வியாழன், 15 ஜனவரி, 2009

அழகிய குறிப்புகள்...


இயற்கையின் படைப்புகளில் ஒவ்வொன்றும் ஒருவித அழகுதான். பூக்கள் அழகு. பசுமை படர்ந்த புற்கள் அழகு, மலை அழகு, மழை அழகு. ஒவ்வொரு உயிருக்கும் தன் குழந்தை அழகு. அதுபோல் மனிதருக்கு அழகு அன்பான இதயமே.உள்ளம் அழகாக இருந்தால்தான் முகம் அழகாகும். இதனால்தான் அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்கின்றனர் .இன்றைய நவீன உலகில் இளம் பெண்களும் இளைஞர்களும் முகத்தை அழகு படுத்துகிறோம் என்ற பெயரில் விளம்பரங்களைப் பார்த்து கண்டபடி கிரீம்களைப் பூசிக்கொள்கின்றனர். இது முகத்தில் மேலும் பல பாதிப்புகளை உண்டாக்குகிறது. முகத் தோல் சுருக்கம் ஏற்படுகிறது.இதுபோல் இன்று உடலுக்குத் தேவையான ஊட்டச் சத்துள்ள உணவுகளை உண்பதில்லை. பாஸ்ட்புட் என்ற பெயரில் வரும் அரை வேக்காட்டு அரிசியைச் சாப்பிடுகின்றனர். மேலும் எண்ணெயில் பொரிக்கப்பட்ட உணவுகளையும், பதப்படுத்தப்பட்ட உணவுகளையும் பாக்கெட்டுகளில் அடைக்கப் பட்ட உணவுகளையும் சாப்பிடுகின்றனர். இதனால் அஜீரணக் கோளாறு ஏற்பட்டு குடலில் உள்ள வாயு சீற்றமாகின்றது. இதனால் உடலில் உள்ள கொழுப்புப் பொருட்கள் கரையாமல் அப்படியே இரத்தக் குழாய்களிலும் குடல் பகுதிகளிலும் படிந்துவிடுகின்றன. இதனால் உடல் சூடாகி முகத்தில் பருக்களாகவும், வெப்பக் கட்டிகளாகவும் தோன்றும்.மேலும் மலச்சிக்கல், மனச்சிக்கல் இருந்தால் முகத்தில் கருப்பு படரும்.இரத்தத்தில் ஏதேனும் குறையிருந்தால் முகத்தில்தான் முதலில் தெரியவரும். பல மருத்துவர்கள் முகத்தைப் பார்த்தவுடன் எந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என்பதைக் கண்டறிவார்கள்.கண்களைச் சுற்றி கருவளையம் தோன்றும். முக வறட்சி உண்டாகும். இதனால் முக அழகு கெடும். இவர்கள் எளிய முறையில் தங்கள் முக அழகைப் பாதுகாக்க சில வழிமுறைகளைப் பின்பற்றினால் நல்லது.* முகத்தில் பருக்கள் தோன்றினால் அவற்றைக் கிள்ளக் கூடாது.* முகத்தைக் கழுவி மென்மையான பருத்தித் துணியால் துடைக்க வேண்டும்.* மலச்சிக்கல் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். எளிதில் சீரணமாகக் கூடிய உணவுகளைச் சாப்பிட வேண்டும். உடல் சூடு ஏற்படாதவாறு இருக்க அதிகளவு தண்ணீர் அருந்த வேண்டும்.* இரவு நேரங்களில் அதிகளவு கண்விழித்து கணிணியோ, தொலைக்காட்சியோ பார்ப்பதைத் தவிர்க்க வேண்டும்.* ஒரு நாளைக்கு குறைந்தது 6 மணி நேரமாவது தூங்க வேண்டும்.* தினமும் உடற்பயிற்சி செய்வது நல்லது.* அதிக வேலைப்பளு, அதிக பட்டினி ஆகாது.* எண்ணெயில் பொரிக்கப்பட்ட உணவுகளைத் தவிர்ப்பது நல்லது.* உணவருந்தும்போது புத்தகம் படித்துக்கொண்டோ, தொலைக்காட்சி பார்த்துக்கொண்டோ இருக்கக்கூடாது.* தியானம், யோகா, செய்வது நல்லது.* மாதவிலக்குக் காலங்களில் முகத்தில் அதிக பருக்கள் தோன்றும். அந்த காலங்களில் மென்மையான உணவுகளை உண்பது நல்லது.5 கிராம் வெந்தயம் எடுத்து அதில் நன்னாரி 5 கிராம் சேர்த்து சிறிது நேரம் ஊறவைத்து வடிகட்டி அந்த நீருடன்ரோஜா இதழ் சந்தனத்தூள்காய்ந்த எலுமிச்சை தோல்செஞ்சந்தனம்இவற்றைச் சேர்த்து அரைத்து அதனுடன் முட்டையின் வெள்ளைக் கரு சேர்த்து குழைத்து முகத்தில் பூசி அரை மணி நேரம் ஊறவிட்டு பிறகு சிறுபயறு மாவு கொண்டு முகத்தைக் கழுவி வந்தால் முகப்பரு, உஷ்ணத்தால் வரும் சீழ் கட்டிகள், கருவளையம், முக வறட்சி போன்றவை நீங்கி முகம் பொலிவு பெறும்.சிலருக்குக் கழுத்தில் செயின் போட்ட பகுதிகளில் கருத்து காணப்படும். மேலும் சிலருக்கு இறுக்கமான ஆடை அணிவதால் உடம்பில் சில பகுதிகளில் தோல் கறுத்து காணப்படும். அப்படி கறுத்த பகுதிகளில் இதனைப் பூசி வந்தால் கருமை நிறம் மாறும்.செம்பருத்திப் பூ இதழ்களை நன்கு மை போல் அரைத்து அதனுடன் பயத்த மாவு கலந்து முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து முகம் கழுவி வந்தால் முகத்தில் வளரும் தேவையற்ற பூனைமுடிகள் உதிரும்.

கருத்துகள் இல்லை: