திங்கள், 22 டிசம்பர், 2008

கயிலாயத்தில் ஒரு நாள்


குடத்துக்குள் ஆகாயம் இருக்கிறது. ஆகாயம் என்பது என்ன? வெளி. ஆனால், அதிலும் வஸ்து இருக்கிறது. குடத்துக்குள் வேறு பொருளை அடைக்காவிட்டால் அந்த இடத்தில் ஆகாயம் அடைகிறது. அந்த ஆகாயம் எப்படி பெரிய அகில ஆகாயத்தில் கலக்கிறதோ அதே மாதிரி ஜீவாத்மாவை பரமாத்மாவில் லயிக்கச் செய்ய வேண்டும். இரண்டும் ஒன்று என்ற பேதமற்ற பாவனையில் சதா மூழ்கி மோனத்தில் இருப்பாயாக. விவேகசூடாமணியில் ஜகத்குரு ஆதிசங்கரர்காஞ்சிபுரம் வரதராஜர் கோயிலிலிருந்து அடுத்து சிவகாஞ்சியில் உள்ள ஏகாம்பரேஸ்வரர் கோயில் நோக்கி நடந்தார் ஜகத்குரு ஆதிசங்கரர். நடக்கும்போது அவருள் ஒரு பரவச உணர்வு ஓடிற்று. இந்தக் காஞ்சி மிகவும் புனிதமானது. மிகவும் தெய்வீகமானது என்ற உண்மை அவருக்குள் பூப்பூத்தது. தான் நிறுவிய மடங்களுக்கெல்லாம் தலையாயதாக ஒரு மடத்தை இங்கே நிறுவி, இந்து மதத்தை உய்விக்கும் ஓர் ஆலவிதையை விதைக்க வேண்டும் என்ற ஆவல் ஆசார்யாளுக்குள் உண்டாயிற்று. தான் காஞ்சியில் நிறுவப்போகும் சங்கரமடம் காலம் காலமாக, பல்லாயிரம் ஆண்டுகளுக்குச் செழித்திருந்து, பாரதத்துக்கே ஆன்மிகப் பணியாற்றும் என்ற உண்மை அவருக்குள் ஓடிற்று.ஏகாம்பரநாதர் கோயிலுக்கு முன்பாக ஒரு வெற்றிடத்தில் நின்றார் சங்கரர். கண்மூடினார். இந்த இடம்... இந்த இடம்தான் என்று அவருக்குள் தோன்றிற்று. மகிழ்வுடன் ஏகாம்பரநாதர் கோயிலுக்குள் காலடி பதித்தார்.முதலில் அவர் அடைந்தது அந்த மாமரத்தடியை. மரத்தை அண்ணாந்து பார்த்த ஆசார்யாள், அதைக் கையெடுத்து வணங்கினார். அதன் சிறப்பு அவருக்குத் தெரியும்.அந்தக் கதை...கயிலாயத்தில் ஒரு நாள்.காதல் வசப்பட்டிருந்த சிவபெருமான், பார்வதியோடு அர்த்தாசனத்தில், சம அந்தஸ்து கொடுத்து அமர்ந்திருந்தார்.அப்போது ஈசனின் பிரியமானவர்களான கோடிசக்திகள் அவரைக் கோபத்துடன் நெருங்கினார்கள். ``இறைவா, நீங்கள் பார்வதிக்கு அர்த்தாசனம் கொடுத்து, சம அந்தஸ்து தந்திருப்பதைப்போல் எங்களுக்கும் தர வேண்டும்'' என்று வினவினார்கள்.சிவபெருமான் புன்னகைத்தார். ``இந்த கயிலாயத்தில் உள்ள ஆண்கள் அனைவரும் என்னுடைய அம்சத்தில் தோன்றியவர்கள். அதுபோல இங்கேயுள்ள பெண்கள் அனைவரும் பார்வதிதேவியின் அம்சமாக உருவானவர்கள். எனவே, ஆண்களுக்கு நான் தலைவன். பெண்களுக்கு பார்வதிதான் தலைவி. இதிலிருந்தே புரியவில்லையா? தலைவனுக்கும், தலைவிக்கும் கட்டுப்பட்டவர்கள்தான் நீங்கள். உங்களுக்கு எப்படி நான் சரியாசனம் கொடுக்க முடியும்? எனக்குச் சரிநிகராக அமரக்கூடியவள் பார்வதி மட்டும்தான்'' என்று கூறினார் இறைவன்.சக்திகோடிகள் நொந்துபோய் விட்டார்கள். ``எங்கள் நாதரே, சக்தி கோடியான எங்களுக்குச் சரியாசனம் கொடுக்காதது தவறு. எங்களைவிட பார்வதி எந்த விதத்தில் உயர்ந்தவள்? கல்வி கேள்விகளில் சிறந்தவளா? புத்திசாதுர்யம் மிகுந்தவளா? இல்லை, எங்களைவிடத்தான் அழகியா?'' என்றெல்லாம் அவதூறாகப் பேசினார்கள்.அவர்களின் கர்வத்தைப் போக்கடிக்க விரும்பிய இறைவன், அந்தப் பெண்கள் அணிந்திருந்த உடைகள் எல்லாம் மாயமாக மறைந்து போகும்படி செய்துவிட்டு, கண்களை மூடிக்கொண்டுவிட்டார்.கோடி சக்திகளும் நிர்வாணமாகக் காட்சியளிப்பதைக் கண்ட பார்வதி உடனே, தானே புடவையாக மாறி, அவர்களின் மானத்தைக் காத்தாள். இத்தனை இழித்துச் சொல்லியும், பார்வதி தங்களுக்கு உதவியதைக் கண்ட சக்திகள், வெட்கமாய்த் தலைகுனிந்தார்கள்.சிவபெருமான்தான் ஒரு முகூர்த்த நேரம் கண்களை இறுக மூடிக் கொண்டுவிட்டாரே, அதனால் அவரது கண்களான சூரியன், சந்திரன், அக்னி ஆகியோர் தத்தம் வேலைகளைச் செய்ய முடியாமல், சும்மா இருந்து விட்டார்கள். அதனால், உலகமெங்கும் இருள் சூழ்ந்துவிட்டது. எல்லா ஜீவராசிகளும், செயலற்று இருந்தன. எங்கும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடிற்று. ஆம். பிரளயம் உண்டாகிவிட்டது.மார்க்கண்டேயர், உலகம் தண்ணீரில் மூழ்கி அழிவதைக் கண்ணால் பார்த்தார். அவரும் பிடிப்பாரில்லாமல் தண்ணீரில் தத்தளித்தபடியே தன்னால் ஏதாவது செய்ய முடியுமா என்று யோசித்தார்.உடனே ஈசனைக் குறித்து தியானம் செய்ய ஆரம்பித்தார். ``இறைவனே, சிவபெருமானே, பிரளய வெள்ளத்தில் தத்தளித்து நீந்திக்கொண்டிருக்கும் என்னை, நீங்கள்தான் காப்பாற்ற வேண்டும்,'' என்று பிரார்த்தித்தார்.அப்போது வேதவடிவமான மாமர இலை ஒன்று வெள்ளத்தில் மிதந்தபடி தெரிந்தது. அதன் அருகே சென்றார் மார்க்கண்டேயர். என்ன ஆச்சர்யம்! அந்த மாவிலை திடீரென கிளை பரப்பி, பிரமாண்டமான மாமரமாக கனிகளுடன் வளர ஆரம்பித்தது.அதைக்கண்ட மார்க்கண்டேயர், இது இறைவனின் கருணைதான் என்பதை உணர்ந்து, அந்த மரத்தின் மேல் வேகமாக ஏறினார். அதன் உச்சிக்குச் சென்று, சுற்றிலும் பிரளய வெள்ளம் சுழன்று ஓடுவதைக் கண்டார்.சிவபெருமானே மாமரமாக வந்து தன்னைக் காப்பாற்றியிருப்பதாக நினைத்த அவர், மரத்தின் உச்சியில் இருந்தபடியே யதேச்சையாக கீழே, அதன் வேர்ப்பகுதியைப் பார்த்தார், மெய்சிலிர்த்துப் போனார்.அங்கே ஜோதி வடிவமாக, சிவ சொரூபமாக பிரமாண்டமான ஒரு நகரமே தெரிந்ததைக் கண்டதும் அவர் அடைந்த ஆச்சர்யத்துக்கு அளவே இல்லை.`உலகமே அழிந்து போயிருக்க, இந்தப் பிரளய வெள்ளத்திலும் ஒரே ஒரு நகரம் மட்டும் எந்தப் பாதிப்பும் இல்லாமல் தண்ணீரின் மத்தியில் ஒரு தீவு போல ஜோதி வடிவில் காட்சியளிக்கிறதே' என்று வியந்தபடியே, மாமரத்தின் மேலேயிருந்து கீழே இறங்கி வந்தார் மார்க்கண்டேயர்.அப்போது, அந்த மாமரத்தின் ஓர் ஓரமாக நின்று, அந்த மரத்திலிருந்த மாம்பழம் ஒன்றைப் பறித்து யாரோ தின்று கொண்டிருப்பதைப் பார்த்தார் முனிவர்.``யாரப்பா நீ?'' என்று அவர் கேட்க, அந்த மனிதன் - இல்லையில்லை- தெய்வம் திரும்பிப் பார்த்தது. அவர்... முருகப் பெருமான்!முருகனைக் கண்ட முனிவர் மெய்சிலிர்த்து, வணங்கி, ``கந்தனே... கதிர்வேலனே... இந்த இடத்தின் பெயர் என்ன? இது மட்டும் அழியாமல் இருப்பதேன்? இந்த மாமரத்தின் சிறப்பு என்ன என்பதை எனக்குச் சொல்ல வேண்டும்'' என்று இறைஞ்சினார்.உடனே முருகப்பெருமான் புன்னகையுடன், ``சொல்கிறேன் மார்க்கண்டேயா... என்றும் அழியாத இந்த இடத்தின் பெயர் காஞ்சி. பிரளயத்தையே வென்ற புண்ணிய பூமி இது. ஒவ்வொரு முறை பிரளயம் ஏற்படும்போதும் காமாட்சிதேவி, தன் வல்லமையால் இந்த காஞ்சியைக் காப்பாற்றி வருவதால், பிரளயஜித் என்றும் இந்த ஊரைச் சொல்லலாம். இந்த மாமரம் முழுக்க முழுக்க சிவபெருமானின் வடிவமாகும். அவரே இந்த மரத்துக்கு பீஜமாகி, விருட்ச ரூபமாக தரிசனம் தருகிறார். இந்த மரத்தில் பழுக்கும் பழங்கள் வேத வித்யா சொரூபமாகும். இதைச் சாப்பிட்டவர்கள் வேத வித்தைகளில் குருவாகத் திகழ்வார்கள்.''அதைக் கேட்டதும் மார்க்கண்டேயர், முருகனை சாஷ்டாங்கமாக வணங்கிவிட்டு, தானும் அந்த ஏகாம்பர மாமரத்திலிருந்து ஒரு பழத்தைப் பறித்து உண்டார்.கச்சிஏகம்பனின் கதையை மனத்துக்குள் நினைத்தபடி மூலவரை தரிசிக்க கர்ப்பகிரகம் நோக்கி நடந்தார் ஜகத்குரு ஆதிசங்கரர்.அங்கே, எங்கும் இல்லாததுபோல் மெலிதாக, சற்றே சாய்ந்தபடி லிங்க உருவில் காட்சி தந்த ஏகாம்பரநாதரை வணங்கினார். நமஸ்கரித்தார். கண்மூடி நெடுநேரம் நின்றார்.ஜகத்குரு கண்விழித்தபோது, ``ஏகாம்பர நாதரின் வடிவம் ஏன் இப்படி வித்தியாசமாக இருக்கிறது? அவர் எதற்காக வந்தார்?'' என்று வினா எழுப்பினார் ஒரு சீடர்.ஆசார்யாள் புன்னகைத்தார். ``எதற்காக வந்தாரா? நம் காமாட்சியம்மனைத் திருமணம் புரியத்தான் இங்கே வந்தார். அந்தக் கதையைச் சொல்கிறேன் கேள்'' ஆரம்பித்தார் ஆதிசங்கரர்.வெள்ளத்தில் சிக்குண்டவன் கரையையும், வெய்யிலில் தவிப்பவன் நிழலையும், மழையில் தவிப்பவன் கூரையையும், இருளில் சிக்கியவன் ஒளிவிளக்கையும், குளிரில் நடுங்குபவன் தீயையும் எப்படி உளமார நாடுவானோ, அதுபோல மனமே, பயத்தைப் போக்கி, இன்பத்தை அளிக்கும் சிவபெருமானின் பாதக்கமலங்களை நீ நாடுவாயாக. சிவானந்த லகரியில் ஜகத்குரு ஆதிசங்கரர்ஒரு சமயம் பார்வதிதேவி விளையாட்டாய், துடுக்குத்தனமாய் ஒரு காரியம் செய்தாள்.என்ன அது?சிவபெருமான் அமர்ந்திருக்கும்போது அவருக்குத் தெரியாமல் பின்னால் பதுங்கிச் சென்று, அவரது கண்களை இறுகப் பொத்தினாள். நாமெல்லாம் கண்ணாமூச்சி ஆடுவோமே அப்படி!ஆனால், நடந்தது விபரீதம்! ஈசனின் மூன்று கண்களும் எவை? சூரியன், சந்திரன், அக்னி ஆயிற்றே.பார்வதி கண்களைப் பொத்தியதும் உலகமே இருண்டு போயிற்று. உலகில் உள்ள எல்லா உயிரினங்களின் பாவங்களும் கருமை நிறமாகப் பெருகி, வெளிவந்தன. அவையனைத்தும் தங்க நிறத்தில் இருந்த பார்வதியின் மேலே பட்டு, அவளைக் கறுப்பு நிறமாக மாற்றிவிட்டன.அந்த சப்தம் கேட்டுத் திடுக்கிட்டுக் கண்விழித்த பார்வதி தேவி, ஈசனைப் பொத்தியிருந்த தன் கைகளை விருட்டென விலக்கினாள். அப்போதுதன் உடலின் நிறம் கருமையாக மாறியிருப்பது கண்டு கலங்கினாள், வருந்தினாள்.``ஈஸ்வரா, தெய்வமே.... தகதகவென தங்கம்போல் ஜொலிக்கும் என் மேனி, இப்படி மாறிவிட்டதே... என்ன காரணம்?'' என்று இறைவனை வேண்டினாள்.``தேவி, இது கருமை நிறமல்ல. உலகில் உள்ள ஜீவராசிகளின் பாவ மூட்டை இது!''பார்வதி துடித்துப் போய்விட்டாள். ``ஈசனே, இந்தப் பாவச் சுமையிலிருந்து நான் விடுபடுவது எப்படி?'' என்று வினவினாள்.அதற்கு இறைவன், ``எல்லாம் நன்மைக்கே. நீ உடனே பத்ரிக்குச் சென்று அங்கே ஒரு குழந்தையாக மாறுவாயாக. அப்போது, குழந்தைப் பேறில்லாத காத்யாயன முனிவர், அந்தப் பக்கம் வருவார். அவர், தனியாக இருக்கும் பச்சிளம் குழந்தையான உன்னைக் கண்டதும் வாரியெடுத்துக் கொள்வார். அவருடைய ஆசிரமத்திலேயே நீ சில காலம் வாழ்வாயாக. அதற்குள் நீ யார் என்பதை காத்யாயன முனிவர் புரிந்து கொள்வார். பின் எனது ஆணைப்படி யோக தண்டம், ஜபமாலை, தீபஸ்தம்பம், குடங்கள், விசிறி, சாமரம், வறுத்த பயிறு, குடை ஆகியவற்றை உனக்குத் தருவார். அவைகளைப் பெற்றுக் கொண்டு நீ காசிக்குச் செல்ல வேண்டும்.நீ காசிக்குச் செல்லும்போது அங்கே கடும் பஞ்சம் நிலவிக் கொண்டிருக்கும். உணவுக்காக மக்கள் அல்லாடுவார்கள். நீ அந்த மக்களின் பசிப்பிணியைப் போக்கி, அன்னபூரணியாக அந்த ஊரிலேயே பன்னிரண்டு வருடங்கள் இருப்பாயாக.அதன்பின்னர் தெற்குத் திசை நோக்கிச் செல். அப்படிச் செல்லும்போது எந்த இடத்தில் உன் கையிலிருக்கும் ருத்ராட்சமாலை, வில்வ மாலையாகவும்; குடை, நாகாபரணமாகவும்; யோக தண்டம், திரிசூலமாகவும்; விசிறி, கிளியாகவும்; சாமரம், பெண்களாகவும்; குடம், தீபமாகவும்; வறுத்த பயிறு, முளைப் பயிராகவும்; கங்கை நீர், பாலாகவும் மாறுகிறதோ அந்த இடம்தான் புனிதமான காஞ்சித் தலம் என்பதைப் புரிந்து கொள்வாயாக.அந்தக் காஞ்சியில் மாமரத்தின் அடியில் நான் லிங்க உருவில் இருப்பேன். அந்த லிங்கத்தை வழிபட்டு வருவாயாக. அந்த லிங்கத்தை தினசரி பாலால் அபிஷேகம் செய்து நாகாபரணத்தால் அலங்காரம் செய்து வில்வ மாலையைச் சாத்தி, வணங்குவாயாக. லிங்கத்தின் இருபக்கமும், இரண்டு பெண்களைக் காவலாக வைத்து, கிளியைக் கையில் ஏந்தி, ஊசியை நாட்டி, அதன் நுனியில் பஞ்சாக்கினியின் நடுவிலிருந்து என்னைக் குறித்து தவம் செய்வாயாக. அப்போது நான் உனக்குக் காட்சி தந்து, உன்னைத் திருமணமும் செய்து கொள்கிறேன். அந்த விநாடியே உன் கருமை நிறம் விலகி, வழக்கமான தங்க நிறத்துடன் ஜொலிப்பாய்'' என்று கூறினார்.ஈசனின் உத்தரவுப்படி பார்வதிதேவி, பத்ரிகாசிரமம் சென்றாள். காத்யாயன முனிவரின் குழந்தையாக அவதரித்தாள். மெல்ல வளர்ந்தாள். பின் உரிய வயதில் முனிவரிடம் ஜபமாலை முதலியவற்றைப் பெற்றுக்கொண்டு காசிக்குச் சென்று, பஞ்சம் தீர்த்து அன்னபூரணி ஆனாள்.பின்னர் தென்னாடு நோக்கி நடந்தாள். ஈசன் கூறியபடி யோக தண்டம் முதலானவை ஓரிடத்தில் மாற, அதுதான் காஞ்சிபுரம் என்பதைப் புரிந்து கொண்டாள். அங்கே ஒவ்வொரு மாமரமாகத் தேடிக்கொண்டே போனாள். கடைசியில் அந்த லிங்கத்தைக் கண்டுபிடித்து அகமகிழ்ந்தாள். அங்கேயே தங்கி, நேரம் தவறாமல் ஈஸ்வரனை வழிபட்டு, தவம் புரிந்து வந்தாள்.எவ்வளவு தவம் செய்தும் சிவபெருமான், அவளுக்குக் காட்சி தரவில்லை. அந்த சமயம், திரிலோக சஞ்சாரியான நாரதர் அந்தப்பக்கம் வந்தார். அவரிடம் தன் குறையைச் சொன்னாள் பார்வதிதேவி.``கவலைப்படாதே உமையே, பஞ்சபாண மந்திரத்தை நான் உனக்கு உபதேசிக்கிறேன். அதைச் சொன்னால் உன் எண்ணம் கைகூடும்..'' என்ற அவர், அந்த மந்திரத்தை உபதேசம் செய்துவிட்டு மறைந்தார்.அதன்படி தேவி, அந்தப் பஞ்சபாண மந்திரத்தை நெடுங்காலம் உச்சரித்து தவம் செய்தாள்.அந்த தவ அக்னி, கயிலாயம் வரை சென்று தகித்தது. அதனால் மோகாவேசம் கொண்டார் இறைவன். தன் திருமுடியில் வசிக்கும் கங்கையில் மூழ்கி எழுந்தும் அவரது ஆவேசம் அடங்கவில்லை.``கங்கையே, உன் வடிவமான நதியில் மூழ்கியும் என் அக்னி தீரவில்லை. உடனே நீ பார்வதி தவம் செய்யும் இடத்திற்குச் சென்று, அவள் செய்யும் மந்திரங்களைத் தடுத்து நிறுத்து'' என்று ஆணையிட்டார்.உடனே கங்கையும் பிரளயமாய் காஞ்சிக்குப் புறப்பட்டாள். அதைக் கண்ட பார்வதிதேவி, தன் சக்தியில் ஒன்றான காளியை ஏவி, அந்தப் பிரளயத்தைத் தடுக்கச் சொன்னாள்.அதன்படியே கோபத்துடன் சென்ற காளிதேவி, தன் கையில் இருந்த மண்டை ஓட்டில் பிரளய வெள்ளம் எல்லாவற்றையும் உள்ளடக்கி விட்டாள். அதனால் அந்தக் காளிக்கு, பிரளய பந்தினி என்ற பெயர் ஏற்பட்டது.கங்கையும் தோற்றுப்போனதைக் கேள்விப்பட்ட சிவபெருமான், அடங்காக் கோபம் கொண்டார்.மீண்டும் ஒரு பெருவெள்ளம் பார்வதிதேவியை நோக்கிப் பாய்ந்தோடி வந்தது. யார் அது? இதிலென்ன சந்தேகம்... சிவபெருமானின் வடிவமே அது. ஆயிரம் முகங்களோடு மாபெரும் பிரளயமாய் வானுயர உயர்ந்து வந்தது அந்த வெள்ளம்.அவ்வளவுதான்..! அதைப் பார்த்ததும் பார்வதிதேவியே நடுநடுங்கிப்போனாள். அந்த ஊழி வெள்ளம், பார்வதிதேவியைப் பிரவாகமாய் நெருங்க, கதறினாள் தேவி.ஏன்?தனக்கு ஏதாவது ஒன்றாகிவிட்டாலும் கவலையில்லை. தான் பூஜித்து வரும் மணல் லிங்கம் மாசுபட்டுவிடுமோ... கரைந்து விடுமோ... என்று கலங்கினாள். ``ஈஸ்வரா...!'' என்று கதறியபடி, தன் இரு கரங்களால் அந்த சிவலிங்கத்தை மார்போடு சேர்த்து இறுகக் கட்டித் தழுவிக்கொண்டாள்.அந்தத் தழுவலில், ஸ்பரிசத்தில் அதுவரை ஈசனைத் தகித்துக் கொண்டிருந்த காமாக்னி கரைந்து போனது.அந்த வினாடியே பார்வதி தேவியின் கருமை நிறம் மறைந்து பொன்னிறம் மீண்டும் தோன்றிற்று.சிவபெருமான், பார்வதிதேவிக்குக் காட்சி தந்தார். தேவியைத் திருமணம் செய்துகொள்ளவும் ஆசைப்பட்டார்.அங்கே அப்போது வந்த சிவகணங்களும், ரிஷிகளும் பார்வதி, பரமேஸ்வரரின் அழகைக் கண்டு வியந்து அவர்களைத் திருமணக் கோலத்தில் தரிசிக்க விரும்பி வேண்டினார்கள்.உடனே இறைவன், திருமாலை அழைத்து, ``எங்கள் இருவருக்கும் திருமணம் நடக்க ஏற்பாடு செய்யுங்கள்'' என்றார்.உடனே மகாவிஷ்ணு, தேவர்களை அழைத்து, ``நமது உலகங்களுக்குச் சென்று, திருமணத்திற்கு வேண்டிய உடைகள், உடைமைகள், மலர்கள் எல்லாவற்றையும் கொண்டு வாருங்கள்'' என்று கூற, அவர்களும் விரைந்தார்கள்.காஞ்சிபுரம் நகரமே அழகாக அலங்காரம் செய்யப்பட்டது. வேதாகம முறைப்படி ஒன்பது நாட்கள் திருவிழாக்கள் நடந்தன. பத்தாவது தினத்தில்,உத்திர நாளில், சிவபெருமானான ஏகாம்பரநாதரையும், பார்வதியான காமாட்சி தேவியையும் திருமண மேடையில் அமர்த்தினார்கள். மங்கள வாத்தியங்கள் முழங்கின. மந்திர கோஷங்கள் ஒலித்தன.மகாவிஷ்ணுவும், மகாலஷ்மியும் அவர்களுக்குத் திருமணம் செய்து வைக்க ஆரம்பித்தார்கள்.லட்சுமி தன் திருக்கரத்தால் பாலை ஊற்ற, ஏகாம்பரேஸ்வரரின் திருப்பாதத்தை, மகாவிஷ்ணு அலம்பினார்.பின்னர் ஏகாம்பரநாதரின் திருக்கரத்தின் மீது காமாட்சியம்மனின் திருக்கரத்தை வைத்து, மந்திர நீர் வார்த்தார். சங்கு, பேரிகை, துந்துபி முதலான வாத்தியங்கள் முழங்கின. அந்தணர்கள் மந்திரம் ஓதினார்கள். பிரம்மா ஹோமத்தீயை வளர்த்தார்.சுபமுகூர்த்த நேரத்தில் காமாட்சி தேவியின் திருக்கழுத்தில் ஏகாம்பரநாதர் திருமாங்கல்யத்தை அணிவித்தார்.அப்போது தேவர்கள், முனிவர்கள், தெய்வங்கள் என்று அனைவரும் ஜய கோஷமிட்டார்கள். புதுமணத் தம்பதிகளை மனமார வாழ்த்தினார்கள்.கண்மூடி ஏகாம்பரநாதர் சன்னதியில் நின்றிருந்த ஜகத்குரு ஆதிசங்கரரின் மனத்திற்குள் காமாட்சி, ஏகாம்பரேஸ்வரர் திருமணக் காட்சி ஓடிற்று. அதைக் கண்டு பல நிமிடங்கள் பரவச நிலையில் இருந்தார்.அதே பரவசத்தோடு, அற்புதமான சிவ பஞ்சாக்ஷர துதியால் பரமேஷ்வரனைப் போற்றித் துதித்தார்.சிவபெருமான் மீது ஆதிசங்கரர் பாடிய அந்த சிறப்பான ஸ்ரீ சிவபஞ்சாக்ஷர ஸ்தோத்திரத்தைப் படிக்கலாமா!(தமிழாக்கம்: ரா.பத்மநாபன், மும்பை 89).நாகேந்த்ரஹாராயத்ரிலோசனாயபஸ்மாங்கராகாயமஹேச்வராய,நித்யாய சுத்தாய திகம்பராயதஸ்மை நகாராய நம: சிவாயமந்தாகிநீஸலில சந்தனசர் சிதாயநந்தீச்வர ப்ரமதனாத மஹேச்வராய,மந்தாரமுக்யபஹுபுஷ்பஸுபூஜிதாயதஸ்மை மகார மஹிதாய நம:சிவாய.நாகபதி மாலையானே!நயனங்கள்மூன்றானே!ஆகமணி நீற்றானே! அருந்தேவா பேரீசா!ஆகுநித்ய! தூயவனே! ஆர்திசையின் ஆடையனே!நாகமுறை நகாரனே! நமசிவாயனே! போற்றி! மன்மங்கைநீர்ச்சாந்தம் மணங்கமழப் பூசிட்டோய்!தொல்நந்திப்ரமதபதிதூத்தலைவா! மகேசனே!நல்மணமந்தாரமுதல்நறைமலராற் பூசைகொள்வோய்!நல்லுறவே மகாரனே! நமசிவாயனே!போற்றி! சிவாய கௌரீ வத்னாப்ஜப்ருந்தஸூர்யாய தக்ஷாத்வர நாசனாய,ஸ்ரீ நீலகண்டாய வ்ருஷத்வஜாயதஸ்மை சிகாராய நம: சிவாய.வஸிஷ்ட கும்போத்பவ கௌதமாதிமுனீந்த்ர தேவார்சித சேகராய,சந்த்ரார்க வைச்வாநர லோசநாயதஸ்மை வகாராய நம: சிவாய சிவமூர்த்தி! கவுரிமுக சீர்க்கமல வனமலர்த்தும்நவக்கதிரே! தட்சமகம் நசித்திட்டோய்! நீலகண்டா!துவண்டாடும் விடைக்கொடியைத்தூக்கியவா! தொல்பொருளே!நவநவத்தோய்! சிகாரனே! நமசிவாயனே போற்றி!வசிட்டமுனி கலசமுனி கௌதமமாமுனிவோர்கள்இசைவானோர் அருச்சிக்கும் எந்தை! அரசேகரனே!மிசைக்கதிரோன் திங்கள், தீவிழிமூன்றாய் ஆனவனே!நசிவில்லாய்! வகாரனே நமசிவாயனே! போற்றியக்ஷஸ்வரூபாய ஜடாதராயபினாக ஹஸ்தாய ஸனாதனாய,திவ்யாய தேவாய திகம்பராயதஸ்மை யகாராய நம சிவாய
பஞ்சாக்ஷரமிதம் புண்யம் ய: படேத் சிவஸந்திதௌ.சிவலோ கமவாப்நோதி சிவேன ஸஹமோததே- யட்சஉரு எடுத்தோனே! எழிலாரும் சடை தரித்தோய்!இச்சையுடன் பினாகமதை ஏந்து திருக் கையானே!அட்சரனே! சிறந்தோனே! அருந்தேவா! திகம்பரனே!நட்புநல யகாரனே! நமசிவா யனே! போற்றி!சிவனுடையப் பஞ்சாட்சரத்தால்சேர்த்திட்ட இத்துதியைச்சிவனுடைய சந்நதிமுன் செப்பிடுவார் யாவரவர்சிவனுலகை அடைந்து, பினர் சிவனோடும் ஒன்றிடுவார்:சிவனுடைப்பேர் ஆனந்தம்சேர்ந்ததனில் ஆழ்குவரே!கண் திறந்து மீண்டும் ஏகாம்பர நாதரை தரிசனம் செய்துவிட்டு வெளியில் வந்தார்.

