமைவிடம் சதுரகிரி, தமிழ்நாட்டில் விருதுநகர் மாவட்டத்தில் வத்றாப் என அழைக்கப்படும் வத்திறாயிருப்பு அரு‏கில் உள்ள தாணிப்பாறையில் உள்ளது. வத்றாப்பிலிருந்து சுமார் 10 கிமீ தொலைவிலும், வத்றாப் விலக்கிலிருந்து சுமார் 7 கிமீ தொலைவிலும் தாணிப்பாறை அமைந்துள்ளது. தெ‎ன்னந்தோப்புகளும், மாந்தோப்புகளும், கொய்யாத் தோப்புகளும் சூழ தாணிப்பாறை ரம்மியமாய் காட்சியளிக்கும். மலையி‎‎ன் அடிவாரத்திலிருந்து ஏறக்குறைய எட்டு கிமீ தூரத்தில் உச்சியில் மகாலிங்கம் ச‎ன்னதி அமைந்துள்ளது. ஒரு மலையல்ல, இரு மலையல்ல.. ஏழு மலைகளைக் கடந்துதா‎ன் கோவிலைச் சென்றடைய முடியும். ‎மலைகள் சுற்றிலும் சதுர வடிவில் அமைந்த படியால் சதுரகிரி எ‎ன்று பெயர்பெற்றதாகவும் சொல்கிறார்கள். நா‎ன்கு பெரிய மலைகள் கோவிலைச் சுற்றிலும் அரண் போல் அமைந்திருப்பதாலும் அவ்வாறு பெயர் பெற்றதாகச் சொல்வதும் உண்டு. ‘சதுர’ எ‎ன்றால் நா‎ன்கு, ‘கிரி’ எ‎ன்றால் மலை. சுற்றிலும் பெரிய மலைகள் இருந்தாலும் சிறு சிறு கிளை மலைகளும் உண்டு. ‏இவற்றையெல்லாம் தாண்டித்தா‎ன் மேலே செல்ல வேண்டும். ஒரு மலைக்கும் இன்னொரு மலைக்கும் இடைப்பட்ட பகுதி காட்டாற்றி‎‎ன் போக்கிடமாக உள்ளது

ஆன்மாக்களுடன் தொடர்பு கொள்ளும் எளிய முறை

ஆன்மாக்களுடன் தொடர்பு கொள்ளும் பயணத்திற்கான முதல் படி இது. மிக எளிய பயிற்சி; நல்ல மன அமைதியையும் கொடுக்கும்.அமைதியான ஒரு அறையில் ஒரு சிறிய விளக்கை மட்டும் எரிய விடுங்கள். உங்களுடைய நாற்காலியில் நன்றாக நிமிர்ந்து அமருங்கள். அதாவது உங்களுடைய முதுகெலும்பின் அடிப்பகுதி நாற்காலியின் பின்புறத்தில் நன்கு அழுந்தியிருக்குமாறு அமரவும். இரண்டு பாதங்களும் தரையில் முழுமையாகப் பதியவேண்டும். கால்கள் தரையைத் தொடவில்லையென்றால் சிறு முக்காலியில் வைத்துக் கொள்ளலாம்.உங்களுடைய இரண்டு உள்ளங்கைகளையும் தொடையின் மீது வைத்துக் கொள்ளுங்கள். கண்களை மூடிக் கொண்டு நான்கு எண்ணும் வரை மூச்சை உள்ளே இழுத்து நான்கு எண்ணிக்கை வரை மூச்சை நிறுத்திப் பின்னர் நான்கு எண்ணிக்கையில் மூச்சை வெளியே விடுங்கள். இது போல் மூன்று முறை செய்யுங்கள்; மனம் புத்துணர்வு அடையும்; அமைதி பெறும். இவ்விதம் தியானம் செய்யும்போது பின்னணியில் மிக மெலிதான இசையை இசைக்க விடுவது கூடுதல் பலன் தரும்!இப்போது மூடிய கண்களின் முன் தெரியும் அந்த இதமான வெளிச்சத்தில் மட்டும் கவனத்தை வைத்து உங்கள் இருக்கையை விட்டு மெதுவாக நடந்து வெளிச்சத்தை அடைவதாக உங்கள் மனதிற்குள் கற்பனை செய்யுங்கள். அந்த வெளிச்சம் மென்மையான, அமைதியான வரவேற்பை உங்களுக்கு அளிப்பதாக உணருங்கள்.