பரம்பரையாக வரும் பக்தி

சமீபத்தில் நான் ஈரோடு மாவட்டத்திலுள்ள சில திருக்கோயில்களுக்குச் சென்றிருந்தேன். அப்போது அந்தியூரிலிருந்து சுமார் 2 கி.மீ. தூரத்திலுள்ள வெள்ளையம்பாளையம் என்ற சிற்றூரில், மிகப் புராதனமான ஸ்ரீ கிருஷ்ணன் திருக்கோயிலொன்று அடியோடு சிதிலமடைந்திருப்பதாகவும், அவ்வூர் மக்கள் அதனைப் புனர்நிர்மாணம் செய்வதற்கு வசதியில்லாமல் கஷ்டப்படுவதாகவும் என்னிடம் கூறி, அத்திருக்கோயிலை வந்து பார்க்கும்படி கேட்டுக்கொண்டனர். அவர்களும் அன்புடன் என்னை வெள்ளையம்பாளையத்திற்கு அழைத்துச் சென்றனர்.ஒருகாலத்தில் அந்தப் பகுதிக்கே ஒளிவிளக்காகத் திகழ்ந்த அத்திருக்கோயிலின் நிலையைக் கண்டு என் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியாமல் கண்கலங்கி நின்றேன். இக்கோயிலின் நிலையைவிட என் மனதைத் தொட்டது அவ்வூர் மக்களின் ஸ்ரீகிருஷ்ண பக்தி. அடியோடு சிதிலமடைந்திருந்தாலும் கண்ணனின் திருக்கோயிலை அவ்வூர் மக்கள் அனைவரும் - ஆண்கள், பெண்கள், சிறுவர்கள், சிறுமியர்கள் உட்பட தங்கள் உயிரினும் மேலாக அதனைப் பாதுகாத்து, தவறாமல் பூஜித்து வருவதைக் கண்டு பிரமித்தேன். கள்ளம்கபடமில்லாத, முகத்தில் பால் வடியும் குழந்தைகள் அனைவரும் பகவன்நாமாவைப் பாடியபோது என் வசமிழந்தேன். மிகவும் சாதாரண சிற்றூர்தான் அது! மக்களிடையே செல்வச் செழிப்புமில்லை. இந்நிலையிலும் அவர்கள் ஒவ்வொருவரின் இதயத்திலும் பிரகாசித்து, ஆன்மிக ஒளிவீசிய பக்தியைக் கண்டு மெய்சிலிர்த்தேன்.இவை அனைத்திற்கும் முக்கியக் காரணமாகத் திகழ்பவர், அவ்வூராரின் மதிப்புக்கும், மரியாதைக்கும், அன்புக்கும் பாத்திரரான திரு. சி. பெரியசாமி என்னும் பெரியவர்தான் என்பதைத் தெரிந்துகொண்டேன். ஊர் குழந்தைகள் மற்றும் மக்கள் அனைவரையும் ஒன்று திரட்டி, அவர்கள் உள்ளத்தில் பக்தி என்ற நெறியை ஊட்டி, தெய்வீகப் பாடல்களையும் அவர்களுக்குக் கற்று கொடுத்து வருகிறார் இப்பெரியவர்.வாரம் ஒரு ரூபாய்!அடியோடு நிலைகுலைந்துள்ள இத்திருக்கோயிலின் சந்நிதியில் விக்கிரகம், படங்கள் ஆகியவற்றை வைத்துப் பூசாற்றிப் பூஜைகள் செய்து நைவேத்தியமும் செய்து வருகிறார் திரு. பெரியசாமி. சிறு பூஜையானாலும் தினமும் செய்யவேண்டுமல்லவா? தீபம் எரிய வேண்டுமென்றால் அதற்கும் எண்ணெய், திரி போன்றவற்றை வாங்குவதற்குப் பணம் வேண்டுமே! என்ன செய்வது என்பது திரு. பெரியசாமி அவர்களின் பிரச்சினை. அதற்காக ஒரு வழியும் வகுத்தார் அவர்.ஒவ்வொரு வீட்டிலும் வாரம் ஒரு ரூபாயைத் திருக்கோயிலுக்குத் தரவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். ஊர் மக்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொண்டனர். பரம்பரையாக வரும் பக்தி!இத்தகைய பக்தி, திரு. பெரியசாமிக்கு எவ்விதம் வந்தது? இவரது தந்தைவழி முப்பாட்டனார் திரு. பெரிய ராமதாஸ் அவர்கள் ஆண்டுதோறும் ஊர் மக்கள் அனைவரையும் பாத யாத்திரையாகத் திருப்பதி-திருமலைக்குப் புரட்டாசி மாதத்தில் அழைத்துச் செல்வது வழக்கம். அதே பழக்கத்தை இவரது பாட்டனாரான திரு. சின்ன ராமதாஸ் அவர்களும் கடைப்பிடித்து வந்தார்.திரு. பெரியசாமியின் பாட்டனார் காலத்தில் வெள்ளையம்பாளையத்தில் கிழக்கிந்திய கம்பெனியைச் சேர்ந்த ஆங்கிலேயர்கள் பெருமளவில் குடியேற ஆரம்பித்தனர். அக்காலத்தில் ஆங்கிலேயர்களை `வெள்ளையர்கள்' என உள்ளூர் மக்கள் அழைப்பது வழக்கம். அதிகளவில் வெள்ளையர்கள் குடியேறியதால் `வெள்ளையர்பாளையம்' என இவ்வூர் அழைக்கப்பட்டது. ஆனால் இவ்வூரின் புராதன பெயர் மதுராபுரி என்பதாகும். ஆனால், வெள்ளையம்பாளையம் என்ற பெயரே காலக்கிரமத்தில் நிலைகொண்டு விட்டது.ஆங்கிலேயர்களின் பிரவேசத்தினால் இவ்வூரின் சூழ்நிலையே மாறத் தொடங்கிவிட்டது. அதன் விளைவாக மிகவும் பிரசித்திபெற்று விளங்கிய இக்கண்ணன் கோயிலின் அன்றாட பூஜைகள் பாதிக்கப்பட்டன. இத்திருக்கோயிலில் எழுந்தருளியிருந்த கண்ணன், தனது சக்தியினால் ஊர்மக்களுக்குத் தனது தெய்வீக அருளை வாரிவாரி வழங்கியதால், அவனது லீலைகளைக் கண்டு ஊர்மக்கள் அவனிடம் அன்பு வைத்து அவனை ``மாயக்கண்ணன்'' என்று செல்லமாகக் கூப்பிடுவது வழக்கம். ஆதலால் இத்திருக்கோயில் பெருமான் மாயன் பெருமான் என்றும், கோயில் மாயன் பெருமான் திருக்கோயில் என்றும் அழைக்கப்படலாயிற்று.ஊர் மக்களின் ஆர்வம்!எவ்விதமாவது இத்திருக்கோயிலைப் புனர்நிர்மாணம் செய்து, தங்கள் அன்புத் தெய்வமான ஸ்ரீ கண்ணனுக்குச் சமர்ப்பித்துவிட வேண்டும் என்று மிகுந்த ஆர்வமுடன் இவ்வூர் மக்கள் துடித்துக்கொண்டிருப்பதைப் பார்த்து ஒரு விநாடி பிரமித்துவிட்டேன். தற்போது ஊர்மக்கள் ஒன்றுகூடி, திரு. சி. பெரியசாமி அவர்களையே தலைவராகவும், திரு. பெ. நாராயணசாமி அவர்களை உபதலைவராகவும், திரு. றி.ஷி. தவசியப்பன் அவர்களைச் செயலாளராகவும் கொண்டு, ஒரு திருப்பணி அமைப்பை உருவாக்கி, அரசாங்கத்திடம் பதிவு செய்து கொண்டுமுள்ளனர்.திருக்கோயிலுக்கு நிலமிருக்கிறது. ஊர்மக்கள் இதயத்தில் பக்தி பெருக்கெடுத்து ஓடுகிறது. வெள்ளையம்பாளையம் மக்களின் பக்திப்பெருக்கைக் கண்டு என் மனம் பாரத புண்ணியபூமியின் சென்ற கால சரித்திரத்தின் சோக நிலைக்குச் சென்று நிலைத்தது. தங்கள் சுயநலன்களுக்காகத் தங்கள் தாய் மதத்தைக் காட்டிக்கொடுத்துள்ளவர்கள் உலவும் இத்தமிழகத்தில் இப்படியும் பக்திகொண்ட ஊர்மக்கள் இருப்பதை நினைத்து என் நெஞ்சம் பெருமிதமடைந்தது. வெள்ளையம்பாளையம் கண்ணன் திருக்கோயில் புனர்நிர்மாணத்திற்கு நாம் ஒவ்வொருவரும் உதவ வேண்டியது நம் புனித கடமையாகும். தமிழக மக்கள் எங்கிருந்தாலும் தங்கள் வசதிக்குட்பட்டு மகத்தான இப்புண்ணிய கைங்கர்யத்திற்கு உதவ வேண்டுகிறோம். வெள்ளையம்பாளையத்தைப் பார்த்தாவது இந்துக்களாகப் பிறக்கும் பேறு பெற்ற அனைவரும் தாங்கள் பிறந்துள்ள நெறிக்கு உண்மையாக நடந்துகொள்ள வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறோம்.உதவ விரும்பும் அன்பர்கள் கீழ்க்கண்ட முகவரிக்குத் தங்கள் உதவிகளை அனுப்பும்படி வேண்டுகிறோம்.அனுப்ப வேண்டிய முகவரி :ஸ்ரீ மாயன் பெருமாள் நற்பணி அறக்கட்டளை,(பதிவு எண் நெ : 12394/12-11-2008)வெள்ளையம்பாளையம் (Via) அந்தியூர்,பவானி வட்டம், ஈரோடு மாவட்டம்.

நமது வேதங்கள்

உலகின் முதல் நூல் என மேலை நாட்டு அறிஞர்கள் உட்பட அனைவரும் ஒப்புக்கொண்டவை நமது வேதங்கள். வேதங்களில் வானியல், விஞ்ஞானம், மருத்துவம், சிற்பக்கலைகள், சங்கீதம், உலகம் உருவாகிய விதம், ஜோதிடம் என மனிதனின் அறிவிற்கு எட்டியவை, எட்டாதவை என அனைத்தும் அடங்கியுள்ளன.உலகில் வேறு எந்த நெறிமுறைகளும் தோன்றுவதற்கு முன்பாகவே வாழ்க்கை நெறிமுறைகளைக் காட்டி நமக்கு அருளியவை வேதங்களே!பிற்காலத்தில் ஏற்பட்ட பலவித நன்னெறிகளுக்கும், தர்மநெறிமுறைகளுக்கும் மூலகாரணமும் நமது வேதங்கள்தான். அத்தகைய சக்தியும் பெருமையும் கொண்ட நமது வேதங்கள் எவராலும் இயற்றப்பட்டவை அல்ல. அவை அளவற்றவை. அவற்றிற்கு ஆரம்பமோ அல்லது முடிவோ கிடையாது.வேதங்கள் அனைத்தும் ஒலி வடிவாய் வான மண்டலத்தில் எப்போதும் இருந்து வருகின்றன. அவற்றைச் சராசரி மனிதர்களால் கேட்பதற்கோ அல்லது முழுமையாக அறிந்துகொள்வதற்கோ இயலாது. அதற்கு அளவற்ற தவவலிமை வேண்டும். அத்தகைய தவவலிமை நம்மிடம் இல்லை. ஆனால், இத்தகைய வேதங்களின் சூட்சுமங்களையும் அவற்றில் அடங்கியுள்ள ரகசியங்களையும் தனது தவவலிமையினால் கண்டறிந்து, அவற்றை நாம் எளிதில் புரிந்துகொள்ளும்படி பரம கருணையுடன் ரிக், யஜுர், ஸாம, அதர்வணம் என நான்காக வகுத்து நமக்கு அளித்து அருள்புரிந்தவர் பராசர முனிவரின் புதல்வரான ஸ்ரீவேதவியாஸர். இவ்விதம் வேதங்களை வகுத்து, தொகுத்து அருளியவற்றை நம் அன்றாட வாழ்க்கையில் எவ்வாறு பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதற்கு வழிகாட்டி அருளியவர்கள் நம் மகரிஷிகள். மருந்துகளை மருத்துவர் எழுதித் தருகிறார். ஆனால், அவற்றை எப்போது, எவ்விதம் உட்கொண்டால் நோய் தீரும் என்பதை நமக்கு எடுத்துக் கூறினால்தானே அம்மருந்துகளினால் நாம் பயன்பெறமுடியும்!அதேபோல்தான், வேத வியாஸர் சுலபமாக அறிந்துகொள்ளும்படி நமக்கு வகுத்தளித்த வேதங்களைப் பயன்படுத்திக்கொள்ளும் முறைகளை அளித்தவர்களே நம் பக்திக்கும், நன்றிக்கும் உரிய மகரிஷிகள்.அத்தகைய மகரிஷிகளே கீழ்க்கண்ட மகாபுருஷர்கள் ஆவார்கள் :1. ஆஸ்வலாயணர், 2. போதாயனர், 3. ஆபஸ்தம்பர், 4. காத்யாயனர், 5. த்ராஹ்யாயனர் (காதிரர்), 6. கௌசிகர், 7. ஆண்டப்பிள்ளையார், 8. யாக்ஞவல்கியர்.வேதங்களின் பிரிவுகள்!ரிக்வேதத்தை 21 கிளைகளாகவும், யஜுர் வேதத்தை 101 பிரிவுகளாகவும், சாம வேதத்தை 1000 பிரிவுகளாகவும், அதர்வண வேதத்தை 9 பிரிவுகளாகவும் பிரித்து அளித்தார் ஸ்ரீ வேதவியாசர். நாம் பிறந்தது முதல் குழந்தைகளாகவும், பின்பு இளைஞர்களாகவும், அதன்பின்பு நடுவயதினராகவும், பின்பு வயோதிகத்திலும், அதற்குப் பிறகு உலக வாழ்வை நீத்து மறுபிறவி அடைவது என்ற பிறப்பு, இறப்பு, மறுபிறவி என்ற சுழற்சியின் பல்வேறு கட்டங்களில் நாம் எவ்விதம் வேதங்களைப் பயன்படுத்திக்கொள்வது என்ற சூட்சுமத்தைத்தான் இம்முனிவர்கள் தங்கள் ஞானசக்தியாலும், ஆத்ம பலத்தினாலும் அறிந்து நமக்கு உபதேசித்துள்ளனர்.நாம் பிறந்தது முதல் வளர்ந்து வயோதிகம் என்ற நிலையைக் கடந்து இறந்த பின்பும்கூட, நம்மிடம் நெருங்கிய தொடர்பு கொண்டு நம்மை வழிநடத்தும் நமது பித்ருக்களைப் பற்றியும், அவர்களுக்கு நாம் ஆற்றவேண்டிய கடமைகளையும், அதனால் நாம் அடையும் புண்ணிய பலன்கள் பற்றிய ரகசியங்களையும் வேதங்கள் நமக்கு வெளிப்படுத்தியுள்ளன. ஆதலால் நமது முதல் ஆச்சார்யபுருஷர்கள் - அதாவது குரு - இம்மகரிஷிகளே!மகரிஷிகளின் சக்தி!தொன்மைவாய்ந்த நமது கலாசாரம், பண்பு, ஒழுக்கம், வாழ்க்கை நெறிமுறை ஆகிய அனைத்திற்கும் ஆதாரமாக இருப்பவை இம்மகரிஷிகளின் உபதேசங்களே! ஏற்கெனவே நாம் குறிப்பிட்டபடி வேதங்களில் இல்லாதது என்று எதுவும் கிடையாது. கட்டடக்கலை, சிற்பக்கலை, மருத்துவம், மந்திரப் பிரயோகம். வானியலில் பல்வேறு கிரகங்களின் அசைவுகள், சூரியனின் சக்தி, பல்வேறு உலகங்கள் எப்போது, எவ்விதம் தோன்றின என்ற அனைத்தையும் நம் வேதங்கள் வெளிப்படுத்துகின்றன. ஆதலால் இல்லை என்று வேதங்களில் எதுவும் இல்லை என்று கூறலாம்.வேத மந்திரங்களின் சக்தியினால் நமது மகரிஷிகள் அளவற்ற சக்தியையும், திறமைகளையும் பெற்றார்கள். உதாரணமாக மகரிஷி விஸ்வாமித்திரரால் `திரிசங்கு' என்ற மன்னனுக்காக ஒரு புதிய உலகையே சிருஷ்டிக்க முடிந்தது. மாண்டவ்யர் என்ற மகரிஷி, தனக்கு இழைக்கப்பட்ட அநீதியினால் கோபமுற்று யமதர்மராஜரையே பணிய வைக்க முடிந்தது.இருப்பினும் மகத்தான சக்தி வாய்ந்த இந்த ஆச்சார்ய மகாபுருஷர்கள் வாழ்ந்ததோ குடிசைகள், காடுகள், மலைகள், குகைகள் ஆகியவற்றில்தான்.இன்றைய விஞ்ஞானம் எவற்றையெல்லாம் கண்டுபிடித்து வெளிப்படுத்துகிறதோ அவை அனைத்தையும் நமது மகரிஷிகள் தங்களது ஞான பலத்தினால் மிகச் சரியாகக் கண்டறிந்து பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நமக்கு வெளிப்படுத்தியுள்ளனர். வேதங்கள் அனைத்தும் விஞ்ஞானபூர்வமானவை என்பதை மேலைநாட்டு நிபுணர்களும் அவர்களிலும் முக்கியமாக ஜெர்மானிய அறிஞர்கள் வியப்புற்று விளக்கியுள்ளனர்.இத்தகைய வேதகால மகரிஷிகளின் திருவடி ஸ்பரிசம் பட்டதால்தான் நம் இந்தியா இன்றும் பாரத புண்ணிய பூமி என உலகினரால் போற்றப்பட்டு வருகிறது. இவ்வுலகம் `கர்மபூமி' - அதாவது மக்களின் செயல்களே அவர்களது பிறவிகளை நிர்ணயிக்கின்றன என்ற மகத்தான பிறவி ரகசியத்தை வேதங்களின் மூலமாக அறிந்து நமக்கு வெளிப்படுத்தியவர்கள் நாம் பூஜிப்பதற்குரிய இம்மகரிஷிகளே. இம்மகாபுருஷர்கள் தவம் புரிந்த கங்கை, இமயம், கயிலாயம், மானஸசரோவரம், புஷ்கரம், பிரம்ம சரோவரம், காசி, அமர்நாத், காடுகள், மலைகள் ஆகிய அனைத்தும் இன்றும் தெய்வத் தன்மையை எவ்விதம் பிரதிபலிக்கின்றன என்பதை நேரில் அனுபவிக்கும்போது தவச்சீலர்களான இம்மகரிஷிகளின் பெருமையும், தெய்வசக்தியும் நமக்குப் புலனாகிறது.இன்றைய நிலைமை!காலம் காலமாக வேத புண்ணியபூமியாக ஒளிவிட்டுப் பிரகாசித்த இப்பாரதப் புண்ணிய பூமி ஏராளமான அன்னியர்களின் படையெடுப்புகளினாலும், இந்நாட்டைச் சிறுசிறு ராஜ்ஜியங்களாக ஆண்டுவந்த அரசர்கள் அனைவரும் அவர்களுக்குள் ஒருவருக்கொருவர் போரிட்டுக் கொண்டதாலும் வேதங்களின் அருமையும், பெருமையும், அளவற்ற சக்தியும், அவற்றில் பொதிந்துள்ள அறிவு பொக்கிஷங்களும் பலருக்குத் தெரியாமலேயே போய்விட்டன. ஏராளமான பெரியோர்கள் பகைவர்களால் கொல்லப்பட்டு விட்டதால், வேதங்களை நமக்குச் சொல்லிக் கொடுப்பதற்கும் மகான்கள் இல்லாமல் போய்விட்டனர். இன்று நம் குழந்தைகளுக்கு வேதகால மகரிஷிகளைப் பற்றிக் கூறுவார் எவருமில்லை. இதுபற்றி பூஜ்யஸ்ரீ சுவாமி ஸ்ரீதயானந்த சரஸ்வதி அவர்கள், பூஜ்யஸ்ரீ ஓம்காரனந்தா மற்றும் ஏராளமான ஆச்சார்ய மகாபுருஷர்களும் எங்கு வேத தர்மம் நம் குழந்தைகளுக்குத் தெரியாமலேயே போய்விடுமோ என்று கவலை கொண்டனர். பாரதம் வேத பூமி. வேதம் நிலைத்தால் மக்கள் நல்வாழ்வு பெறுவார்கள். ஆதலால் நமக்கு வேத நன்னெறியைக் காட்டி வாழ்விற்கு ஒளியேற்றிய ஆச்சார்ய மகாபுருஷர்களான மகரிஷிகளைப் பற்றி நாம் தெரிந்துகொள்ள வேண்டும்; அவர்களைப் பூஜிக்க வேண்டும்; பாரத மக்கள் அனைவரும் வேதங்களைக் கற்க வேண்டும் என்ற அவாவினால் வேத தர்ம அறக்கட்டளை (Veda Dharma Trust)என்ற அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது. வேத தர்மத்தில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்ட ஆசாரம், அனுஷ்டானம், பக்தி ஆகியவற்றில் உயர்ந்த பெரியோர்களைக் கொண்டு இந்த அமைப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. எந்த மகரிஷிகளின் எல்லையற்ற கருணையினால் நாம் நல்வாழ்வு பெற்று வாழ்கிறோமோ, அப்படிப்பட்ட மகரிஷிகளுக்கு நாம் என்னதான் கைம்மாறு செய்ய முடியும்?நமது மகரிஷிகளின் பெருமைகளை நாமும், நம் சந்ததியினரும் அறிந்து கொள்வதற்காகவும், மகரிஷிகளைப் பூஜிப்பதற்காகவும், தினமும் வேதபாராயணம், கோஸம்ரக்ஷணம், நித்ய அன்னதானம் போன்ற உன்னத கைங்கர்யங்களைச் செய்து வருவதற்காகவும் சுமார் 10 ஏக்கர் நிலத்தில் நம் மகரிஷிகளுக்கு அழகான ஆலயம் ஒன்று காவிரி அல்லது தாமிரபரணி புண்ணிய நதிக்கரையில் அமைப்பதற்காக இந்த அறக்கட்டளை நிறுவப்பட்டுள்ளது. வேதங்கள் நமக்கு உயிர் போன்றவை ஆகும். வேதங்கள் இல்லைமேல் நாமும் இல்லை! மிகப்பெரிய மகான்கள் பொறுப்பேற்றுள்ள இந்த அறக்கட்டளையை இன்று இந்து மதத்திற்காக ஈடிணையற்ற சேவை புரிந்துவரும் மகாத்மாவான பூஜ்யஸ்ரீ தயானந்த சரஸ்வதி ஸ்வாமிகளும், பூஜ்யஸ்ரீ ஓம்காரனந்தா ஸ்வாமிகளும் சென்னையில் 30.11.2008 ஞாயிறன்று ஆரம்பித்து வைத்து, ஆசி அருளியுள்ளனர்.பாரத புண்ணிய பூமிக்குத் திலகம் போன்று அமையவிருக்கும் இந்த ஆலயம் அமைப்பதற்குப் பல 11/2 கோடி ரூபாய் ஆகலாம் என்று மதிப்பிட்டுள்ளனர். இதற்குத் தேவைப்படும் இடம் சுமார் 10 ஏக்கர். இன்றும் சூட்சும உருவில் வேதங்களின் மூலம் நமக்குத் துணையிருந்து நல்வழிகாட்டி அருளும் இம்மகரிஷிகளுக்கு நன்றி காட்டும் இணையற்ற வாய்ப்பு இது. வசதியுள்ள இந்து சகோதர, சகோதரிகள் அனைவரும் தங்களால் இயன்ற - தங்கள் வசதிக்கு உட்பட்டு - காசோலையாகவோ, வரைவோலையாகவோ சமர்ப்பித்து மகரிஷிகளின் ஆசிகளைப் பெறும்படி வேண்டிக்கொள்கிறோம்.தொடர்புகொள்ளவேண்டிய முகவரி :Veda Dharma Trust7, Old Mambalam Road,Chennai600 033.Phone : 9444005775, 9841012779.
இந்தியா சுதந்திரம் பெற்ற நாளிலிருந்தே காங்கிரஸ் அரசு இந்துக்களுக்கு இழைத்துவரும் அநீதிகள் பல. அவற்றில் சிலவற்றை இப்போது கவனிப்போம். 1) இந்தியாவின் சென்றகால சரித்திரத்தை மக்களிடமிருந்து மறைத்தது காங்கிரஸ் அரசு. இதனால் ஏதோ சுதந்திரம் பெற்ற நாளிலிருந்துதான் இந்தியா என்றொரு தேசம் இருப்பதாக எதிர்கால சந்ததியினர் நினைக்கும் மனோபாவம் உருவாயிற்று.2) இந்தியாவைப் பிளவுபடுத்தி, அதிலிருந்து உருவாக்கப்பட்டதுதான் பாகிஸ்தான் என்ற உண்மையை எதிர்கால சந்ததியினர் மறந்தே போய்விடும்படி காங்கிரஸும், காங்கிரஸ் கட்சியின் கட்டுப்பாட்டிலுள்ள இந்திய அரசாங்கமும் ஏதோ காலம் காலமாக பாகிஸ்தான் என்ற ஒரு நாடு இருந்து வருவதுபோல் ஒரு கற்பனையான பிரமையை ஏற்படுத்தின.3) இந்தியாவை இரு நாடுகளாகப் பிளக்கும்போது, பாகிஸ்தான் பகுதியிலிருந்த பல்லாயிரக்கணக்கான இந்துக்களுக்கு எவ்வித பாதுகாப்பும் ஏற்படுத்தாமல், அவர்களை பாகிஸ்தானியர்களின் வெறிச்செயல்களுக்குப் பலியாக்கியது.4) அன்னிய மதத்தினருக்கு ஏராளமான சலுகைகள் கொடுத்து வளர்த்ததுடன், இந்துக்களை ஏதோ அன்னியர்கள் போல் கேவலப்படுத்தி, நடத்த ஆரம்பித்தனர் காங்கிரஸார். இவ்விதம் வேண்டுமென்றே அரசின் கொள்கைகளை உருவாக்கிய காங்கிரஸ் கட்சி, மற்ற மதத்தினர் வெளிநாடுகளிலுள்ள அவர்களது புனித தலங்களுக்குச் செல்வதற்கு ஏராளமான சலுகைகளை வாரி வழங்கி வருகிறது.5) காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்துவரும் ஆந்திரப் பிரதேசத்தில் சமீபத்தில் கிறிஸ்தவர்களுக்கு அவர்களது தலமாகிய ஜெருசலத்திற்குச் சென்றுவர தலா ஒருவருக்கு ரூ. 25,000 மானியம் கொடுப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளதை இந்தியப் பத்திரிகைகள் பிரசுரித்துள்ளன. மற்ற மாநிலங்களைப் போலவே ஆந்திராவிலுள்ள கிறிஸ்தவர்கள் அனைவரும் இந்துக்களாக இருந்து மதமாற்றம் செய்யப்பட்டவர்கள்தான். இவ்விதம் கிறிஸ்தவர்களுக்கு மானியம் அளிப்பதும் மதமாற்றத்தின் திட்டமிட்ட ஒரு செயலே ஆகும். இதற்குக் காரணம், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஆந்திர முதல்வர் தனது தாய்மதமான இந்து மதத்தை விட்டுவிட்டு கிறிஸ்தவராக மாறியிருப்பதே ஆகும்.`மதச்சார்பற்ற அரசு' என்று பறைசாற்றிக்கொண்டு, இவ்விதம் குறிப்பிட்ட - அதுவும் பாரதத்திற்கு வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட மதங்களுக்கு மாறியவர்களுக்கு மட்டும் சலுகைகள் அளிப்பதும், அத்தகைய சலுகைகளை இந்துக்களுக்கு அளிக்க மறுப்பதும் எவ்விதம் நியாயமாகும்? `மதச்சார்பற்ற அரசு' என்று இவர்கள் ஏன் தங்களைச் சொல்லிக்கொள்ள வேண்டும்?இந்துக்கள் எப்போதுமே பெருந்தன்மையானவர்கள். இதற்கு இந்திய சரித்திரமே சான்றாகும். `பிற மதத்தினருக்கு ஏன் சலுகைகள் வழங்குகிறீர்கள்?' என்று இந்துக்கள் கேட்கவில்லை. பிற மதத்தினரைத் தங்கள் மதத்திற்கு மாற்றுவதும் கிடையாது இந்துக்கள். ஆனால், `எங்களுக்கு மட்டும் ஏன் சலுகைகள் தருவதில்லை?' என்று கேட்க இந்துக்களுக்கு உரிமை உண்டு!தமிழக மக்களின் உயிர்நாடியான திருக்கயிலாயம் - மானஸசரோவரம் சென்றுவரும் ஆன்மிகப் பெருமக்களின் புனித யாத்திரைக்குச் சலுகைகள் கேட்டு இந்துக்களின் சார்பாக `தமிழக தெய்வீகப் பேரவை' என்ற அமைப்பு 25.12.2008 வியாழக்கிழமை அன்று சென்னை தியாகராய நகர் தேவர் திருமண மண்டபத்தில் மாபெரும் மாநாடு ஒன்றை நடத்த உள்ளது. மறுநாள் 26.12.2008 வெள்ளிக்கிழமை அன்று இது சம்பந்தமாக மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களை நேரில் சென்று சந்தித்து, விண்ணப்பம் கொடுப்பதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.இந்துக்கள் அனைவரும் இம்மாநாட்டில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். நமது உரிமைகளை இனியும் நாம் விட்டுக் கொடுக்கக்கூடாது. றீமேலும் விவரங்களுக்கு :தமிழக தெய்வீகப் பேரவை,2/176, பெரியண்ணன் வீதி,ஈரோடு-1. போன் : 9443380159 / 9443380154 என்ற முகவரியில் தொடர்புகொள்ளலாம்.

வியாழன், 18 டிசம்பர், 2008

நலம் தரும் சூப்...

வாழைத்தண்டு சுப்
வாழை மரத்தின் இலை, பூ, காய், தண்டு, வேர்த்தண்டு அனைத்தும் பயன்படுகின்றது. வீட்டு விசேஷங்களில் வாழை மரம்தான் முக்கிய பங்கு வகிக்கிறது.வாழைத்தண்டை சிறு துண்டுகளாக நறுக்கி அதனுடன் இஞ்சி, எலுமிச்சம் பழச்சாறு, மிளகு, சின்ன வெங்காயம், சீரகம் கலந்து நீர்விட்டு கொதிக்க வைத்து பிறகு சிறிது எண்ணெய் விட்டு தாளித்து சூப் போல் செய்து அருந்தி வந்தால் கீழ்கண்ட நோய்களுக்கு கண்கண்ட மருந்தாகும்.மது, புகை போன்ற தீய பழக்கங்களால் அடிமைப் பட்டவர்களின் கல்லீரல் அதிகம் பாதிக்கப் பட்டிருக்கும். ஈரல் பாதிப்பினால் கண் பார்வைக் கோளாறு, காமாலை நோய் தாக்கும். இவர்கள் வாழைத்தண்டு சிறந்த மருந்தாகும்.சிறுநீரகத்தில் கற்கள் உருவாகி பயங்கரமான வலி ஏற்படும். இந்த கற்களை அகற்ற வாழைத்தண்டு சிறந்த மருந்தாகும்.குடற்புண்களை ஆற்றும் சக்தி இதற்குண்டு. வாழைத் தண்டில் அதிக நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளதால் உடலுக்குத் தேவையான அனைத்து சத்துக்களும் கிடைக்கும். இரத்தத்தைச் சுத்தப்படுத்தி சீரான இரத்த ஓட்டத்திற்கு உதவும்.உடல் பருமனால் அவதிப்படுபவர்கள் வாழைத்தண்டு சூப் செய்து தினமும் அருந்தி வந்தால் உடல் பருமன் குறையும்.பெண்களுக்கு மாத விலக்குக் காலங்களில் ஏற்படும் உபாதைகளைம், வெள்ளைப் படுதலையும் குணப்படுத்தும்.இரத்த அழத்தத்தைக் குறைக்கும். வயிற்றில் உள்ள கீரி பூச்சிகளை அகற்றும்.தோல் நோய்களைக் குணப்படுத்தும்.உடலில் நச்சுப் பொருட்கள் கலந்திருந்தால் விரைவில் குணமாக்கும்.நீர்ச்சுருக்கம், நீர் எரிச்சல் இவற்றை போக்கும்.
முருங்கைக் கீரை சூப்
நல்ல இளம் தளிராக உள்ள முருங்கைக் கீரையை எடுத்து 5 கப் நீர்விட்டு கொதிக்க வைக்க வேண்டும். இதில்சின்ன வெங்காயம் - 4மிளகு - 10சீரகம் - 5 கிராம்பூண்டு - 2 பல் போட்டு கொதிக்க வைத்து சிறிது எண்ணெய் விட்டு தாளித்து சூப்பாக காலை உணவுக்குப் பின் மதிய உணவுக்கு முன் 2 கப் அருந்தி வந்தால் உடலுக்குத் தேவையான அனைத்து சத்துக்களும் கிடைக்கும்.நீரிழிவு நோயாளிகளுக்கு முருங்கைக் கீரை சூப் மிகவும் நல்லது. உடலுக்குத் புத்துணர்ச்சியைத் தரும் மேலும் கண் பார்வை தெளிவாகும்.நரம்புத் தளர்ச்சியைப் போக்கும். தாதுவை விருத்தி செய்யும். காலரா, மஞ்சள் காமாலை, வயிற்றுப் போக்கு குணமாகும்.உண்ணா நோன்பு நாட்களில் முருங்கைக் கீரை சூப் குடிப்பது மிகவும் நல்லது.
புதினா சூப்
புதினா கீரையை சுத்தம் செய்து சிறிதாக நறுக்கி, தண்ணீரில் கொதிக்க வைக்க வேண்டும். அதனுடன் சின்ன வெங்காயம், மிளகு, பூண்டு, சீரகம் கலந்து கொதிக்க வைத்து அதனுடன் சிறிது எலுமிச்சம் பழச்சாறு சேர்த்து அருந்தி வந்தால் வாயுத் தொல்லை, வயிற்றுக் கோளாறுகள், சிறுநீரக கல்லலைப்பு, குழந்தைகளின் மலக்குடலில் உள்ள கீரிப்பூச்சிகிள் எல்லாம் விலகும். சாப்பிட்டவுடன் சிறிது சூப் அருந்தி வந்தால் எளிதில் ஜீரணமாகும்.முகப்பரு உள்ளவர்களும், வறண்ட சருமம் உள்ளவர்களும் புதினா சூப்பை இரவு படுக்கைக்கும் முன் குடிப்பது நல்லது.புதினாவை நிழலில் காயவைத்து பொடி செய்து பனங்கற்கண்டு சேர்த்து கஷாயம் செய்து டீக்குப் பதிலாக அருந்தி வந்தால் இரவில் நல்ல உறக்கம் வரும். உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும்.