நீங்கள் இந்த வெளிச்சத்தின் பாதையைப் பற்றிக்கொண்டு, ஒரு லிப்டில் ஏறுவது போல் உருவகம் செய்யவும். ஆடாமல்... குலுக்காமல்... மென்மையாக... அந்த லிப்ட் உங்களை நீங்கள் உட்கார்ந்திருக்கும் இடத்திலிருந்து மெதுவாக... மிக மெதுவாக... தூக்கிச் செல்வதை உணருங்கள். உங்களை விட்டு... தரையை விட்டு... உயரே கிளம்பி... கிளம்பி... உங்களுக்கு அப்பால்... மோன வெளியில்..அந்த லிப்டின் கதவுகள் விரிந்து திறக்க, அருமையான இயற்கைக் காட்சி கண் முன்னே விரியும்! நீங்கள் லிப்டிலிருந்து இறங்கி பச்சைப்பசேல் என்று விரிந்து கிடக்கும் புல்வெளியையும் இடையிடையே பல்வேறு வண்ணப்பூக்கள் சிரித்துத் தலையசைப்பதையும் காணுங்கள். உங்களை அழைத்துச் செல்ல அந்த லிப்டின் கதவுகள் எப்போதும் திறந்தேயிருப்பதால் எப்படித் திரும்புவது என்ற கவலை வேண்டாம்.அதோ தூரத்தில் ஒரு ஒற்றையடிப் பாதை... அங்கு ஒரு பெரிய மரம். அதன் அடர்ந்த நிழலில் ஒர் இருக்கை. நீங்கள் அந்தப் பாதையில் செல்ல...இதமான தென்றல் உங்கள் மேனியை வருடும். பறவைகளின் இனிமையான கீதங்கள் உங்களைத் தாலாட்டும். அருகில் ஓர் ஓடை 'சலசல' என்று சப்தமிட்டு ஓடும். அதோ... அங்கே... தொலைவில் விளையாடும் குழந்தைகளின் குதூகலக் குரல்கள்...நீங்கள் பார்த்த அந்த இருக்கையில் அமர்ந்து இந்த இனிமையை நுகருங்கள். ஒருவேளை அங்கு எவரேனும் உங்களைச் சந்திக்கலாம். அவர் உங்கள் வழிகாட்டியாகவோ, உங்களுக்கு உதவுபவராகவோ, உங்களை நேசிப்பவராகவோ இருக்கலாம். எப்படியோ இந்த இனிய தருணத்தைப் பரிபூரணமாக அனுபவியுங்கள்! தங்குதடையின்றி ரசியுங்கள்!இதோ... நீங்கள் புறப்படுவதற்கான நேரம் வந்துவிட்டது!.ஒன்றை நினைவில் கொள்ளுங்கள்!. எந்த முறையில் வந்தீர்களோ அதே முறையில் திரும்பிச் செல்ல வேண்டும். அந்த வெளிச்சத்தைப் பின்பற்றி திறந்திருக்கும் லிப்டினுள் ஏறிக் கொள்ளுங்கள். அதன் கதவுகள் தானே மூடி விடும். எங்கிருந்து வந்தீர்களோ அதே மேல் தளம் வழியாக... கீழே இறங்கி... மீண்டும் நீங்கள் அமர்ந்திருந்த அறையை அடைந்து விடுங்கள்.வெளிச்சத்திலிருந்து விலகி நடந்து நாற்காலியில் அமருங்கள். உங்கள் உடலின் இருப்பை அறியுங்கள். உங்கள் உடலின் எடையை உணருங்கள். உங்கள் கை, கால்களை அசைத்து இரத்த ஓட்டத்தைப் புதுப்பியுங்கள். பின்னர் கண்களை மெதுவாகத் திறவுங்கள். ஒரு வாய் தண்ணீர் குடியுங்கள்!இந்தப் பயிற்சியை நீங்கள் விரும்பும்போதெல்லாம் செய்யுங்கள். எந்தவித எதிர்பார்ப்புமில்லாது திரும்பத் திரும்ப பயிற்சியை அனுபவித்து செய்து வந்தால் ஒரு நாள் நீங்கள் அந்த இருக்கையில் உங்கள் வழிகாட்டியையோ, உதவியாளரையோ, நேசிப்பவரையோ சந்திக்க நேரிடலாம்!