கொல்லிமலை ரகசியம்


மலைகளில்தான் மருத்துவக் குணம் நிறைந்த மூலிகைகள் கிடைக்கின்றன. அப்படிப்பட்ட மலைகளில் சீரான தட்ப வெப்பத்துடன் அதிக மூலிகைகளைத் தன்னகத்தே கொண்ட மலைதான் கொல்லிமலை.ஒவ்வொரு இதழிலும் கொல்லிமலையில் உள்ள அபூர்வ மூலிகைகளைப் பற்றி அறிந்து வருகின்றோம். இந்த இதழில் நிலவாகை பற்றி அறிந்துகொள்வோம்.இதனை நில ஆவாரை, நாட்டு நிலாவரை, ஆலகாலம், கமதாயம், தாளினி, ஆவரை, ஆவாகை, குயத்தினலகை என பல பெயர்களில் அழைக்கின்றனர்.Tamil : NilavaagaiEnglish : SennaTelugu : Neela punnaSanskrit : BhumiariMalayalam : NilavakaBotanical name : Cassia sennaஇந்தியா முழுவதும் காணப்படும் நிலவாகை தென்னிந்தியாவில் திருநெல்வேலி மற்றும் கொல்லிமலைப் பகுதிகளில் அதிகமாக காணப்படுகின்றது. இந்த நிலவாகையானது இந்தியாவின் மூலிகை ஏற்றுமதியில் கணிசமான பங்கு வகிக்கிறது.இதனுடைய இலை அதிக மருத்துவக் குணங்களைக் கொண்டது.மலச்சிக்கல் தீரமலச்சிக்கலும், மனச் சிக்கலும் ஆதிநோய்கள் என்பதை அடிக்கடி சுட்டிக்காட்டி வருகிறோம். பொதுவாக மலச்சிக்கல் இருந்தால் மனச்சிக்கல் வரும். மனச் சிக்கல் இருந்தால் மலச்சிக்கல் கூடவே வரும். இப்படி மனச்சிக்கலும், மலச்சிக்கலும்தான் நோய்களின் வாசலாக உள்ளன. மலச்சிக்கலைத் தீர்ப்பது மிக அவசியம். நிலவாகை இலையை எடுத்து நிழலில் உலர்த்தி காயவைத்து பொடிசெய்து இரவு உணவுக்குப்பின் வெந்நீரிலோ, பாலிலோ கலந்து சாப்பிட்டு வந்தால் மலத்தை இளக்கி வெளியே தள்ளும். நாள்பட்ட மலத்தையும் வெளியேற்றும்.குடல் சுத்தமாகநாம் உண்ணும் உணவில் சில கிருமிகள் உட்சென்று குடல் பகுதியில் தங்கிவிடுகின்றன. இதனால் குடலில் உட்பகுதிகளில் உள்ள குடல் சுவர்கள் பாதிக்கப்பட்டு குடல் புண்களை ஏற்படுத்துகின்றது. இதனால் சீரண சக்தி குறைந்து உடல் வலுவிழக்கின்றது. இக்குறையை போக்க நிலவாகையிலையை காயவைத்து பொடி செய்து அதில் தேன் கலந்து காலையும், இரவும் உணவுக்குப் பின் அருந்தி வந்தால் குடல் சுத்தமாகும். மேலும் குடல் பூச்சிகளை நீக்கி குடல் சுவர்களை பலப்படுத்தி சீரண சக்தியைத் தூண்டும்.கண் பார்வைக் கோளாறு நீங்கபித்த அதிகரிப்பினால் சிலருக்கு கண் பார்வைக் கோளாறு ஏற்படுகின்றது. இந்தக் குறையைப் போக்க நிலவாகை இலையை நீரில் கலந்து கொதிக்க வைத்து வடிகட்டி அருந்தினால் கண்பார்வைக் கோளாறுகள் நீங்கும்.மேக நோய்கள் குணமாகமேக நோயானது மனித இனத்தையே ஆட்டிப் படைக்கின்றது. இந்த நோயின் தாக்குதலிலிருந்து விடுபட நிலவாகை கஷாயம் பயன்படுகிறது.வாயுத் தொல்லைகள் நீங்கநிலவாகையின் வேருடன் பிரப்பங்கிழங்கு, மிளகு, சுக்கு, காரையிலை இவற்றைச் சேர்த்து அரைத்துக் கொடுத்தால் வாயு சம்பந்தப்பட்ட நோய்கள் குணமாகும்.சொறி சிரங்கு மாறஉடலில் ஏற்படும் மாற்றங்கள் அனைத்தும் தோலின் வழியாகத்தான் தெரியவரும். இதனால் தோல் அலர்ஜி ஏற்பட்டு, சொறி, சிரங்கு ஏற்படுகிறது.இதற்கு நிலவாகை இலையை எடுத்து அரைத்து சொறி, சிரங்கின் மீது தடவினால் சிரங்கு விரைவில் குணமாகும்.அஜீரணக் கோளாறு நீங்கநிலவாகை இலையை நிழலில் உலர்த்தி பொடித்து கஷாயம் செய்து அதனுடன் பனைவெல்லம் சேர்த்து குடித்து வந்தால் அஜீரணக் கோளாறுகள் நீங்கும்.சிறுநீர் பெருக்கிசிறுநீரகத்தின் செயலை அதிகப்படுத்தவும், நீர்ப்பெருக்கியாகவும் நிலவாகை பயன் படுகின்றது.

சித்தர்களை தெரிந்துகொள்வோம்


சித்தர்களின் பல்வேறு பரிமாணங்கள் குறித்து கடந்த இதழ்களில் கண்டோம். இனி பதினெண் சித்தர்களில் ஒவ்வொருவரின் தனிச்சிறப்புகளையும் அறிந்துகொள்வோம். சித்தர்களின் சிறப்பு என்பது அவர்களது பிறப்பு, வளர்ப்பு போன்ற புறவாழ்வு தொடர்பானதல்ல என்பதை முன்பே பார்த்தோம். அவர்களைச் சுற்றியிருக்கும் புற உலகின் விடுதலைக்காக, தங்களின் அக உலகுக்குள் தேடிக் கண்டடைந்த தத்துவங்களே அவர்களின் தனிச்சிறப்பு.அதனடிப்படையில் சித்தர்களின் சித்தரான அகத்தியரின் தனிச்சிறப்பை இந்தப் பகுதியின் தொடக்கத்தில் பார்த்தோம். இந்த இதழில் போகரைப் பற்றி பார்ப்போம்.போகம் என்றால் இன்பம். மனித இனம் நோய் ஒழிந்து மகழ்ச்சியுடன் இருப்பதற்காக பாடுபட்டவர் என்பது அவர் பெயரிலேயே விளங்கும். இவர் சீனத்திலிருந்து வந்த யாத்திரிகர் என்றும், பிற்காலத்தில் தமிழ்நாட்டில் நிலைகொண்டவர் என்றும் பலவாறாக கூறப்படுகிறது. ஆனால் அது உண்மையல்ல. போகர் இந்தியாவிலிருந்து சீனாவுக்குச் சென்று அங்கு அரிய பல ஆராய்ச்சிகளைச் செய்து அங்குள்ள மக்களுக்கு சித்தத்தையும், ஞானத்தையும் பரப்பிவிட்டு இந்தியாவுக்குத் திரும்பினார். இது தெரியாத சிலர் சீனாவிலிருந்து வந்தார் என்கின்றனர்.எனினும், நவபாஷாணத்தால் இவர் வடித்துள்ள பழனி முருகன் சிலையும், போகர் 7000 என்ற அரிய நூலும் சித்த மருத்துவ உலகுக்கு அளித்துச் சென்ற அருங்கொடைகளாகும். அத்துடன், போகர் நிகண்டு, போகர் கற்பம் 3000, போகர் சரக்கு வைப்பு 800, போகர் வாசி யோகம் என்று இன்னும் பல நூல்களையும் ஆக்கி அளித்துள்ளார்.போகரின் சமாதி இன்றும் பழனியில் இருக்கிறது. கதிர்காமம், திருத்தணிகை, திருப்பரங்குன்றம் போன்ற இடங்களில் போகர் சமாதி நிலையில் இருந்து முருகப் பெருமானை தியானித்துள்ளார் என்றும் தமிழ் நூல்களில் கூறப்பட்டுள்ளன. தமிழ்க் கடவுளான முருகன் மீது, போகருக்கு மிகுந்த ஈடுபாடு இருந்துள்ளதை இந்தத் தகவல்கள் மூலம் உணர முடிகிறது. அவர்காலத்தில் புழக்கத்திலிருந்த பல மொழிகளிலும் தேர்ச்சி பெற்றவர் என்றும் இவரைப் பற்றிய வரலாறுகள் கூறுகின்றன. போகரைப் பொறுத்தவரை மருத்துவத்தில் அதிக கவனம் செலுத்தியுள்ளார். அவர் எழுதியுள்ள நூல்களும், ஆற்றியுள்ள பணிகளும் மருத்துவம் சார்ந்தவையாகவே உள்ளன.பழனியில் இவர் வடித்துள்ள நவபாஷாண சிலை நீர், நெருப்பு போன்றவற்றால் அழிக்க முடியாத தன்மை கொண்டது. இதனால்தான் பன்னெடுங் காலமாகியும் பழனி முருகனின் சிலை இன்னும் நிலைத்து நிற்கிறது என்கிறார்கள் தமிழ் மருத்துவ வல்லுநர்கள். இதிலிருந்து போகர் இந்தியாவில் தான் பிறந்தார் என்பது உண்மையாகிறது.போகர் கண்டறிந்து சொன்ன ஆய்வுகளிலேயே ‘முப்புவின் ரகசியம்’ என்ற காயகல்ப முறை முக்கியமானதாக கருதப்படுகிறது. இந்த முறை கைவரப்பெற்றாலே ஒருவர் முழுச் சித்தர் ஆகிவிட முடியும் என்றும் சித்தர் நூல்கள் தெரிவிக்கின்றன.மனிதர்களாய்ப் பிறந்த ஒவ்வொருவரும் தவிர்க்கவே முடியாதவையான மூப்பு, பிணி, சாக்காடு மூன்றையும் போகரின் முப்பு ரகசியத்தால் முறியடித்துவிட முடியும் என்பதும் சித்தர்களின் முழு நம்பிக்கையாக இருக்கிறது.முப்பு ரகசியத்தை முறையாகக் கற்றாலே, மனித இனத்தின் அனைத்து நோய்களுக்கும் மருந்து கண்டுபிடித்துவிடலாம் என்பது சித்தர் மரபில் வந்த ஆன்றோர்களின் கருத்து.போகரின் மருத்துவ நூல்களை ஆய்வு செய்தால், இதுவரை மருந்தே கண்டுபிடிக்கப்படாத பல நோய்களுக்கும் மருந்து கண்டுபிடித்துவிடலாம் என்பதை அவருடைய மூல நூல்களை வாசித்தால் புரிந்துகொள்ளலாம். சித்தர்களின் எந்த ஒரு தத்துவமும் நம்பிக்கையின் அடிப்படையில் மட்டும் கூறப்பட்டவையல்ல. ஆண்டுகள் பல தவமிருந்து, ஆய்ந்து, தெளிந்து கூறப்பட்டவை. சித்த மருத்துவமானது அறிவை அறிவால் அறிந்து, ஆராய்ந்து சொல்லப்பட்டவை. எனவே, இன்றைய விஞ்ஞானப் பகுப்புக்கும் ஆய்வுக்கும் முற்றிலும் தகுதி கொண்டவை.சித்தர்கள் அருளிய மருந்துகளை ஆராய்ச்சி செய்ய பலநூறு ஆண்டுகள் தேவைப்படும். மேலும் பல்லாயிரம் விஞ்ஞானிகளும் தேவை

சுகம் தரும் சோம்பு


அறிவிலும் ஆக்கத்திலும் மேன்மை கொண்ட நம் முன்னோர்கள் தங்களுடைய வாழ்வில் ஆரோக்கியத்திற்கே முதலிடம் கொடுத்தனர்.“நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்” என்ற பழமொழியை உலகிற்கு உணரச் செய்தவர்கள் தான் சித்தர்களும் ஞானிகளும்.நம் வீட்டு சமையல் அறைகளுக்குள்ளேயே மாபெரும் மருத்துவக் களஞ்சியத்தை வைத்துள்ளனர். ஒரு மனிதனின் உணவு மூலமே அவனுடைய நோய்க்கு மருந்தை கண்டறிந்து சொன்னவர்கள் சித்தர்கள்.வீட்டுச் சமையலில் ஏதோ வாசனைக்காக சீரகம், சோம்பு, இலவங்கம், வெந்தயம், கடுகு இவற்றை பயன்படுத்துகிறார்கள் என்று எண்ண வேண்டாம்.ஒவ்வொரு பொருளும் தலைசிறந்த மருத்துவக் குணங்களைக் கொண்டது.கடந்த இதழில் சீரகத்தின் மருத்துவப் பயன்களை அறிந்தோம். இந்த இதழில் சோம்பின் குணங்களைப் பற்றி தெரிந்துகொள்வோம்.சோம்புபொதுவாக உணவு விடுதிகளில் சாப்பிட்டு முடித்தவுடன் ஒரு சிறு தட்டில் சோம்பை வைப்பார்கள். சிலர் அதை எடுத்து வாயில் போட்டு சாப்பிடுவதை பார்த்திருப்பீர்கள். அதன் அர்த்தம் என்ன என்பது இப்போது புரிந்திருக்கும். ஆம் உண்ணும் உணவை சீரணிக்க வைக்கும் சக்தி இதற்குண்டு. எனவே எளிதில் சீரணமாகாத உணவுகள், அசைவ உணவுகள் போன்றவற்றில் சோம்பை அதிகம் சேர்த்து சமைப்பார்கள்.இதை பெருஞ்சீரகம், வெண்சீரகம் என்று அழைப்பார்கள். இது பூண்டு வகையைச் சார்ந்தது. வெண்மை நிறத்துடன் சிறிது பச்சை கலந்த நிறமுடையது. இந்தியா முழுவதும் இது பயிரிடப்படுகிறது. குறிப்பாக கேரளா பகுதிகளில் அதிகம் விளைகிறது.இதன் பூ, விதை, வேர் அனைத்தும் மருத்துவக் குணம் கொண்டது.Tamil : Perunchirakam, SombuEnglish : Anise seedsTelugu : Sopu-pedha-jilakaraMalayalam : PerinchirakamSanskrit : Sthula-jeerakamBotanical Name : Pimpinella anisumயோனிநோய் குன்மம் உரூட்சைமந் தம்பொருமல்போனமுறு காசம் பீலிகமிரைப்-பீன உரைசேர்க்கின்ற வாதமு போஞ் சீர்பெரிய சீரகத்தால்மூக்குநோ யில்லை மொழி- அகத்தியர் குணபாடம்செரிமான சக்தியைத் தூண்டஎளிதில் செரிமானம் ஆகாத உணவுகளைக் கூட செரிக்கச் செய்யும் தன்மை சோம்பிற்கு உண்டு. உணவுக்குப்பின் சிறிதளவு சோம்பை வாயில் போட்டு மென்று சாறை கொஞ்சம் கொஞ்சமாக இறக்கி வந்தால் உண்ட உணவு எளிதில் சீரணமாகும்.குடல்புண் ஆறசாப்பிட்ட உணவினால் குடலில் அலர்ஜி ஏற்பட்டு வாய்வுக்கள் சீற்றமடைகின்றன. இதனால் குடல் சுவர்கள் பாதிக்கப்பட்டு குடலில் புண்கள் ஏற்படுகின்றன. இந்தப் புண்கள் ஆற சோம்பை தினமும் உணவில் சேர்த்து வந்தால் குடல்புண் நாளடைவில் குணமடையும்.வயிற்றுவலி, வயிற்று பொருமல்அஜீரணக் கோளாறுகளால் வயிற்றில் வாய்வுக்களின் சீற்றம் அதிகமாகி வயிற்றுவலி, வயிற்று பொருமல் ஆகியவை ஏற்படுகின்றன. இவர்கள் உடனே சிறிதளவு சோம்பை எடுத்து வாயில் போட்டு மென்று தின்றால் சிறிது நேரத்தில் குணம் தெரியும்.கருப்பை பலம்பெறகருப்பை பாதிக்கப்பட்டால் கருத்தரிப்பு நடக்காது. இதனால் சிலர் குழந்தை பேறு இல்லாமல் கூட அவஸ்தைப் படுவார்கள். பெருஞ்சீரகத்தை இளம் வறுவலாக வறுத்து பொடித்து, வேளையொன்றுக்கு 2 கிராம் வீதம் தனியாகவோ அல்லது பனங்கற்கண்டு கலந்தோ சாப்பிட்டு வந்தால் கருப்பை சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களும் விலகும்.ஈரல் பாதிப்பு நீங்கஉடலின் செயல்பாடுகள் அனைத்திற்கும் முக்கிய காரணியாக இருக்கும் உறுப்பு ஈரல்தான். ஈரல் பாதிக்கப்பட்டால் பித்தம் அதிகமாகி பல நோய்களுக்கு ஆளாக நேரிடும். ஈரல் நோயைக் குணப்படுத்த சோம்பும் ஒரு மருந்தாகப் பயன்படுகிறது.சோம்பை இளம் வறுவலாக வறுத்து பொடிசெய்து அதனுடன் தேன் கலந்து காலை மாலை 1 டீஸ்பூன் அளவு சாப்பிட்டு வந்தால் ஈரல் நோய் குணமாகும்.இருமல் இரைப்பு மாறநாள்பட்ட வறண்ட இருமல், இரைப்பு இவைகளால் அவதிப்படுபவர்கள் சோம்பை நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி அந்த நீரைப் பருகி வந்தால் நாள்பட்ட இரைப்பு, மூக்கில் நீர் வடிதல் குணமாகும்.சுரக் காய்ச்சல்அதிக குளிர் சுரம் இருந்தால் சோம்பை நீரில் கொதிக்க வைத்து கொடுத்தால் குளிர் சுரம் கொஞ்சம் கொஞ்சமாக குறையும்.பசியைத் தூண்டபசியில்லாமல் அவதிப்படுபவர்கள் சோம்பை தனியாக மென்று சாப்பிட்டு வந்தால் நன்கு பசியெடுக்கும்.இப்போது தெரிகிறதா சோம்பின் மகத்துவம்.

தங்க 'புஷ்பம்' செம்பருத்தி


இயற்கையின் அரிய படைப்புகளில் இந்த பூக்கள்தான் எத்தனை அழகு... நறுமணம் கொண்ட இவை கண்களுக்கு விருந்தாக மட்டுமல்ல... மருந்தாகவும் பயன்படுகின்றன. கடந்த இதழில் மல்லிகையின் குணங்களை அறிந்துகொண்டோம். வீட்டின் முன்பும், தோட்டங்களிலும், பூங்காக்களிலும் அழகு சேர்க்கும் செம்பருத்திப் பூவின் மருத்துவக் குணங்களைப் பற்றி இந்த இதழில் அறிந்து கொள்வோம்.செம்பருத்திப் பூவை சீனாவும் இந்தியாவும் தங்கள் நாட்டு பூ என வருணிக்கின்றன. ஆசியாவே இதன் பிறப்பிடம். மலேசியாவின் தேசிய மலர் செம்பருத்திதான். இந்தப் பூக்களின் நிறத்தையும், அடுக்கையும் வைத்து பலவகைகளாக பிரித்துள்ளனர்.சித்தர்கள் செம்பருத்தியை தங்க பஸ்பத்திற்கு ஈடாக கூறுகின்றன. இதனால் இதை தங்க புஷ்பம் என்று அழைக்கின்றனர்.இதனை செம்பரத்தை, சப்பாத்து எனவும் அழைக்கின்றனர்.Tamil : SembaruthiEnglish : Shoe flowerTelugu : JavapushpamuSanskrit : JapaMalayalam : Chemparutti-povaBotanical name : Hibiscus rosa-sinensisசெம்பரத்தை மேகவெட்டை தீராப் பிரமியொடுவம்பிரத்த வெள்ளை வழுவழுப்பும்-வெம்பும்பெரும்பாடு ரத்தபித்த பேதம் அகற்றும்கரும்பா மொழிமயிலே காண்- அகத்தியர் குணபாடம்செம்பருத்திப் பூ அதிக மருத்துவக் குணங்களைக் கொண்டது. இவற்றின் இலை, பூ, வேர் என அனைத்தும் மருத்துவத் தன்மையுள்ளவை.வயிற்றுப்புண், வாய்ப்புண் நீங்கஅஜீரணக் கோளாறால் வயிற்றில் வாய்வுக்கள் சீற்றமடைந்து வயிற்றின் உட்புறச் சுவர்களைத் தாக்குகின்றன. இதனால் வாயிலும் புண்கள் உருவாகின்றன. இப்படி வயிற்றுப்புண், வாய்ப்புண்ணால் பாதிக்கப் பட்டவர்கள் தினசரி 5 அல்லது 10 பூக்களின் இதழ்களை சாப்பிட்டு வந்தால் புண்கள் குணமாகும்.பெண்களுக்குகருப்பை பாதிப்பினால் கருவுறாமல் இருப்பவர்களுக்கும், வயது அதிகம் ஆகியும் ருதுவாகாமல் இருக்கும் பெண்களுக்கும் செம்பருத்திப்பூ சிறந்த மருந்து.10 செம்பருத்திப் பூவின் இதழ்களை அரைத்து மோரில் கலந்து தினமும்கொடுத்துவந்தால் வெகுவிரைவில் கருப்பையில் உள்ள நோய்கள் குணமாகும். பூப்பெய்தாத பெண்களும் பூப்பெய்துவார்கள்.இருதய நோயாளிகள் செம்பருத்திப் பூ இதழ், வெள்ளைத் தாமரையின் இதழ் எடுத்து கஷாயம் செய்து பாலில் கலந்து அருந்தி வந்தால் இரத்தக் குழாயில் உள்ள அடைப்பு நீங்கி இருதய நோய் குணமாகும்.சிலருக்கு மாதவிலக்குக் காலங்களில் அடிவயிற்றில் அதிக வலி உண்டாகும். மேலும் அதிக இரத்தப்போக்கு உள்ளவர்களுக்கு மயக்கம், தலைவலி ஏற்படும். இவர்கள் செம்பருத்திப் பூவை நிழலில் உலர்த்தி பொடி செய்து கசாயமாக காய்ச்சி அருந்தி வந்தால் மாதவிலக்குக் காலங்களில் ஏற்படும் உபாதைகள் குறையும்.சில பெண்கள் வெள்ளைப் படுதலால் அதிக மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். இந்த வெள்ளைப் படுதல் குணமாக செம்பருத்தியின் இதழ்களை கசாயம் செய்து அருந்தி வந்தால் வெள்ளைப்படுதல் குணமாகும்.தலைமுடி நீண்டு வளரசிலருடைய தலையில் பொடுகு, பேன், ஈறு தொல்லைகள் அதிகமாக இருக்கும். இவர்கள் எவ்வளவுதான் மருந்துகள், ஷாம்புகள் உபயோகித்துப் பார்த்தாலும் அவர்கள் முழுமையாக இந்த தொல்லையிலிருந்து விடுபடமுடிவதில்லை.இதற்கு அருமையான மருந்து செம்பருத்திதான். செம்பருத்தி பூவின் இதழ்களை அரைத்து தலையில் தேய்த்து குளித்து வந்தால் பேன், பொடுகு நீங்கும்.செம்பருத்தி இதழ்களை நிழலில் உலர்த்தி எடுத்து வெந்தயப்பொடி, கறிவேப்பிலைபொடி கலந்து எண்ணெயில் கொதிக்க வைத்து எடுத்து பாட்டிலில் அடைத்து வைத்து தினமும் தலைக்குத் தேய்த்து குளித்து வந்தால் தலைமுடி உதிர்தல் நீங்கி, முடி நன்கு வளரும்.செம்பருத்திப் பூவை காயவைத்து பொடி செய்து காபி, டீ போல காலை மாலை கசாயம் செய்து அருந்தி வந்தால் இரத்தம் தூய்மையடையும், உடல் பளபளப்பாகும்.நீர் சுருக்கு நீங்கநீர் சுருக்கைப் போக்கி சிறுநீரைப் பெருக்கி உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுவதற்கு செம்பருத்திப் பூவின் கஷாயம் மருந்தாகிறது

பழங்கள் : உலர்ந்த திராட்சை


திராட்சை நினைக்கும்போதே இனிக்கும் பழங்களில் ஒன்று. இவற்றில் கறுப்பு திராட்சை, பச்சை திராட்சை, பன்னீர் திராட்சை, காஷ்மீர் திராட்சை, ஆங்கூர் திராட்சை, காபூல் திராட்சை, விதையில்லா திராட்சை என பல வகையுண்டு.இந்த பழங்களை உலரவைத்து எடுக்கப்படும் உலர்ந்த திராட்சையை கிசுமுசுப் பழம் என்பார்கள். ஆரம்ப காலத்தில் அயல்நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு வந்ததால் இதற்கு கிசுமுசுப் பழம் என பெயரிட்டனர்.பொதுவாக இந்தப் பழத்தை கேக், பாயசம், பிஸ்கட் என்று பலகார வகைகளுக்கு பயன்படுத்தி வருகின்றனர்.இதில் வைட்டமின் ‘பி’ மற்றும் சுண்ணாம்புச் சத்து அதிகம் நிறைந்துள்ளது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் உகந்ததுதான் இந்த உலர்ந்த திராட்சை. இந்தப் பழம் அதிக மருத்துவக் குணங்களைக் கொண்டது.
குழந்தைகள் வளர்ச்சிக்கு
வளரும் குழந்தைகளுக்கு ஏற்றபழம் இது. எலும்புகள் நன்றாக உறுதியாக வளரவும், பற்கள் வலுப்பெறவும் மற்றும் உடல் வளர்ச்சிக்கும் தேவையான சத்து கால்சியம்தான். கால்சியம் அதாவது சுண்ணாம்புச் சத்து இந்தப் பழத்தில் அதிகம் நிறைந்துள்ளது. இந்தப் பழத்தை இரவு உணவுக்குப் பிறகு 10 பழங்கள் வீதம் எடுத்து பாலில் போட்டு காய்ச்சி பாலையும் பழத்தையும் சாப்பிட்டு வந்தால் குழந்தைகள் ஆரோக்கியமாகவும், பலமாகவும் இருப்பார்கள்.
இரத்த விருத்திக்கு
எலும்பு மஞ்ஜைகளிலிருந்து இரத்தம் ஊறுவதற்கு காய்ந்த திராட்சை மிகவும் உதவுகிறது. இந்தப் பழத்தை எடுத்து வாயில் போட்டு கொஞ்சம் கொஞ்சமாக சாறு இறக்கினால் எலும்பு மஞ்ஜைகள் பலமடைந்து இரத்தம் அதிகம் சுரக்கும். மேலும் இரத்தத்தை சுத்தப்படுத்தி உடலுக்கு புத்துணர்வைக் கொடுக்கும்.
உடல் வலி குணமாக
பெருஞ்சீரகத்தோடு இப்பழத்தை சேர்த்து கசாயம் செய்து அருந்தி வந்தால் உடல் வலி அனைத்தும் தீரும். இந்தப் பழத்தை அவ்வப்போது ஒன்று இரண்டு சாப்பிட்டு வருதல் நல்லது.
கர்ப்பிணிப் பெண்களுக்கு
கருவில் வளரும் குழந்தைக்குத் தேவையான அனைத்து சத்துக்களும் தாயின் மூலம்தான் கிடைக்கும். தாயின் ஆரோக்கியமே முதலில் முக்கியம். அதனால் கர்ப்பிணிப் பெண்கள் உலர்ந்த திராட்சையை பாலில் கலந்து கொதிக்க வைத்து பருகி வந்தால் பிறக்கும் குழந்தை குறையில்லாமல் ஆரோக்கியமாக பிறக்கும்.
பெண்களுக்குமாதவிலக்குக் காலங்களில் சில பெண்களுக்கு வயிற்றில் வலி இருந்துகொண்டே இருக்கும். இந்த பிரச்சனை தீர கைகொடுக்கும் மருந்தாக உலர்ந்த திராட்சை பயன்படுகிறது. இந்தப் பழத்தை நீரில் போட்டு காய்ச்சி, கசாயமாக செய்து சாப்பிட்டால் வலி மறைந்து போகும்.மலச்சிக்கல் தீரமலச்சிக்கலே நோய் வருவதற்கான அறிகுறியாகும். மலச்சிக்கலின்றி வாழ்ந்தால் நூறாண்டு நோயின்றி வாழலாம்.வயது முதிர்ந்தவர்களுக்கு மலச்சிக்கல் வருவது இயற்கையே. இவர்களின் உடலில் சீரண உறுப்புகள் வலுவிழந்து இருப்பதால் உணவுகள் எளிதில் சீரணம் ஆகாது. இவர்கள் மலமிளக்கி மருந்துகளைச் சாப்பிட்டாலும் இந்தப் பிரச்சனை தீராது. இதனால் மூட்டுவலி, இடுப்பு வலி, தலைவலி என பல உபாதைகள் உருவாகும்.இந்தப் பிரச்சனைக்கெல்லாம் அருமருந்தாக இருப்பது உலர்ந்த திராட்சைகளே.தினமும் படுக்கைக்குச் செல்லும்முன் பாலில் இந்தப் பழங்களைச் சேர்த்து காய்ச்சி அருந்திவந்தால் மலச்சிக்கல் தீரும்.குடல்புண் ஆறஅஜீரணக் கோளாறுகளால் குடலில் உள்ள வாய்வுக்கள் சீற்றம் ஏற்பட்டு குடல் சுவற்றை புண்ணாக்கி விடுகின்றன. இவர்கள் உலர்ந்த திராட்சைப் பழங்களை நீரில் கொதிக்கவைத்து கஷாயம் போல் செய்து அருந்தி வந்தால் குடல் புண்கள் குணமாகும்.இதயத் துடிப்பு சீராகசிலருக்கு இதயம் மிக வேகமாகத் துடிக்கும். இவர்கள் எப்போதும் ஒருவிதமான பதட்டத்துடனே காணப்படுவார்கள். இவர்கள் பாலில் இந்தப் பழங்களைப் போட்டு காய்ச்சி ஆறியபின் மறுபடியும் காய்ச்சி, பாலையும் பழத்தையும் சாப்பிட்டு வந்தால் இதயத் துடிப்பு சீராகும்.சுகமான நித்திரைக்குதினமும் படுக்கைக்குச் செல்வதற்கு அரைமணி நேரம் முன்பு பாலில் நான்கு அல்லது 5 காய்ந்த திராட்சையைப் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி பாலை அருந்தி வந்தால் சுகமான நித்திரை கிடைக்கும். தினமும் உலர்ந்த திராட்சையை சாப்பிட்டு நோயின்றி ஆரோக்கியமாக வாழ்வோம்

கண்களைக் காக்கும் பொன்னாங்கண்ணி


கீரைகள் அனைத்தும் நமக்கு கற்பகத் தருவாக விளங்குகின்றன.தினமும் உணவில் கீரையை சேர்த்து வந்தால் நோயில்லா பெரு வாழ்வு வாழலாம் என்று ஆன்றோர்களும் சான்றோர்களும் கூறியுள்ளனர்.எளிய விலையில் கிடைத்த கீரைகளை கௌரவம் பார்த்து வாங்கி சாப்பிடாமல் விட்டவர்கள் இன்று கீரைகளைத் தேடி கடைகளில் அலைகின்றனர்.கீரைகளைத் தவிர்த்து மேற்கத்திய உணவுகளை நாடுபவர்களின் இன்றைய நிலை, ஒருபுறம் நீரிழிவு, மறுபுறம் இரத்த அழுத்தம் என பலவாறு பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலை ஏற்படக் காரணம் அவர்களின் அறியாமையே...கீரைகளின் பயன்களை சித்தர்கள் பல நூல்களில் எழுதியுள்ளனர். உணவே மருந்து.. மருந்தே உணவு என்ற கோட்பாட்டின் கீழ் தினமும் உணவில் சேர்க்க வேண்டிய கீரைகளைப் பற்றி ஒவ்வொரு இதழிலும் அறிந்து வருகின்றோம். இம்மாதம் மேனியைப் பொன்னாக்கும் சிவப்புப் பொன்னாங்கண்ணி பற்றி தெரிந்துகொள்வோம்.இந்தக் கீரையை பொன்+ஆம்+ காண்+நீ என சித்தர்கள் கூறியுள்ளனர். உடலை தங்கம் போல் பொலிவாக்க இதுவே சிறந்த கீரையாகும்.இதற்கு அகத்தியர் கீரை, பொன்னாங்காணி, சீமை பொன்னாங்கண்ணி என பல பெயர்கள் உண்டு. இந்தியா முழுவதும் காணப்படும் இது படர்பூண்டு வகையைச் சார்ந்தது.சீமை பொன்னாங்கண்ணிதான் சிவப்பு பொன்னாங் கண்ணி என்று அழைக்கப்படுகிறது. வீட்டின் தோட்டத்தில் இதை வளர்க்கலாம். பூந்தொட்டியில் கூட வளர்க்கலாம். Tamil : PonnankanniEnglish : AlternantheraTelugu : Ponnanganti kuraSanskrit : GiogihraMalayalam : PonnankanniBotanical Name : Alternanthera Sessilis (Amaran theceae)இக்கீரையில் சுண்ணாம்புச் சத்து, இரும்புச் சத்து, தேகத்தை தங்க நிறமாக்கும் தங்கச்சத்து ஆகிய சத்துக்கள் நிரம்ப உள்ளன. வைட்டமின் சி அடங்கியுள்ளது.இரத்தத்தை சுத்தப்படுத்தஇன்று நாம் உண்ணும் உணவிலும் சுவாசிக்கும் காற்றிலும் இரசாயனம் கலந்திருப்பதால் அவை இரத்தத்தில் நேரடியாக கலந்துவிடுகின்றன. இதனால் இரத்தம் அசுத்தமடைகின்றது. பொன்னாங்கண்ணிக் கிரையை நன்றாக அலசி சிறிதாக நறுக்கி, அதனுடன் பாசிப்பருப்பு, சின்ன வெங்காயம், சீரகம், பூண்டு மிளகுத்தூள் சேர்த்து வேகவைத்து மசியல் செய்து சாப்பிட்டு வந்தால் அசுத்த இரத்தம் சுத்தமாகும். உடலுக்கு புத்துணர்ச்சியைத் தரும்.பித்தத்தைக் குறைக்கபித்த மாறுபாட்டால் உடலில் பல நோய்கள் தாக்குகின்றன. தலைவலி மஞ்சள் காமாலை, ஈரல் பாதிப்பு, கண் பார்வைக் கோளாறு உருவாகிறது. இதற்கு சிவப்பு பொன்னாங்கண்ணி சிறந்த மருந்தாகும். இந்த கீரையுடன் பூண்டு, மிளகு, சின்ன வெங்காயம் சேர்த்து சூப் செய்து உணவுக்குப் பின் அருந்தி வந்தால் பித்தம் குறையும்.கண்பார்வைக் கோளாறுகள் நீங்கஅதிக வெயிலில் அலைந்து வேலை செய்பவர்களுக்கும், கணினி முன் அதிக நேரம் அமர்ந்து வேலை செய்பவர்களுக்கும், சரியான தூக்கம் இல்லாதவர்களுக்கும் கண்கள் சிவந்து காணப்படும். கண்களில் எரிச்சல் இருந்துகொண்டே இருக்கும் .இவர்கள் பொன்னாங்கண்ணிக் கீரையை பொரியல் செய்து சாப்பிட்டு வந்தால் கண் பார்வைக் கோளாறுகள் நீங்கும். ஞாபக மறதி குணமாகசிலர் ஞாபக மறதி காரணமாக நிறைய இழப்பை சந்தித்திருப்பார்கள். ஞாபக மறதியை மனிதனை அழிக்கும் கொடிய வியாதிக்கு ஒப்பிடலாம். இவை நீங்கி நினைவாற்றல் அதிகரிக்க பொன்னாங்கண்ணி சூப் சிறந்த மருந்தாகும்.மூல நோய் குணமாககுடலில் அலர்ஜி உண்டாகி அவை மூலத்தை தாக்கி மூலநோய் ஏற்படும். இதற்கு சிலர் அறுவை சிகிச்சை கூட செய்துகொள்வார்கள். இந்த நிலை மாற பொன்னாங்கண்ணி கீரையுடன் பூண்டு, வெங்காயம் சேர்த்து வதக்கி அதனுடன் சீரகம் சிறிது சேர்த்து சாப்பிட்டு வந்தால் மூலநோய் படிப்படியாக குணமாகும். அப்போது புளி, காரத்தை தவிர்ப்பது நல்லது.தோல் வியாதிகள் குணமாகசொறி சிரங்கு போன்ற தோல் வியாதிகளுக்கு பொன்னாங்கண்ணி சிறந்த மருந்தாகிறது.பொன்னாங்கண்ணி தைலம்கூந்தல் வளர தினமும் பொன்னாங்கண்ணி தைலம் தேய்த்துக் குளித்து வந்தால் நல்லது. இதை வீட்டிலேயே தயாரிக்கலாம். பொன்னாங்கண்ணி இலையை நிழலில் உலர்த்தி காயவைத்தது - 20 கிராம், அருகம்புல் காய்ந்தது - 10 கிராம், செம்பருத்தி பூ காய்ந்தது - 10 கிராம் எடுத்து 1/2 லிட்டர் தேங்காய் எண்ணெயில் நன்கு காய்ச்சி பாட்டிலில் அடைத்து தினமும் உபயோகிக்கலாம்.பொன்னாங்கண்ணிக் கீரை வாய் துர்நாற்றத்தை நீக்கும். இதயமும் மூளையும் புத்துணர்வாக்கும். மேனியை பளபளக்கச் செய்யும்.இவ்வளவு பயன்கள் உள்ள இந்தக் கீரையை இனிமேலும் ஒதுக்காமல் பயன்படுத்தி ஆரோக்கியமாக வாழ்வோம்.

புதன், 17 டிசம்பர், 2008

வறட்டு இருமலால் அவதியா?

அடிக்கடி வறட்டு இருமலால் அவதிப்படுபவர்கள் அதை அலட்சியமாக விட்டுவிடக் கூடாது. இதற்கு எளிய பல மருத்துவங்கள் உள்ளன.மழைக்காலம் முடிவடைவதற்குள்ளாகவே தற்போது லேசாக பனி பொழியத் தொடங்கியுள்ளது. பனி காலத்தில் சிலருக்கு இருமல், மூக்கடைப்பு போன்ற தொல்லைகள் வரலாம். அதற்கு மருத்துவ நூல்களில் கொடுக்கப்பட்டுள்ள சில எளிதான நாட்டு வைத்தியக் குறிப்புகளைப் பார்ப்போம். வறட்டு இருமலுக்கு சிறிது தேன், ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் ஆகியவற்றை பாலில் கலந்து குடித்தால் குணமாகிவிடும். இரவில் உறங்கச் செல்லும் முன் பாலில் மஞ்சள்தூள், மிளகுத்தூள், பனங்கற்கண்டு ஆகியவற்றைக் கலந்து இரண்டு நாட்களுக்கு குடித்தால் இருமல் பறந்துவிடும். எலுமிச்சம் பழச்சாறு, தேன் ஆகியவற்றை கலந்து குடித்தால் வறட்டு இருமல் குணமாகும்.மூக்கடைப்பு இருக்குமானால், ஒரு துண்டு சுக்கை தோல் நீக்கி அரை லிட்டர் நீரில் போட்டு சுண்டக் காய்ச்சி, பால், சர்க்கரை சேர்த்துக் காலை, மாலை சாப்பிட்டு வந்தால் மூக்கடைப்பு விரைவில் நீங்கும்.தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து, பின்னர் வெதுவெதுப்புடன் மூக்கு மற்றும் தொண்டை, நெஞ்சுப் பகுதியில் தடவினால் மூக்கடைப்பு, சளித் தொல்லை சரியாகும்.இவற்றையில்லாம் மீறி இருமல் மூக்கடைப்பு இருந்தால், அதை அலட்சியப் படுத்தக் கூடாது. இதற்கு உரிய மருத்த்வரை சந்தித்து சிகிச்சை பெற வேண்டும்.

செவ்வாய், 16 டிசம்பர், 2008

நீ‌ரழிவை குணமாக்கும் நாவ‌ற்பழ‌ம்

பழ வகைகளில் மிக அதிகமான மருத்துவக் குணம் கொண்டது நாவற்பழம். இப்பழத்தில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, வைட்டமின் 'சி', 'பி' ஆகிய தாது உப்புகள், வைட்டமின்கள், புரதச்சத்துக்கள், மாவுச்சத்து ஆகியவை உள்ளன. இதன்மூலம் நாவற்பழம் நீரழிவை குணமாக்கும் அருமருந்தாகவும் திகழ்கிறது.நாவல் பழத்தின் விதைகளை நன்றாக காயவைத்து பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும். இதை 3 கிராம் வீதம் தண்ணீரில் கலந்து குடிக்கவும். தினந்தோறும் 3 அல்லது 4 முறை இதுபோன்று குடித்து வந்தால் நீரழிவு நோய் படிப்படியாக குறையும். நாவற்பழ மரத்தின் பட்டைகளை எரித்து, அதன் சாம்பலை தினமும் காலை வெறும் வயிற்றிலும், இரவு உணவுக்கு பின்னரும் தண்ணீரில் கலந்து குடித்து வந்தாலும் நீரிழிவு நோயை குணப்படுத்த முடியும். கல்லீரல் மற்றும் செரிமான உறுப்புகள் சீராக இயங்க நாவல் பழம் சாப்பிடலாம்.

மருத்துவ குணமுடைய பூண்டு

நம்மில் பலர் பூண்டு என்றால் உணவில் இருந்து எடுத்து ஓரங்கட்டி வைத்து விடுகிறோம். மருத்துவ குணங்கள் கொண்ட பூண்டு சாப்பிடுவது உடலுக்கு நல்லது. இயற்கை நமக்கு கொடுத்துள்ள பல்வேறு மருத்துவப் பயன்கள் கொண்ட தாவரங்களில் பூண்டு மிகவும் குறிப்பிடத்தக்கது. பூண்டு சாப்பிட்டால் நாற்றம் வீசும் என்பதற்காக சிலர் அதை ஒதுக்கித் தள்ளுகின்றனர். இது முற்றிலும் தவறானது. பூண்டின் மருத்துவ சக்தி அபரீதமானது. சளி, ஜலதோஷம், இருமல், தலை பாரம் போன்றவற்றுக்கு சிறந்த மருந்தாக அது திகழ்கிறது. நாக்கில் சுவையின்மை, பசி எடுக்காமை, வயிற்று உப்புசம், மலச் சிக்கல் போன்றவற்றுக்கும் இது சிறந்த நிவாரணி ஆகும். பூண்டு தினசரி சாப்பிடுவது இதயத்திற்கு நல்லது என்று ஆயுர்வேத மருத்துவத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. உடைந்த எலும்புகளைக் கூடச் சரி செய்யும் சக்தியும் அதற்கு உள்ளதாம். வெண் குஷ்டம், குடல் வாயு, சர்க்கரை வியாதி, மூலம், வாத நோய்களுக்கு பூண்டு சரியான மருந்தாகும். பூண்டின் மகத்துவத்துவம் அறிந்து அதை தினசரி உட்கொள்வது உடல் நலத்துக்கு மிகவும் பயனுள்ளதாகும்.

அஜீரணத்தை போக்கும் இஞ்சி

இயற்கை நமக்கு அளித்துள்ள மருத்து குணமுள்ள பொருள் இஞ்சி. இது அஜீரணத்தை போக்கி, உடல் புத்துணர்வுடன் இருக்க உதவுகிறது. சில வீடுகளில் காலையில் எழுந்ததும் டீ, காபி குடிப்பதற்கு பதில் இஞ்சிச் சாறு பருகுவதை பார்த்திருக்கலாம். பெரும்பாலான வீடுகளிலும், கடைகளிலும் இஞ்சி டீயை பலர் விரும்பி சாப்பிடுவதை அறிந்திருக்கலாம். இஞ்சியில் அத்தனை நல்ல மருத்துவ குணங்கள் உள்ளன. வயிற்றுக்குள் செல்லும் இஞ்சியானது பசியைத் தூண்டுவதுடன், தேவையற்ற கழிவுகளை வெளிக்கொணரவும் உதவுகிறது. உடலின் ஜீரண உறுப்புகள், சிறுகுடல், பெருங்குடல் உள்ளிட்டவை இஞ்சி சாறு மூலம் சுத்தப்படுத்தப்படுகிறது. பெரும்பாலான நோய்களுக்கு காரணமாக இருக்கும் மலச் சிக்கலை போக்கி உடலுக்கு புத்துணர்ச்சியை தருகிறது.அசைவ உணவு வகைகளில் அதிக கொழுப்புச் சத்து இருப்பதால், அது உடலில் தேவையற்ற சதையை ஏற்படுத்தும். ஆனால் இஞ்சி சாப்பிடுவதால் அவை ஜீரணமாகி உடலின் கொழுப்பை கரைக்க உதவுகிறது.