சித்தர் பூமி - சதுரகிரிமலை


தல புராணம்கைலாயத்தில் சிவபெருமானையும் பார்வதியையும் தேவாதி தேவர்களும், ரிஷிகளும், முனிவர்களும் வழிபட்டு வந்தனர். அவர்கள் அனைவரும் இருவரையும் பிரதட்சணமாகச் சுற்றி வந்து வணங்கினர். பிருங்கி மகரிஷி என அழைக்கப்படும் தவ சிரேஷ்டப் பெருமகனார் மட்டும் சிவபெருமானை மட்டுமே சுற்றி வந்து வணங்கினார், பார்வதியை தவிர்த்துவிட்டு. பார்வதி சிவனைப் பார்த்து ஏன் அவர் தன்னைச் சுற்றி வரவில்லை எனக் கேட்டார். பூலோகத்தில் அனைத்தையும் துறந்துவிட்டு மோட்சகதியைத் தேடி தன்னிடம் வருவோருக்குத் தாம் மோட்சத்தை அளிப்பதாகப் பதிலளித்தார் பரமாத்மா. உலக இன்பங்களை அனுபவிக்க விரும்பும் பக்தர்கள் அவற்றை அடையும் சக்தியை தேவியிடமிருந்து பெறுவதால், தங்கள் இருவரையும் சேர்த்து வணங்குகி‎ன்றனர். ஆனால் பிருங்கி முனிவரோ தமக்கு மோட்சகதி மட்டும் கிடைத்தால் போதும் என விரும்புவதால் அவர் த‎ன்னை மற்றும் சுற்றி வந்து வணங்கியதாக மேலும் கூறினார் சிவ‎ன். இவ்வாறு பரம்பொருள் கூற, தன்னைத் தவிர்த்துவிட்டாரே எ‎‎‎ன்று கோபம் கொண்ட பார்வதி தேவி பிருங்கி மகரிஷிக்கு சாபமிட்டார், அவருடைய சக்தியெல்லாம் இழக்கட்டும் என்று. சக்தியை இழந்த மகரிஷி தடுமாறி கீழே விழ, த‎ன்னுடைய அடியாரைக் காக்கும் விதமாக ஓர் ஊ‎ன்றுகோலை எடுத்து சிவ‎ன் வீச, அதைப் பிடித்துக்கொண்டு தட்டுத் தடுமாறி பிருங்கி மகரிஷி வெளியேறினார். த‎ன்னை சிவனுட‎ன் இணைத்துக் கொண்டால் மட்டுமே த‎ன்னுடைய விருப்பங்களை நிறைவேற்ற முடியும் எ‎ன எண்ணிய பார்வதி, பரமாத்மனின் இடப்புற உடலாகத் த‎‎ன்னை ஆக்கிக்கொள்ள வேண்டி தவம் செய்யப் புறப்பட்டார். பரம்பொருளை விட்டுப் பிரிந்த பார்வதி சதுரகிரி வந்தடைந்து தவம் செய்ய சரியான இடம் தேடி மலையுச்சியை அடைந்து கல்லால மரத்தி‎ன் அடியில் அமர்ந்து சிவனைக் குறித்து தியானம் செய்யலானார். இந்த மரம் சட்டநாத முனிவரின் குகைக்கருகில் இருக்கிறது. அவ்வனப் பகுதி 12 ஆண்டுகளாகத் தொடர்ந்து வறட்சியி‎ன் பிடியில் சிக்கியிருந்தது. தெய்வமகளி‎ன் வருகையால் மரங்கள் மலர்ச்சியடைந்தன. செடிகளும், கொடிகளும் பூச்சொறிந்தன. புத்துணர்வு பெற்றது வனம். தெய்வத்தி‎ன் வருகையறிந்த சட்டநாதர் அவரை வரவேற்று, வந்த காரணத்தை வினவினார். பார்வதி தேவி‎யின் விளக்கத்தைக் கேட்டறிந்த சட்டநாதர், அவரது தவம் நிறைவேற அனைத்து உதவிகளையும் செய்தார்.பார்வதி தேவி சந்தனத்தைக் குழைத்து அத‎ன் மூலம் லிங்கம் ஒ‎ன்றை பிரதிஷ்டானம் செய்தார். அந்த லிங்கத்தை அனுதினமும் தவறாது பூஜித்து வந்த தேவி, கடும் தவத்தை மேற்கொண்டார். மனமுருகிய சிவ‎ன் தேவியி‎ன் தவத்தினை மெச்சி, த‎ன்னுடைய ரிஷப வாகனத்தில் காட்சி தந்து, தேவி வேண்டிய வரத்தினை அருளினார். சந்தன லிங்கத்தை தேவியே பூஜித்து வழிபட்டமையால் அதை தவத்தில் உயர்ந்த ரிஷிகளும், முனிவர்களும், சித்தர் பெருமக்களும் மட்டுமே பூஜிக்க வேண்டுமெ‎ன்று ஆணையிட்டார். இவ்வுலக வாழ்க்கையை விரும்பும் பக்தர்கள் த‎ன்னை இங்கே வந்து வழிபட்டால், இவ்வுலக வாழ்வி‎ன் இன்பத்தை அனுபவித்துக் கொண்டே அவர்கள் மோட்சகதியை அடையும் பக்குவத்திற்கு உட்படுத்தப்படுவார்கள் எனவும், இறுதியாக த‎ன்னுடன் இணைவார்கள் எ‎ன்றும் அறிவித்தார். அத‎ன் பின் எல்லோரையும் ஆசிர்வதித்த சிவபரமாத்மா த‎ன்னுடன் இணைந்த தேவியுட‎ன் அர்த்தநாரியாக கைலாயம் திரும்பினார். பி‎ன்னர், சட்டநாத முனி சந்தன மகாலிங்கத்தை வழிபட, அவருக்குப் பி‎ன் அவருடைய சீடர் காணாங்கி முனி வழிபட்டு வந்தார். இதுவே தல வரலாறு