சிவராத்திரி


சிவன் மங்களன். சிவனை வழிபடுபவர்கள் மங்களங்களை அடைகிறார்கள். 'சிவ' என்ற சொல்லே மங்களத்தைக் குறிப்பது, சிவபூஜை எல்லா பூஜைகளிலும் தனித்தன்மையுடன் துவங்குவது, சிவபூஜை செய்பவர்களின் பாவமாகிய பஞ்சு மூட்டைகள் எரிந்த இடம் தெரியாமல் பறந்து, மறைந்து போகின்றன.
சிவனை மட்டும் வழிபடுபவர்களுக்கு இத்தகு மேன்மைகள் என்றால், அவனுடன் அன்னையையும் சேர்த்து வழிபடுபவர்கள் அடையும் நன்மைக்கோ அளவே இல்லை.
பூஜைகளில் சிறந்த பலனை நிறைந்தும், உடனேயும் தருவது ராத்ரீபூஜைகளே. இதனால்தான் ஷ'ராத்ரீ சூக்தம்' என்ற சூக்தமும் தனித்து விளங்குகிறது. 'பிராத சூக்தம்' என்று தனி சூக்தம் கிடையாது. ஒவ்வொரு தினத்திற்கும் ராத்திரி இருப்பது போல ஒவ்வொரு உயிருக்கும் ராத்திரி இருக்கிறது.
எல்லா ராத்திரிகளிலும் உயர்ந்தது சிவராத்திரியே. ராத்திரிகளில் வரும் நவராத்திரி பூஜையின் பூரண பலனை ஒரே ராத்திரியான சிவராத்திரி பூஜை வழங்கக் கூடியது. நவராத்திரி பூஜையில் அன்னைக்கு மட்டுமே சிறப்பு. சிவராத்திரி அன்னைக்கம் அப்பனுக்கும் உரியது. எனவேதான் சிவராத்திரி சிறந்ததாக விளங்குகிறது.
சிவனை மட்டுமே சிவராத்திரியில் வழிபடுபவர்கள் பாதிப் பலனையே அடைவார்கள். அன்னையையும் சேர்த்து வழிபடுவர்களே முழுப்பலனையும், மேன்மையையும் அடைவார்கள். சக்தியைத் தள்ளிச் சிவனை மட்டும் வழிபட நினைப்பது சிவத்துரோகமாகும்.
தூக்கம் என்பது மனிதனுக்குக் கிடைத்த சொர்க்கம். தூக்கம் இல்லாமல் போனால், துக்கம்தான் ஏற்படும். உடலும் உள்ளமும் உலர்ந்து போய், விரைவில் இறப்பை நோக்கி நடக்க வேண்டி வரும். உறங்கி எழுந்தவன் உழைக்கிறான். உறக்கம் கிட்டாதவன் அழுகிறான். உடலுக்கும் உள்ளத்திற்கும் ஓய்வு தந்து, மீண்டும் உழைக்க உயிர் தந்து காப்பது ராத்திரியே. இதைத் தந்து காத்தது சிவமும் சக்தியும்தான். எனவேதான், சிவனையும் தேவியையும் ராத்திரிகளில் வழிபடுகிறோம்.
இரவில் சாந்தியையும் ஒடுக்கத்தையும் தந்து காத்தவன் சிவன். அந்த ஒடுக்கத்தில் இருந்து மீண்டும் எழுந்து நடக்கச் செய்தவள் தாய். அன்னை அப்படிச் செய்யவில்லையென்றால் தூங்கியவன் தூங்கியவனே, எழுப்பினால் எதுவும் எழாது.எனவே சாந்தியும் ஒடுக்கமும் தந்த சிவத்திற்கு ஒரு ராத்திரியும், எழுந்து விழிப்புடன் தனது பழைய கர்ம மூட்டைகளைச் சுமந்து விரைவில் விடுதலை பெறச் செய்யும் அன்னைக்கு ஒன்பது ராத்திரிகளும் அமைத்த பெருமை நம் முன்னோடிகளான முனிவர்களைச் சார்ந்தது.
ஐந்து சிவராத்திரிகள்
ஐந்து நவராத்திரிகள், அதாவது ஆஷாட நவராத்திரி, சாரதா நவராத்திரி, மஹா நவராத்திரி, வசந்த நவராத்திரி, வன்ய நவராத்திரி இருப்பது போல சிவராத்திரிகளிலும் ஐந்து உண்டு.
நித்திய சிவராத்திரி, பக்ஷ சிவராத்திரி, பரிச சிவராத்திரி, யோக சிவராத்திரி, மஹா சிவராத்திரி என்பன அவை.
நித்திய சிவராத்திரி
ஒவ்வொரு சதுர்தசியிலும் சிவனை நான்கு காலங்களிலும் முறைப்படி பூஜை செய்ய வேண்டும். இப்படி ஒரு வருஷத்தில் இருபத்தி நான்கு சதுர்தசியில் இரவில் பூஜை செய்து வழிபடுவதற்கு நித்திய சிவராத்திரி என்று பெயர்.
பக்ஷ சிவராத்திரி
தை மாதம் தேய்பிறை பிரதமையன்று தொடங்கித் தொடர்ந்து பதின்மூன்று நாட்கள் இரவில் சிவபூஜை செய்ய வேண்டும். பின்னர் சதுர்த்தசியில் பூக்ஷையை நிறைக்க வேண்டும். நான்கு காலத்திற்குப் பதில், பக்ஷ சிவராத்திரியில் ஒரு காலம் பூஜை செய்தால் போதுமானது என்பது கொள்கை.
ரோகங்கள் விலகவும், உன்மத்த ரோக சமனம் ஏற்படவும், இது துணையாவது. இதை ரோகிகளுக்காக மற்றவர்கள் கூடச் செய்யலாம்.
மாத சிவராத்திரி
மாத சிவராத்திரி என்பது ஒவ்வொரு மாதமு வருவது. மாசி மாதத்தில் தேய்பிறை சதுர்தசி அம்மாதத்திய சிவராத்தியாகும். பங்குனி மாதத்தின் ஆரம்பத்தில் வரும் த்ருதியை அம்மாத சிவராத்திரி. சித்திரை மாதத்தில் தேய்பிறை எட்டாம் நாள் அம்மாத சிவராத்திரி. வைகாசி மாத முதல் அஷ்டமியும், ஆவணி மாதத்தில் வளர்பிறை அஷ்டமியும், அம்மாத சிவராத்திரிகளாகும். புரட்டாசி மாதத்தில் முதல் த்ரயோதசியும், ஐப்பசி மாதத்திய வளர்பிறை துவாதசியும் அம்மாதங்களின் சிவராத்திரிகளாகும். இதைப் போலவே கார்த்திகை மாதத்திய முதல் சப்தமி அஷ்டமியும், மார்கழியில் இரு பக்ஷ சதுர்தசிகளும் தை மாதத்தில் வளர்பிறை திருதியையும் மாத சிவராத்திரிகளாகும்.
மாத சிவராத்திரிகளில் பூஜை செய்பவர்களுக்கு மரண பயம் இல்லை. சிவலோகத்தையும், சிவசாயுஜ்யத்தையும் அடைவார்கள். மாத சிவராத்திரிகளில் சிவபூஜை செய்பவர்களுக்கு சுகவாழ்வும் பரத்தில் கைவல்யமும் கிட்டும்.
யோக சிவராத்திரி
திங்கட்கிழமையன்று அறுபது நாழிகையும் அமாவாசையாக இருந்தால் அந்த அமாவாசை யோகிகளுக்கு மிகவும் உயர்ந்தது. சித்தர்களுக்கு மிகவும் சிறந்தது. இது யோக சிவராத்திரி எனப்படும்.
யோக சிவராத்திரியில் யோகியானவன் யோக பூஜை செய்ய வேண்டும். யோக சித்தியை இது வழங்கும். யோகியர் அல்லாத மற்றவர்கள் யோக சிவராத்திரியில் பூஜித்தால் ஆத்ம ஜோதியில் சிவத்தைத் தரிசனம் காண ஏதுவாகும்.
மஹா சிவராத்திரி
மாசி மாதம் கிருஷ்ணபக்ஷ சதுர்தசியன்று வருவது மஹா சிவராத்திரி மற்ற எல்லா சிவராத்திரிகளை விடவும் இதுவே சிறப்புடையது. பல்வேறு வகையான பெரிய நலன்களை இது வழங்குவது. மற்ற சிவராத்திரிகளில் பெறும் எல்லா பேற்றையும் இது ஒரு சேர வழங்குவதால் இது மஹாசிவராத்திரி என்று போற்றப்படுகிறது.
மஹா சிவராத்திரியில் நான்கு காலங்களிலும் இரவில் பூஜை செய்ய வேண்டும். சிவபஞ்சாயதனம் கைக்கொண்டவர்கள் இரவில் பூஜையைத் தரித்து நற்பலன் பெற வேண்டும்.
சிவராத்திரி என்ற சொல்லே மோக்ஷம் தருவது. சிவராத்திரியில் 'சிவபுராணம்' என்ற மாணிக்கவாசகர் அருளிய பாடல்கள் பாராயணம் செய்யச் சிறந்த தோத்திரமாகும். சிவராத்திரியில் மெளன விரதம் இருப்பது வாக்குவலிமையையும், மந்திர சித்தியையும் தரும். பஞ்சாக்ஷர யந்திரத்தைப் பூஜித்து, பஞ்சாக்ஷர ஜெபம் செய்து இந்த நாளில் சித்தி அடையலாம். மஹா ம்ருத்யுஞ்சய மந்திரத்தை ஒரு லட்சம் ஜெபம் செய்து பத்தாயிரம் ஹோமம் செய்தால் இந்த மந்திரம் பரிபூரண சித்தியாகும். இயலாதவர்கள் பஞ்சாக்ஷர சம்புடமாக ம்ருத்யுஞ்ஜய மந்திரத்தை ஜெபம் செய்யலாம்.
சிவ வசீகரண மந்திரத்தை ருத்திர பூமியில் இந்தப் புண்ணிய நாளில் ஜெபம் செய்து தேவதா வஸ்யம் முதல் பல லாபங்களை அடையலாம். குருவான சிவபெருமான் இதற்கு அருளுவார்.

பொருள்தனை கொடுக்கும் அரைக்காசு அம்மன்!


சென்னை வண்டலூர் மிருகக்காட்சிசாலைக்கு ஒட்டியப்படி உள்ளது திருப்போரூர், கேளம்பாக்கம் செல்லும் சாலை. வண்டலூரிலிருந்து சுமார் 5 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது ரத்னமங்களம் என்கிற அழகிய சிற்றூர். இத்திருத்தலத்தில் அமைந்துள்ளது ஸ்ரீ லட்சுமி குபேரர் கோயில். இக்கோயிலில் அருள்மிகு அரைகாசு அம்மனுக்கான சன்னதி ஒன்றும் உண்டு.
அரைகாசு அம்மன் என்றவுடனே நம் நினைவில் சட்டென்று வருவது புதுக்கோட்டை அருகே உள்ள திருகோகர்ணம் பிரகதாம்பாளே! இவரைத்தான் அரைக்காசு அம்மனாக பக்தர்கள் வழிபட்டு வருகிறார்கள்.
முன்பொரு காலத்தில் புதுக்கோட்டையை ஆண்ட ராஜாக்கள் தங்களின் நாணயங்களில் அம்மனின் உருவத்தை பதிவு செய்து வைத்திருப்பார்களாம். அப்படி பதிவு செய்த காசின் வடிவம் அரைவட்ட வடிவமாகும். இதன் காரணமாகவே புதுக்கோட்டை பிரகதாம்பாளை அரைக்காசு அம்மன் என்ற அழைக்க காரணமானார் என்று சொல்லப்படுகிறது.
ஏதாவது ஒரு பொருளை எங்கேயாவது வைத்துவிட்டு தேடும் பழக்கம் நம்மில் பலரிடம் இருப்பதை நாம் பார்த்திருக்கிறோம். வீடு முழுவதும் தேடியும் தொலைத்த பொருள் அகப்படாமல் போனால் சோர்ந்து போவதும் மனம் வருத்தம் அடைவதும் உண்டு. அப்படிப்பட்ட சமயங்களில் திருகோகர்ணம் பிரகதாம்பாள் என்ற அரைகாசு அம்மனை மனதில் நிறுத்தி உருகி வேண்டினால் தொலைந்த பொருள் திரும்ப கிடைக்கும் என்று ஐதீகமும் நம்பிக்கையும் பக்தர்களிடையே நிலவுகிறது. அம்மனை மனதில் நிறுத்தி வேண்டி பலன் அடைந்தவர்களும் ஏராளம்.
இந்நிலையில் புதுக்கோட்டை அரைக்காசு அம்மனுக்காக சென்னையில், ஸ்ரீ லட்சுமி குபேரர் கோயிலில் பீடம் ஒன்றினை கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அமைத்திருக்கிக்கின்றனர் ரத்னமங்கள மக்கள். குபேரர் கோயிலில் அரைகாசு அம்மனுக்கான பீடம் அமைந்திருப்பதற்கு ஒரு சுவையான கதையும் உண்டு.
கடந்த 2004ம் ஆண்டு ஜூலை மாதம் குபேரரின் திருக்கல்யாண உற்சவம் நடைப்பெற்றது. அன்று மகாலட்சுமி டாலர் பதித்த தங்க செயின் ஒன்று காணாமல் போனதையடுத்த ஊர் மக்கள் மிகுந்த கவலையில் ஆழ்ந்தனர். எங்கு தேடியும் செயின் கிடைக்கவில்லை. அப்போது இவ்வூரைச் சேர்ந்தவர்கள் புதுக்கோட்டை அரைக்காசு அம்மனை மனதில் நினைத்து பிரார்த்தனை செய்தனர். அவர்கள் பிரார்த்தனை செய்த சிறிது நேரத்திற்குள்ளாகவே காணாமல் போன நகை, கூட்டிய குப்பையில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அன்று அதே நேரத்தில் சிலை வடிவமைக்கும் ஸ்தபதியும் ஸ்ரீலட்சுமிகுபேரர் கோயிலுக்கு வர, இதனை தெய்வ அருளாகவே நினைத்து உடடினடியாக அரைக்காசு அம்மனுக்கான சிலை வடிவமைப்பு தொடங்கப்பட்டது. இரவு, பகலாக சிலை வடிவமைக்கப்பட்டு தண்ணீர், தான்யம், பொன், பொருள் வாசத்தில் வைக்கப்பட்டு கடந்த 2004ஆம் ஆண்டு ஜுலை மாதம் 17ம் தேதி அரைக்காசு அம்மனுக்கு முறைப்படி கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இதில் விசேஷம் என்னவென்றால் அரைக்காசு அம்மன் சிலையும், பீடத்தின் கட்டிடமும் வெறும் 13 நாட்களிலே கட்டிமுடிக்கப்பட்டதுதான் என்றும், இத்தனை வேகத்தில் வடிவமைத்ததற்கு அம்மனின் அருளே முக்கிய காரணம் என்று கோயில் நிர்வாகத்தினர் அம்மனின் அருளை சிலாகித்து கூறுகின்றனர்.
அரைக்காசு அம்மனின் சிறப்பு
ஞாபகமறதியாக எந்த பொருளை வைத்துவிட்டு தேடும் பொழுதும் தொலைந்து போன பொருட்கள் கிடைக்கவும் அரைக்காசு அம்மனை நினைத்து பிரார்த்தனை செய்துவிட்டு தேடினால் தொலைந்த பொருள் உடனடியாக கிடைக்கும். அப்படி பொருள் கிடைத்த உடன் அவரவர் வீட்டிலேயே வெல்லத்தை பிள்ளை஡ர் போல் பிடித்து வைத்து அதை அம்மனாக நினைத்து பிரார்த்தனையை நிறைவேற்றி கொள்ளலாம் என்பது சிறப்பு.
பிறகு பிள்ளையார் பிடித்த வெல்லத்தை பிரசாதமாக அனைவரும் உட்கொள்ளலாம். இதுமட்டுமல்ல, களவு போன பொருட்கள் கிடைக்கவும் கொடுத்த பணம் திரும்பி வராமல் போனாலும், தங்களுடைய சொத்து தங்கள் கைக்கு வரவும் அரைக்காசு அம்மனை நினைத்து வழிப்பட்டால் நிச்சயம் அவர்களது பிரார்த்தனை நிறைவேறும் என்ற நம்பிக்கையும் நிலவுகிறது. பிராத்தனை கைக்கூடினால் அரைக்காசு அம்மனுக்கு வெல்லத்தால் பொங்கல் இட்டு நிவேதினம் செலுத்தலாம்.
இத்திருக்கோயிலுக்கு செல்ல தாம்பரத்திலிருந்து 55 C, 55 K என்கிற இரு பேருந்துகள் செல்கிறது. இப்பேருந்தில் பயணித்து ரத்னமங்களம் பேருந்து நிலைய நிறுத்தத்திலோ அல்லது தாகூர் பொறியியல் கல்லூரி நிறுத்தத்திலோ இறங்கி இக்கோயிலுக்கு செல்லலாம்.
வருகிற 21ம் தேதி (மார்ச், 2008) பெளர்ணமி, வெள்ளிகிழமை மற்றும் பங்குனி உத்திரம் கூடிய நாளில் காலை 9 மணிக்கு இரத்னம சிகலம் அரைக்காசு விசேஷ பூச்சொரிதல் வைபவம் நடைபெறவிருக்கிறது.
பக்தர்கள் யாரும் அன்று இத்திருக்கோயிலுக்கு வந்து அரைக்காசு அம்மனை தரிசித்து சென்றால் அவர்கள் நினைத்த காரியம் கைக்கூடும்

ஞாயிறு, 14 டிசம்பர், 2008

தீபம்

கார்த்த்கைத் தீபம் வரிசையாக சுடர் விட பார்க்கக் கண்கொள்ளாக் காட்சிதான் ,தீபத்திற்கு
எந்த எண்ணெய் விட்டால் என்ன பலன் என்பதை ஒரு அன்மீகப் புத்தகத்தில் முன்பு ப்டித்தேன் ,அதை உங்களுக்கும் சொல்கிறேன்
நெய் ,,,,,,சகலவிதமான செலவம் கணபதி மஹாலட்சுமிக்கு உகந்தது
நல்லெண்ணெய் ,,,,,,,எல்லா பீடைகளும் விலகும் …{நாரயணன்}
விளக்கெண்ணை புகழ் ப்ந்து சுகம் தாம்பத்திய சுகம்
கடலை எண்ணெய் ,,,,, ஏற்றுவதைத் தவிர்கவும்
தேங்காய் எண்ணெய் கண்பதிக்கு உகந்தது
இலுப்ப எண்ணெய் ருத்ராபதிக்கு உகந்தது
ஐந்து வித எண்ணெய் கலப்பு ,,நெய் வேப்பஎண்ணை விள்க்கெண்ணை ,தேங்காயெண்ணை
ஒரு மண்டலம் ஏற்ற தேவியின் அருள்
மூன்று வித எண்ணெய் ,,,,,வேப்பெண்ணை நெய் இலுப்பெண்ணை ,,,,,செலவம் குலதெய்வம்
திரி வகைகள்
பஞ்சு திரி ,,,மிகவும் நல்லது
தாமரைத் தண்டு பாவம் போக்கும் செல்வம் நிலைத்து நிற்கும்
வாழைத்தண்டு ,,,,,,,குழந்தைசெலவம் தெய்வக் குற்றம் நீங்கும்
வெள்ளை எருக்கன் பட்டை தீபம் ,,,, பெருத்த செலவம்
புது மஞ்சள் துண்டு திரி ,,,வியாதி குண்மாகும்
புது வெள்ளை வஸ்திரம் உத்தம பலன்
முகம் ஏற்றுவது ,,,,,,ஒருமுகம் ,,,,சுமார் பலன்
இரு முகம் குடும்ப ஒற்றுமை
மூன்று முகம் ,,,புத்திர சுகம்
நாலு முகம் பசு பூமி ,,,,பெருகும்
ஐந்து முகம் ஏற்ற செலவ வளம் ,,,,,,,,
தோஷங்கள் நிவிருத்தி ,,,,,,,,,ராகு தோஷம் 21 தீபம்
சர்ப்ப தோஷம் ,,48 தீபம்
கால சர்ப்ப தோஷம் 21 தீபம்
கள்த்திர தோஷம் 108 தீபம்
திருமணதோஷம் 21 தீபம்
புத்த்ர தோஷம் 51 தீபம்
நம்பினவர்களுக்கு நாராயணன் என்பார்கள் ,,,இதை செயவதில் குடும்பத்திற்கு நல்லது
என்பதால் செய்து பார்த்து பலன் பெறுக

நவக்கிரங்கள்

நவக்கிரகங்களும், வழிபாட்டுத் தலங்களும்
கிரகம்: சூரியன்ஸ்தலம்: சூரியனார் கோவில்நிறம்: சிவப்புதானியம்: கோதுமைவாகனம்: ஏழு குதிரை பூட்டிய தேர்மலர்: செந்தாமரைஉலோகம்: தாமிரம்நாள்: ஞாயிறுராசிகற்கள்: மாணிக்கம்பலன்கள்: காரிய சித்தி.சூரியனார் கோவில் தொடர்பு எண்: 0435 -2472349.
கிரகம்: சந்திரன்ஸ்தலம்: திங்களூர்நிறம்: வெள்ளைதானியம்: அரிசிவாகனம்: வெள்ளை குதிரைமலர்: வெள்ளரளிஉலோகம்: ஈயம்நாள்: திங்கள்ராசிகற்கள்: முத்துபலன்கள்: தடங்கல் நீங்கும், முன்னேற்றம் ஏற்படும்
.
கிரகம்: குருஸ்தலம்: ஆலங்குடிநிறம்: மஞ்சள்தானியம்: கொண்டை கடலைவாகனம்: அன்னம்மலர்: வெண்முல்லைஉலோகம்: பொன்நாள்: வியாழன்ராசிகற்கள்: புஷ்பராகம்பலன்கள்: சகல சம்பந்துக்கள், மற்றும் வித்தைகள் தேர்ச்சிகோவில் தொடர்பு எண்: 04374 -269407.
கிரகம்: ராகுஸ்தலம்: திருநாகேஸ்வரம்நிறம்: கரு நிறம்தானியம்: உளுந்துவாகனம்: ஆடுமலர்: மந்தாரைஉலோகம்: தாமிரம் மற்றும் கருங்கல்நாள்: ஞாயிறுராசிகற்கள்: கோமேதகம்பலன்கள்: எந்த காரியத்திலும் ஜெயம் அடைதல்கோவில் தொடர்பு எண்: 0435 - 2463354.
கிரகம்: புதன்ஸ்தலம்: திருவென்காடுநிறம்: பச்சைதானியம்: பச்சைபயிர்வாகனம்: குதிரைமலர்: வெண்காந்தல்உலோகம்: பித்தளைநாள்: புதன்ராசிகற்கள்: மகரந்தம்பலன்கள்: சகல சாஸ்திரம் மற்றும் ஞானம்கோவில் தொடர்பு எண்: 04364 - 256424.
கிரகம்: சுக்கிரன்ஸ்தலம்: கஞ்சனூர்நிறம்: வெள்ளைதானியம்: மொச்சைவாகனம்: கருடன்மலர்: வெண்தாமரைஉலோகம்: வெள்ளிநாள்: வெள்ளிராசிகற்கள்: வைரம்பலன்கள்: விவாகம் மற்றும் பிராப்தம் செளபாக்கியம் மலட்டுத்தன்மை நீங்கும்கோவில் தொடர்பு எண்: 0435 - 2473737
.
கிரகம்: கேதுஸ்தலம்: கீழ்பெரும் பள்ளம்நிறம்: பல நிறம்தானியம்: கொள்ளுவாகனம்: சிங்கம்மலர்: செவ்வள்ளிஉலோகம்: கருங்கல்நாள்: ஞாயிறுராசிகற்கள்: வைடூரியம்பலன்கள்: வறுமை, வியாதிகள் நீங்கும்.கோவில் தொடர்பு எண்: 04364 - 275222.
கிரகம்: சனிஸ்தலம்: திருநள்ளாறுநிறம்: கருப்புதானியம்: எள்வாகனம்: காகம்மலர்: கருங்குவளைஉலோகம்: இரும்புநாள்: சனிராசிகற்கள்: நீலம்பலன்கள்: வியாதிகள், பயம், மற்றும் தீராத கடன்கள் நீங்கும்கோவில் தொடர்பு எண்: 04368 - 236530.
கிரகம்: செவ்வாய்ஸ்தலம்: வைதீஸ்வரன் கோவில்நிறம்: சிவப்புதானியம்: துவரைவாகனம்: ஆட்டுக்கடாமலர்: செண்பகம்உலோகம்: செம்புநாள்: செவ்வாய்ராசிகற்கள்: பவழம்பலன்கள்: பகைவர்களை வெற்றி கொள்ளுதல், சகல சாஸ்திர ஞானம்கோவில் தொடர்பு எண்: 04364 - 279423.-வாழ்வது

ஒருமுறை வாழ்த்தட்டும் நம் தலைமுறை

பதினெட்டு சித்தர்கள்


சித்தர் என்ற சொல்லுக்கு சித்தி பெற்றவர் என்றும், சிந்தை உடையவர் என்றும் பொருள்.
சிவத்தை நினைத்து அகக்கண்ணால் கண்டு, தியானித்து தரிசனம் செய்து, ஆத்ம சக்தியை எழுப்பி, செயற்கரிய காரியங்களை செய்வது சித்த மூர்த்திகளது செயலாகும். இச் செயலை சித்து விளையாட்டு என்று ஆன்மீக ஞானிகள் கூறுவர்.
இன்று பல பிரசித்தி பெற்ற ஸ்தலங்களில் மூலவருக்கு அருகிலேயே சித்தர்கள் சன்னதி இருக்க காணலாம். சித்தர்கள் யோக சமாதி அடைந்த இடங்கள் மகிமை பெற்ற திருத்தலங்களாக விளங்குகின்றன.
அந்த சன்னதியில் மனதை ஒருமுகப்படுத்தி இறைவனிடம் வேண்டினால் நினைத்தது நடக்கும், செய்வது வெற்றி பெறும் என்பது ஆன்மீகவாதிகளின் அசைக்க முடியாத நம்பிக்கை.
இன்று பழனிமலையின் பிரபலமும், சக்தியும் உலகம் அறிந்த ஒன்றாகும். அந்த ஸ்தலத்தில் நவபாஷானத்தால் குமரன் வடிவேலனை உருவாக்கியவர் யோக சமாதியை விரும்பிய போகர் என்ற சித்தரே.
அதே போன்று இன்று உலக மக்கள் திருப்பதி மலை நோக்கி சென்று வருவதற்கும் அந்த ஸ்தலம் உலக பிரசித்தி பெற்றதற்கும் காரணம் அங்குள்ள கொங்கணவர் என்ற சித்தரே.
அப்படிப்பட்ட சித்தர்களில் 18 பேர் தலையாய சித்தர்கள் ஆவர்.
அருளும், அன்பும், சிவமும், அளவற்ற சக்தியையும் ஒருங்கே பெற்றுள்ள அந்த 18 சித்தர்கள் இன்றும் அருள் தரும் சன்னதிகளின் விவரம் இதோ
திருமூலர் - சிதம்பரம்
இராமதேவர் - அழகர்மலை
அகஸ்தியர் - திருவனந்தபுரம்
கொங்கணர் - திருப்பதி
கமலமுனி - திருவாரூர்
சட்டமுனி - திருவரங்கம்
கரூவூரார் - கரூர்
சுந்தரனார் - மதுரை
வான்மீகர் - எட்டிக்குடி
நந்திதேவர் - காசி
பாம்பாட்டி சித்தர் - சங்கரன்கோவில்
போகர் - பழனி
மச்சமுனி - திருப்பரங்குன்றம்
பதஞ்சலி - இராமேஸ்வரம்
தன்வந்திரி - வைதீஸ்வரன்கோவில்
கோரக்கர் - பொய்யூர்
குதம்பை சித்தர் - மாயவரம்
இடைக்காடர் - திருவண்ணாமலை
சக்தி மிகுந்த சித்தர்களை வணங்கி அருள் பெறுக. நலம் பெறுக

புதன், 10 டிசம்பர், 2008

அருணாச்சல மகிமை

அருணாசல அருள் வரலாறு : 'நம்மால் தான் உலகம் படைக்கப்பட்டது, நான் இல்லையேல் இந்த உலகமில்லை' என கர்வம் கொண்ட பிரம்மன், தன் தந்தை மாகவிஷ்ணுவிடம் போய், திருமாலே! 14 உலகங்களையும் ஏழு மேகங்களையும், ஏழு பருவங்களையும் மனதால் படைத்தேன். அசையும் பொருள், அசையாப் பொருள் அனைத்தையும் உண்டாக்கினேன். ஆகவே நானே கடவுள் என்பதையும், என் மகன்தான் பிரம்மன் என்பதையும் மறந்து விடு. நான் உலகத்தை படைக்காவிட்டால் நீ எப்படி காத்தல் தொழிலை செய்ய முடியும். யாவற்றையும் நான்தான் காத்து வருகிறேன் என்ற அகம்பாவத்தை ஒழித்துவிடு.
இல்லையெனில் உன் பதவியை நீக்கிவிட்டு மற்றொரு திருமாலை உருவாக்குவேன். பிருகு முனிவரின் சாபத்தால் பத்து முறை பூமியில் பிறந்தாய். உன்னை படைத்தல்லவே என் கைகள் கறுத்து விட்டன. உன்னிடத்தில் நான் பிறந்திருந்தாலும் உன்னை அழித்து விடக்கூடிய ஆற்றல் எனக்குண்டு என்றார். அதற்கு மகாவிஷ்ணு பிள்ளை செய்யும் தவறுகளை தந்தை பொறுத்து கொள்வதை போல் எண்ணி என்னிடம் பேசிவிட்டாய். சிவன் உன்னுடைய தலைகளில் ஒன்றை பறித்து எறிந்த காலத்தில் அதனை மீண்டும் கொள்ளும் ஆற்றல் உனக்கு இல்லை. அவ்வாறு இருக்கும்போது உன்னை எவ்வாறு தலைவன் என்று ஏற்றுக் கொள்ள முடியும்?
சோமுகாசுரன் உன்னிடம் இருந்த வேதங்களை பறித்து சென்றபோது, நான் மச்ச அவதாரம் எடுத்து அசுரனை கொன்று மீட்டு தந்தேன். மற்றும் பல அசுரர்களை கொன்ற எனக்கு உன்னை கொல்வது சுலபம் என்றார். இருவருக்கும் இடையில் யார் பெரியவன் என்ற பேச்சு பெரும் போராக மாறியது. அண்டகோடிகள் அனைத்தும் அதிர்ந்தன. தேவர்கள் அனைவரும் பயந்து சிவனை சரணடைந்தனர். சிவன் போர் புரிந்து வரும் இருவருக்கும் இடையில் பெரும் அக்னி மலையாக தோன்றினார். இந்த ஒளி மலையை பார்த்த திருமாலும், பிரம்மனும் அளவு கடந்துள்ள இந்த மலையின் அடியையும், முடியையும் யார் முதலில் காண்கின்றரோ அவரே பெரியவர் என முடிவு செய்தனர். அடி முடியை இருவரும் காண முடியாததால், தான் முதற் கடவுள் அல்ல என தெளிந்த திருமாலும், மாகவிஷ்ணும் சிவனை சரண் அடைந்தனர். சினம் தணிந்த சிவபெருமான் 'நாம் இத்தலத்தில் அருள்பாலித்ததால் இன்று முதல் இத்தலத்தை சுற்றிலும் மூன்று யோசனை தூரம் வரைக்கும் தூய்மையான புனித பூமியாக விளங்கும். அகண்ட ஒளி வடிவாயுள்ள மலை சிறிய உருவங்கொண்ட மலையாகும். இத்தலத்தை நினைப்பவர்களுக்கு பிறவி நோயை நீக்குவோம். இந்த மலையும், நகரமும் பிரளய காலத்திலும் அழிவின்றி நிற்கும். கார்த்திகை மாதத்தில் கிருத்திகை நட்சத்திரத்தில் மலையின் உச்சியில் ஓரொளி காண்பிப்போம். இவ்வொளியை கண்டு தொழுவோர் தம் இருபத்தொரு தலைமுறையில் உள்ளவர்களுக்கும் வீடு பேற்றினை அளிப்போம் என்றார். இம்மலை பிறப்பு, இறப்பினை நீக்க கூடியது. ஆதலால் மலைமருந்து என்றும் பெயர் பெறும். சிகப்பு நிறம் உடையதால் அருணாகிரி என்றும் பெயர் பெறும். இம்மலையின் பெயரினை ஒருமுறை சொல்லியவர் திரு ஐந்தெழுத்தை மூன்று கோடி முறை உச்சரித்தற்குரிய பயனை அடைவர் என சிவபெருமான் திருவாய் மலர்ந்தருளினார். இங்கு மலையே இலிங்க வடிவாக இருக்கிறது.

அருணாச்சல மகிமை

உலகெல்லாம் படைத்து காத்து அருள் செய்து வரும் சிவபெருமானின் கட்டளையை செலுத்தி கைலாயத்தில் காத்து வருபவர் திருநந்தி தேவர். அந்த திருக்கைலாயத்தில் உள்ள மண்டபத்தில் பதஞ்சலி மார்க்கண்டேய போன்ற முனிவர்களும், ரிஷிகளும் திருநந்தி தேவரை சூழ்ந்து அமர்ந்திருக்க, மார்க்கண்டேய முனிவர் எழுந்து, பெருமானே! நாங்கள் முக்திப்பேறு அடைதற்குரிய வழியினைக்கூற வேண்டும் என்றார். அதற்கு திருநந்தி தேவர் காவேரி, கோதாவரி, கிருஷ்ணவேணி, பம்பை நதி, சரயு நதி, கங்கா நதி, தாமிரபரணி, யமுனா நதி, நர்மதை நதி என இன்னும் பல ஆறுகள் உள்ளன. இந்த நதிகளில் நீராடுவோர் பாவம் விலகும். அது மட்டுமல்ல காசி, திருவாரூர், சிதம்பரம், விருத்தாசலம், திருக்கேதாரம், காஞ்சி, திருப்பருப்பதம், திருக்காளத்தி, சீர்காழி, திருவையாறு, திருவிடைமருதூர், கும்பகோணம், இரத்தினகிரி ஆகிய திருப்பதிகள் வேதங்களாலும் பாராட்டு பெற்றவை. மதுரை, இராமேஸ்வரம் ஆகிய பதிகள் பிறவி துயரை நீக்கவல்லது. யாரானாலும் அத்தகைய நகரங்களுக்குள்ளே பிறந்தாலும், உடலை விட்டு இறந்தாலும், போய் வணங்கினாலும், தூய்மையான நீரினால் முழுகினாலும், சிவபிரானுக்கு கோயில் கட்டினாலும் சிவப்பேற்றினை அடையலாம் என்றார். மார்க்கண்டேய முனிவர், அந்த நகரங்களில் மூழ்குவதும், அந் நகரங்களில் சென்று வழிபாடு செயவ்தும் எல்லோராலும் முடியாது அல்லவா? என எல்லோர்க்கும் எளிதான வழி ஒன்றை தாங்கள் கூறுதல் வேண்டும் என்று விண்ணப்பம் செய்தார்.
திருநந்திதேவர், நீங்கள் சொல்லியபடியே குருடர், முதியவர், விலங்கு, பறவை, புல், பூண்டு ஆகிய எல்லா உயிரினங்களும் எளிதில் சிவஞானம் அடைய கூடிய நகர் ஒன்றுண்டு. சிவஞானத்தை அளிக்க தக்க ஊர் ஒன்றிருக்கிறது. அதற்கு கவுரி நகர், தேகநகர், அண்ணாமலை, அண்ணாநாடு, அண்ணாவூர், அருணாசலம், சிவலோக நகர், வாயு நகர், அறிவு நகர், தூய்மை நகர், தென்கயிலாயம், சோணமலை, அருணாகிரி என பல பெயர் உண்டு என்றார். அண்ணாமலை இன்றைக்கு புதிதாக வந்ததன்று. இப்பூவுலகம் என்றைக்கு உண்டாயினவோ அன்றே உண்டானதாகும். அந்த நகரில் என்றும் அழியாத மலை உண்டு. அந்த மலையே அந்த நகரில் சிவலிங்கமாக இருக்கிறது. சித்தர்கள், முனிவர்கள், ஞானிகள் அனைவரும் அந்த மலையினைச் சிவலிங்கம் என கொண்டு, பாடிப்பரவி வழிபட்டனர். கிருத யுகத்தில் நெருப்பு மலையாகவும், திரேதாயுகத்தில் மாணிக்க மலையாகவும், துவாபர யுகத்தில் பொன்மலையாகவும், கலியுகத்தில் கல் மலையாகவும் திருவுருவம் கொண்டுள்ளது அண்ணாமலை. அண்ணாமலை என்பதற்கு பொருள் அண்ண முடியாத மலை என்பதாகும். கிருத யுகத்தில் நெருப்பு மலையாக இருந்த காரணத்தால். அண்ணுதல் என்றால் நெருங்குதல். சூரியன் ஒரு அண்ண முடியாத நெருப்பு. அருணம் + அச்சலம் என்ற இரண்டு வார்த்தை. அருணம் என்றால் நெருப்பு. அச்சலம் என்றால் மலை பொருள். இதனை அக்னி பர்வதம் என்று கூட சொல்வார்கள். இந்த அக்னி பர்வதமாகிய நெருப்பு மலை அருணாச்சலமாக காட்சியளிக்கிறது. இதனை மலை என்ற கோணத்தில் பார்க்க கூடாது. இது ஒரு கல் மலை அல்ல. அதாவது சிவனுடைய வடிவம் என்று புரிந்துக்கொண்டு இந்த மலையை தரிசனம் செய்ய வேண்டும். கோவிலுக்கு உள்ளே இருக்கும் சிவலிங்கம்தான் லிங்கம் என்று எண்ணிவிடக்கூடாது. இந்த மலையே சிவலிங்கம். தில்லையை தரிசிப்பவர்களுக்கும், காசியில் இறப்பவர்களும், திருவாரூரில் பிறப்பவர்களுக்கும் முக்தியுண்டாகும். நேரில் சென்று தில்லையை வணங்குவது எல்லோராலும் இயலாது. காசியில் இறப்பதும் எளிதன்று. திருவாரூரில் பிறப்பதும் நம்மால் ஆகக்கூடியதன்று ஆனால் அண்ணாமலையை எங்கிருந்தாலும் ஒரு முறை நினைத்தாலே முக்தி கிடைக்கும். அந்த ஊரில் உள்ள கற்கள் எல்லாம் சிவலிங்கங்கள். திருஅண்ணாமலை பேரூரினை சுற்றி 1008 லிங்கம் புதைந்திருப்பதாக சொல்லப்படுகிறது. ஆகையால், இன்றும் சிலர் காலில் காலணி அணியாதுதான்

திருவிளக்கின் அமைப்பு பற்றிய விளக்கம்

குத்துவிளக்கின் அடிப்பகுதியான பீடம் மலர்ந்த தாமரைப்பூப் போல் அகன்று வட்டமானதாக இருப்பதால் தாமரை மலர் மேலுறையும் பிரம்ம தேவனைக் குறிக்கும்.தண்டுப் பாகம் தூண் போன்று உயரமாக இருப்பதால் நெடுமாலாகிய விஷ்ணுவைக் குறிக்கும்.தண்டுக்கு மேலுள்ள எண்ணெய் வார்க்கும் அகல், கங்கையைச் சடையுள் வைத்து சிவனைக் குறிக்கும். திரி எரிவதற்குரிய மூக்குகள் ஐந்தும், ஐந்து முகமுடைய மகேஸ்வரனைக் குறிக்கும்.அகலின் மேல் அமைந்துள்ள கும்பக்கலசம் போன்ற உச்சிப்பகுதி சிவலிங்கம் போலிருப்பதால் சதாசிவனை குறிப்பதாக உள்ளது. ஆக ஐந்து தெய்வ வடிவங்களின் சின்னமாக அமையும் பெருமையுடையது திருவிளக்கு.திருவிளக்கின் சுடரை சிவ ஜோதியாகவே கருதி திருவைந்தெழுந்து முதலிய மந்திரங்களை ஓதி வழிப்பட்டு வந்தால் ’விளக்கிட்டார்க்கு மெய்நெறி விளக்குவாய் போற்றி’ என்ற சொல்லின் உண்மை புலப்படும்.

செவ்வாய், 9 டிசம்பர், 2008

ஞானக் கதைகள்

கடவுள் எப்படியிருப்பார் என்று நச்சரித்த தன்னுடைய எட்டு வயதுக் குழந்தைக்குத் தாய் ஒருத்தி, ஒரு நாள் பெருங்கூட்டம ஒன்றிற்கு உரை நிகழ்த்த வந்திருந்தஸ்வாமி விவேகானந்தரைக் காட்டி - இவர்தான் கடவுள் என்று சொல்லி வைத்தாள்.அதுவும் நம்பிவிட்டது!அதோடு நில்லாமல் தன் குழந்தைக்குப் பயபக்தி உணர்வு மேலிட வேண்டுமென்பதற்காகத் தினமும் இருவேளைகள் தங்கள் வீட்டுப் பூஜை அறையில் இருந்த விவேகானந்தரின் படத்திற்குப் பூக்களை அர்ச்சித்துக் கும்பிடவும் வைப்பாள்தன் குழந்தை சாப்பிட, படுக்க என்று முரண்டு பிடிக்கும் போதெல்லாம் இதோபார்கடவுள் பார்த்துத்துக் கொண்டிருக்கிறார், அவர் கோபப் படுவாரா இல்லையா?உன்னால் அவர் நம் வீட்டைவிட்டுப் போய் விட்டால் என்ன செய்வது என்று சொல்லிஅதை வழிக்குக் கொண்டு வருவாள்.குழந்தையும் நெறியோடு வளர்ந்தது. விவேகானந்தரின் தயவால் அன்னை சொல்லியவற்றையெல்லாம் கேட்டது - ஒன்றே ஒன்றைத் தவிர. அதாவது தினமும் ஏகப்பட்டமிட்டாய்கள், இனிப்புகள் தின்பதைத் தவிர!ஒருநாள் விவேகானந்தரின் ஆசிரமத்திற்கு சென்றிருந்த அந்தத்தாய், குழந்தையைத்தன் கணவரிடம் விட்டுவிட்டு, அவள் மட்டும் ஸ்வாமிஜீயைப் பார்த்து தன் குழந்தையைப்பற்றிச்சொல்லி அவனுக்கு நீங்கள்தான் கடவுள். ஆகவே நீங்கள் சொன்னால் நிச்சயம்கேட்பான். அவனுடைய பற்கள் கெடுவதற்கு முன்பு இந்த மிட்டாய்களை அதிகமாகத் தின்னும் பழக்கத்தை நிறுத்திவிட விரும்புகிறேன்.நீங்கள் உதவி செய்ய வேண்டும்என்று கேட்டுக் கொண்டாள்அவரும் சற்று யோசித்தவர், சரி அம்மா, உன் குழந்தையை அடுத்தவாரம் மீண்டும்அழைத்து வா, நான் சொல்கிறேன் என்று சொல்லி அனுப்பிவிட்டார்.அந்த இளம் தாய் விடவில்லை. அடுத்த வாரமே ஸ்வாமிஜீ குறிப்பிட்டிருந்த தினத்தில்மீண்டும் ஒரு முறை தன்னுடைய குழந்தையுடன் அவரைச் சென்று பார்த்தாள்தன்னை விழுந்து வணங்கிய சிறுவனை, வாஞ்சையோடு தன் கைகளில் துக்கிய அவர்புன்னகையோடு அவனை உற்று நோக்கியபிறகு, "கண்ணா, நீ அதிகமாக மிட்டாய்கள்தின்பாய் போலிருக்கிறதே - உன் பற்கள் சொல்கின்றனவே! இனிமேல் மிட்டாய்திங்கக்கூடாது சரியா?" என்று சொன்னார்.குழந்தையும் பய பக்தியுடன் "சரி" என்றது!சற்று நேரம் அவருடன் பேசிய அந்தத்தாய், தன்னுடைய மகனை வெளியே நின்றுகொண்டிருந்த தன் தாயாரிடம் விட்டுவிட்டு மின்னல் வேகத்தில் மீண்டும் ஸ்வாமிஜி அவர்களிடம் வந்து, " ஸ்வாமிஜி, தாங்கள் சென்றமுறை நான் என் குழந்தையுடன்வந்திருந்தபோதே இதைச சொல்லியிருக்கலாமே! ஒருவாரம் கழித்து வரச் சொன்னதில்உள்ள தங்களுடைய அன்பான நோக்கத்தைத் தெரிந்து கொள்ளலாமா?" என்று கேட்டாள்.புன்னகைத்த விவேகானந்தர் சற்று மெல்லிய குரலில் சொன்னார்."தாயே சென்றவாரம் அந்தக் குழந்தைக்கு மிட்டாயைப் பற்றியும், இனிப்பைப்பற்றியும் அறிவுரை சொல்லும் தகுதி எனக்கு இல்லாமல் இருந்தது.ஏனென்றால் நானும்அவற்றை விரும்பிச் சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். அதனால் சொல்லவில்லை. இந்த ஒருவாரத்தில் அதை நானும் நிறுத்தி விட்டேன். இனிமேல் நானும் அவற்றைச் சாப்பிடப்போவதில்லை. இப்போதுதான் எனக்கு அதற்குரிய தகுதி வந்திருக்கிறது. புரிந்துகொண்டாயா அம்மா?அந்தத் தாய் அசந்து விட்டாள்.இதல்லவா நெறிகளைக் கடைப்பிடிப்பதற்கும், போதிப்பதற்கும் உள்ள வழி.

குட்டிக்கதை: படைப்பின் ரகசியம்

ஆசிரமம் ஒன்று இருந்தது. ஆசிரமத்தில் குருவும், நான்கு சீடர்களும்வசித்து வந்தார்கள்.பக்கத்தில் உள்ள கிராமங்களுக்குச் சென்று மக்களை நல்வழிப்படுத்தும் வேலையை அந்த குரு செய்து கொண்டிருந்தார்.அவருடைய வழிகாட்டலால் அந்தக் கிராமத்து மக்கள் எந்தப் பிரச்சினையும்இன்றி அமைதியாக வாழ்ந்தனர்.ஆசிரமத்திற்கு வேண்டிய பொருட்களை அவர்கள் மனம் மகிழ்ந்து,போட்டி போட்டுக் கொண்டு கொடுத்து வந்தனர்.குரு தேவைக்கு மட்டுமே எடுத்துக்கொள்வார். அதனால் ஆசிரமமும்எந்தவித இன்னலும் இன்றி அமைதியாக இயங்கிக் கொண்டிருந்தது.குரு சீடர்களுக்கு வேத பாடங்கள், நல்வழிக் கதைகள், இறைவனைப்பற்றிய கதைகள் என்று தினமும் ஒரு மணி நேரம் பாடம் நடத்துவார்."படைப்பின் ரகசியம் என்ன?" என்று சீடர்களில் ஒருவன் கேட்டபோது,"அதை நீயே ஒருநாள் உணர்வாய்" என்றார் குரு.கேட்ட அந்த சீடன் ஒரு நாள், ஆசிரமத்தின் ஜன்னல் வழியே, வெளியேஇருக்கும் ஆள் அரவமற்ற பாதையையும், அதற்கு அருகில் உள்ளபெரிய ஆலமரத்தையும், அதன் அருகில் இருந்த கொன்றை மரத்தையும்அவற்றில் குடியிருக்கும் பறவைகளையும் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தான்.அப்போது அந்த இரண்டு மரங்களுக்கும் இடையில் இருந்த பெரியகரையான் புற்றில், மிகவும் நீளமான நாகப்பாம்பு ஒன்று விறு விறுவெனஏறி, புற்றுக்குள் நுழைந்தது.நுழைந்து மறைந்தும் விட்டது.அடுத்த நிமிடம், அந்தப் புற்றுக்குள் இருந்து ஆயிரக்கணக்கான கரையான்கள்வெளியேறி வந்து, வேறு திசையில் செல்ல ஆரம்பித்தன. எல்லாம் ஒருஅவசரகதியில் புற்றைக் காலி செய்து கொண்டிருந்தன.அதைக் கண்ட சீடன் பதறிவிட்டான். என்ன கொடுமை? இந்த சிற்றினங்கள்கட்டி வசித்து வந்த இடத்தை ஒரு பாம்பு ஒரு நொடியில் கை பற்றிக் கொண்டுவிட்டதே!இது அக்கிரமம் இல்லையா? கேட்க ஆள் இல்லையா?அப்போது தற்செயலாக குரு அங்கே வர, சீடன் நடந்ததைப் பதற்றத்துடன்சொன்னான்."குரு சீடனை சாந்தப் படுத்தியதோடு, "பொறுத்திருந்து பார்' என்று சொல்லிவிட்டுப் போய் விட்டார்.+++++++++++++++++++++++++++++அன்று மதியம் கனத்த மழை பெய்தது. அப்படியொரு அசுர மழை!அந்த மழையில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் சாலையின் எதிர்ப்புறம் இருந்தபள்ளமான பகுதிகள் தண்ணீரால் நிரம்ப ஆரம்பித்தன.புற்றிற்குள்ளும் வெள்ள நீர் புகுந்து புற்றும் நிரம்பி வழிய ஆரம்பித்தது.அப்போதுதான் அது நடந்தது.புற்றைவிட்டுத் தப்பி வெளியே வந்த நாகப் பாம்பு, நீரைக் கடந்து சாலைக்குவேகமாக நெளிந்து நெளிந்து வந்து சேர்ந்தது. ஈரமாக இருந்த சாலையைக்கடந்து எதிர்ப்புறம் உள்ள பகுதிக்குத் தப்பிவிட அது முனைந்தது.அப்போது அந்தப் பக்கம் வந்து கொண்டிருந்த கிராமத்து இளைஞன் ஒருவன்,பாம்பைக் கண்டு பதறாமல், தன் கையில் இருந்த கடப்பாரையால் பாம்பின்மீது இரண்டு போடு போட பாம்பு இறந்து மூன்று துண்டுகளாகியது.நீண்ட அந்தத் துண்டுகளைத் தன் கடப்பாரையின் உதவியால் தள்ளிக்கொண்டுசென்று எதிர்ப் புறம் இருந்த பகுதியில் தள்ளி விட்டு, சாலை சுத்தமாகிவிட்டதாஎன்று ஒரு பார்வை பார்த்து விட்டு, மீண்டும் அவன் செல்ல ஆரம்பித்துவிட்டான்.இவற்றை எல்லாம் ஜன்னல் வழியாக நின்று பார்த்துக்கொண்டிருந்த சீடனுக்குஒரு மன நிம்மதி ஏற்பட உள்ளே ஓடிச் சென்று, குருவை அழைத்து வந்துஇறந்து தூண்டுகளாகிக் கிடந்த பாம்பைக் காட்டிவிட்டு நடந்ததைச் சொன்னான்குரு ஒன்றும் சொல்லாமல், ஒரு புன்னகையை மட்டும் உதிர்த்துவிட்டு உள்ளேசென்றுவிட்டார்."அக்கிரமங்களையும், அக்கிரமக்காரர்களையும், இறைவன் பார்த்துக் கொள்வார்".என்று குரு அடிக்கடி சொல்லும் வாக்கியத்தின் பொருள் சீடனுக்கு இப்போதுதான்புரிந்தது.

கண்ணனின் உறைவிடம் எது?

யமுனை நதியில் வெள்ளம் கரை புரண்டு ஓடிக்கொண்டிருந்தது.அங்கே வந்த கோபிகைகள் ஆற்றைக் கடந்து செல்ல வகையறியாதுதிகைத்து நின்று கொண்டிருந்தனர்.எப்போதும் உள்ள பரிசல்காரனும் அப்போது இல்லை.அதுசமயம் தற்செயலாக வந்த வசிஷ்ட முனிவர் கோபிகைகள்கூட்டமாக நின்று கொண்டிருக்கும் இடத்திற்கு வந்ததும்அவர்களைப் பார்த்து அன்புடன் புன்னகை செய்தார்.அன்று அவர் தன்னுடைய மனம் கவர்ந்த கண்ண பெருமானுக்காகஉபவாசம் இருக்கின்ற தினம்.. கடும் உபவாசத்தால் சற்றுச் சோர்வுற்றிருந்தார்.அவரும் ஆற்றைக் கடந்து செல்ல வேண்டியவர்தான்.அது தெரிந்த கோபிகைகள் "ஸ்வாமீஜி, நீங்கள்தான் ஆற்றைக் கடந்துசெல்ல எங்களுக்கு உதவ வேண்டும்" என்றார்கள்."சரி," என்று சொன்ன அவர், கோபிகைகளின் கைகளில் இருந்தபானைகளைப் பார்த்தார்.உடனே, அவர்கள், "ஸ்வாமீஜி பால், தயிரெல்லாம் விற்றுப்போய் விட்டது.வெண்ணெய் மட்டும்தான் இருக்கிறது - வேண்டுமா?" என்று கேட்டார்கள்." கொடுங்கள்" என்று இவர் சொல்லவும், அவர்கள் ஆளாளுக்கு ஒவ்வொருபெரிய உருண்டையாக எடுத்து அவரிடம் நீட்டினார்கள்.அவரும் பொறுமையாக நீட்டப்பட்ட அவ்வளவு வெண்ணெயையும்வயிறு முட்ட, ஏப்பம் வருமளவிற்குச் சாப்பிட்டு முடித்தார்முடித்தவர், கரையைக் கடக்கும் முகமாக ஆற்றை நோக்கி நின்றவாறுகணீரென்று குரல் கொடுத்துச் சத்தமாக இப்படிச் சொன்னார்"யேய் மாயக் கண்ணா!, நான் உன் பக்தனென்பது உண்மையானால்,நீ என் நெஞ்சிற்குள் குடியிருப்பது உண்மையானால், நான் இன்றுஉபவாசம் இருப்பது உண்மையானால், இந்த வெள்ளத்தை நிறுத்திஎனக்கு ஆற்றைக் கடக்க வழிவிடு" என்றார்.என்ன ஆச்சரியம்!மின்னல் வேகத்தில் ஆற்றின் வெள்ளம் தனிந்தது. அதோடு மட்டுமா -ஆற்றின் நடுவே பத்தடிக்குப் பிளவு ஏற்பட்டு இருபக்க கரைகளையும்இணைக்கும் பாதை ஏற்பட்டது. பாதையில், மண் , சேறு எதுவுமின்றிநடந்து செல்லும் அளவிற்குச் சுத்தமாக இருந்தது.வசிஷ்டரின் கையசைவிற்குக் கட்டுப்பட்ட கோபிகைகள் பின்தொடர,வசிஷ்டர் உட்பட அனைவரும் மறுகரையை அடைந்தார்கள்.அனைவரின் பிரமிப்பும் அகலுமுன்பே, பிளவு ஒன்று சேர யமுனைஆறு மீண்டும் பழைய பிரவாகத்தோடு ஓடத்துவங்கியது.அததனை பெண்களும் அவர் காலில் விழுந்து வணங்கி விட்டுப்புறப்பட எத்தனித்தார்கள்.அவர்களில் ஒருத்தி மட்டும், குறுகுறுப்போடு வசிஷ்டரைப்பார்த்தவள், "ஸ்வாமீஜி, ஒரு சிறு சந்தேகம் உள்ளது -கேட்கலாமா?" என்றாள்.அவரும், "கேள் பெண்ணே!" என்றார்."எவ்வளவு பெரிய முனிவர் நீங்கள் - ஏன் பொய் சொன்னீர்கள்?""என்னம்மா, பொய் சொன்னேன்?""கண்ணா, நான் உபவாசம் இருப்பது உண்மையானால் என்றுசொன்னீர்களல்லவா - அது பொய்தானே?"" அது பொய்யல்ல, உண்மைதான்!""அப்படியென்றால் நாங்கள் கொடுத்த வெண்ணெய் உருண்டைகள்எல்லாம் எங்கே போயிற்று?""என்னம்மா, என் வயசென்ன? அவ்வளவு வெண்ணையையும்நான் எப்படிச் சாப்பிட்டிருக்க முடியும்? என் நெஞ்சிற்குள் குடியிருக்கும்அந்த மாயக் கண்ணன்தான் உங்கள் பானைகளை எட்டிப் பார்த்து,உங்களிடமிருந்து வெண்ணையை வாங்க வைத்தான்.உண்டதும் அவன்தான், வழிவிட்டதும் அவன்தான் - இப்போதுபுரிகிறதா?" என்றார்.அந்தப் பெண் இந்தப் பதிலால், திகைத்து ஒன்றும் சொல்லமுடியாமல் அவரை மீண்டுமொருமுறை விழுந்து வணங்கிவிட்டு, எழுந்து சென்று விட்டாள்.ஆமாம் வசிஷ்டரின் நெஞ்சில் கண்ணபிரான் குடிருந்தது உண்மை!அவர் நெஞ்சில் மட்டுமா, தன்னை நினைத்து உருகும் அததனை பக்தர்களின் நெஞ்சங்களுமே அந்த மாயக் கண்ணனின் உறைவிடம்தான்!!!

தங்கத் திருவோடு தந்த மனமாற்றம்!

துறவி ஒருவர் இருந்தார். முற்றும் துறந்தவர். நகருக்கு ஒதுக்குப்புரத்தில்ஒரு தோட்டம். தோட்டத்தின் நடுவில் தென்னங்கீற்றுக்களால் வேயப்பெற்றஒரு பெரிய கூரைக் கொட்டகை. அதுதான் அவருடைய வசிப்பிடம்.இரண்டு ஜோடி வேட்டி துண்டுகள். ஒரு திருவோடு. இவைதான் அவருடையசொத்து.காலையில் தோட்டத்தில் உள்ள கிணற்றடியில் காலைக்கடன்களை முடித்துவிட்டு வந்து தோட்டத்தின் முன்புறத்தில் உள்ள அரசமரத்தடியில் வந்துஅமர்ந்து விடுவார். பிறகு ஒரு மணி நேரம் தியானத்தில் ஈடுபடுவார்.அந்தப் பகுதி மக்கள் அவருக்கு அவ்வப்போது உணவைக் கொண்டு வந்துகொடுத்து விடுவார்கள். திருவோட்டில் வாங்கி வைத்துக் கொள்வார். பசிக்கும்போது மட்டும் சாப்பிடுவார்.தினந்தோறும் மாலை வேளைகளில் ஒரு மணி நேரம் வந்து காத்திருக்கும்பக்தர்களுக்கு உரை நிகழ்த்துவார். அவர்கள் சொல்லும் பிரச்சினைகளுக்குத்தீர்வு சொல்லுவார் அல்லது ஆறுதலாக நான்கு வார்த்தைகள் சொல்லுவார்.அவருக்கு உயிர்களிடத்தில் அலாதியான அன்பு. நாளடைவில் அவர் மிகவும்பிரபலமாகி மக்கள் கூட்டம் அதிகமாக வரத்துவங்கியது. அவரைப் பற்றியசெய்தி அந்நாட்டு மன்னனின் காதில் விழ, மன்னனே ஒரு நாள் அங்கு வந்துஅவரைப் பார்த்துவிட்டுப் போனான்.நாட்டின் பிரச்சினைகள் சிலவற்றை மன்னன் அவரிடம் சொல்ல, அவர்அவற்றிற்கும் தீர்வு சொன்னார். மன்னன் மனம் மகிழ்ந்து விட்டான்.இரண்டு நாட்கள் கழித்து, மன்னன் தன் பல்லக்கை அங்கே அனுப்பி அவரைஅரண்மணைக்கு அழைத்துவரச் செய்து உபசரித்தான். அவருடனேயேஅரண்மணையில் தங்கிவிடும்படி கேட்டுக் கொண்டான். துறவி மறுத்துவிட்டார்.அவர் மறுத்து விடுவார் என்று ஊகம் செய்து வைத்திருந்த மன்னன், அவர்விருப்பப்படி அவரைத் திரும்பிப் போகச்சொன்னதோடு, அவருக்குப் பரிசாகஇரண்டு கிலோ அளவு தங்கத்தில் செய்த திருவோடு ஒன்றையும் கொடுத்தனுப்பினான்.தங்கத் திருவோட்டைப் புன்னகையுடன் முதலில் பெற்றுக்கொள்ள மறுத்ததுறவியார், மன்னைன் வற்புறுத்தலுக்காகக் கையில் எடுத்துக் கொண்டு,தன் குடிலுக்குத் திரும்பினார்.+++++++++++++++++++++++++++++++++++++++++++++அன்று இரவு, நடு நிசி. துறவியார் அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்தார். மன்னன்கொடுத்த தங்கத் திருவோடு வசதியாக இருந்ததால், அதைக் குப்புறக் கவிழ்த்து,அதன் மேல் தலைவைத்துப் படுத்திருந்தார்.சுற்றுப்புறச்சுவர்களில் தப்பைகளால் அடிக்கப்பட்டிருந்த மூங்கில் ஜன்னல் வழியாகநிலவொளி வெளிச்சம் கீற்றாக உள்ளே விழுந்து கொண்டிருந்தது.மன்னர் துறவிக்குத் தங்கத்திருவோட்டைப் பரிசாகக் கொடுத்ததைப் பார்த்தசிப்பந்தி ஒருவன் அதைத் திருடிக்கொண்டுபோய்விடும் நோக்கத்துடன், அன்றுஇரவு துறவியின் குடிலுக்குள் நுழைந்து, இருட்டில் அதைத் தேட ஆரம்பித்தான்.ஒரு ஆளின் நடமாட்டம் குடிலுக்குள் இருப்பதை அறிந்த துறவி, விழித்துக்கொண்டு விட்டார்."யாரப்பா அது?" என்று வினவினார்.வந்தவன் பேசாமல் நின்றான்.துறவி மீண்டும் கேட்டார்,"என்ன தங்கத் திருவோட்டைத் தேடுகிறாயா?"அவன் மெல்லிய குரலில், "ஆமாம்!" என்றான்."இந்தா எடுத்துக்கொள்" என்று சொல்லித் தன் தலைக்கு அணைவாக வைத்துபடுத்திருந்த திருவோட்டைத் தூக்கி அவன் கையில் கொடுத்த துறவியார்,அடுத்த நொடியில் மீண்டும் படுத்துக் கொண்டு நித்திரையில் ஆழ்ந்து விட்டார்திகைத்துப்போன திருடன், சற்று நேரம் அங்கேயே நின்று கொண்டிருந்தான்அதோடு, துறவியார் தன்னை அடையாளம் கண்டு கொண்டிருப்பாரோ என்றுபயந்தான். மேலும் ஒரு நாழிகை அளவு குடிசைக்கு வெளியே காத்துக் கொண்டிருந்துவிட்டு, துறவியார் உண்மையிலேயே நித்திரையில் ஆழந்துவிட்டார், கூச்சலிட்டுயாரையும் வரவழைக்கமாட்டார் என்று தெரிந்தவுடன், நடையைக் கட்டினான்.++++++++++++++++++++++++++++++++++அடுத்த நாள் மாலை, துறவியாரின் குடிலுக்கு வந்த சிப்பாய், தங்கத் திருவோட்டைத்திருப்பிக் கொடுத்துவிட்டு, அவர் காலில் விழுந்து கதறி அழுதவன், சொன்னான்."சாமி, இந்தத் திருவோட்டைத்தூக்கிக் கொண்டு போனதில் இருந்து என் நிம்மதியும்போய்விட்டது. தூக்கமும் போய்விட்டது. அப்போதுதான் நினைத்துப் பார்த்தேன்இதை என்னிடம் எடுத்துக் கொடுத்த மறு நொடியிலேயே நீங்கள் மீண்டும்நித்திரையில் ஆழ்ந்துவிட்டீர்கள். எதன் மீதும் பற்றற்ற உங்கள் மனம்தான்அதற்குக் காரணம். நான் ஆசா பாசங்களை ஒழிப்பது என்று முடிவிற்கு வந்துவிட்டேன். உங்கள் திருவோடு இதோ இருக்கிறது. என்னை மன்னித்து அதை ஏற்றுக்கொள்ளுங்கள். என்னையும் உங்கள் சீடனாக ஏற்றுக் கொள்ளுங்கள். பற்று அற்றநிலையை எப்படி அடைவது என்ற பாடத்தை எனக்குப் போதித்து அருளுங்கள்!"(முற்றும்)

யாருக்கு அறிவுரை சொல்லக் கூடாது?

அது ஒரு வனாந்திரக்காடு. கார்த்திகை மாதம். அடை மழை அடித்து ஊற்றிக் கொண்டிருந்தது. மரம் செடி கொடி என்று எல்லாமே ஈரமாகியிருந்தது.பெரிய மரம் ஒன்றில், கூட்டில் இருந்த தூக்கனாங் குருவி ஒன்று வெளியே எட்டிப் பார்க்காமல், சேர்த்து வைத்திருந்த உணவைத் தின்று விட்டுக் கூட்டுக்குள்ளேயே பத்திரமாக இருந்தது.மழை சற்று நின்றது. மழையால் ஏற்பட்ட இரைச்சலும் காணாமற்போனது.நமது குருவியின் போதாத நேரம், கூட்டைவிட்டுத் தலையை மட்டும் வெளியே நீட்டிப் பார்த்தது.கூடு தொங்கிக் கொண்டிருந்த கிளைக்குக் கீழ் கிளையில் குரங்கு ஒன்று வெட வெடவென்று நடுங்கிய நிலையில் அமர்ந்திருந்தது. தொடர்ந்து பெய்த மழையாலும், ஜில்'லென்ற சீதோஷ்ண நிலையாலும், முழுக்க ஆறு மணி நேரத்திற்கு மேல் அடை மழையில் நனைந்திருந்ததாலும் அந்த நடுக்கம்!இரக்கம் கொண்ட குருவி, அந்தக் குரங்கைப் பார்த்துச் சொன்னது."அண்ணா! நீங்கள் என்னை விட நூறு மடங்கு வலிமையானவர். திறமையானவர்.இப்படி நடுங்கும் நிலை ஏற்படலாமா? நீங்களும் என்னைப்போல ஒரு கூடைக்கட்டிக் கொண்டு அதில் வாழ்ந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்? எவ்வளவுபாதுகாப்பாக இருக்கும்? நீங்கள் ஏன் அதை செய்யக்கூடாது?"குரங்கார் மேலே நிமிர்ந்து பார்த்தார். அவருக்குப் பயங்கரக் கோபம் வந்துவிட்டது?"நீ எனக்கு எப்படி அறுவுரை சொல்லலாம்? என்னை என்ன முட்டாள் என்றுநினைத்தாயா? உனக்கு ஒரு கூடு இருப்பதால் தானே இந்தத் திமிர்ப் பேச்சு?இப்போது என்ன செய்கிறேன் பார்!" என்று மேல் கிளைக்குத்தாவி, தொங்கிக்கொண்டிருந்த கூட்டைத் தன் பலம் கொண்ட மட்டும் ஆட்டிப் பிடிங்கித் தன்கைகளில் பற்றியது.அரண்டு போன குருவி கூட்டை விட்டுப் பறந்து பக்கத்தில் இருந்த மரத்தில்போய் அமர்ந்து கொண்டு, தன் கூட்டிற்கு எற்படும் நிலைமையைத் தன்கண்களால் பரிதாபமாகப் பார்த்தது.என்ன ஏற்பட்டிருக்கும்?குரங்கு கையில் கிடைத்த பூமாலை என்று கூறுவார்களே அந்த நிலைதான் கூட்டிகும் ஏற்பட்டது.கூடு சுக்கல் நூறாகி மரத்தின் கீழ் பகுதிகளில் சென்று விழுந்தது.தகாதவர்களுக்குச் செய்யும் அறிவரையின் முடிவு இப்படித்தான் ஆகும்